சாலை வசதி கேட்டு போராடிவர்கள் மீது வழக்குப்பதிவு மாவட்ட ஆட்சியரிடம் முறையிட மார்க்சிஸ்ட் கட்சி முடிவு
27 Mar 2026, 3:15 pm
<p><strong>சாலை வசதி கேட்டு போராடிவர்கள் மீது வழக்குப்பதிவு மாவட்ட ஆட்சியரிடம் முறையிட மார்க்சிஸ்ட் கட்சி முடிவு</strong></p>
<p>உதகை, மார்ச் 27- உதகை அருகே சாலை வசதி கேட்டு போராடிய பொதுமக்கள் மற்றும் மார்க் சிஸ்ட் கட்சியினர் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள செட்டிவயல் பகுதியில் அடிப் படை வசதியான சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக் கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், சாலை வசதி கேட்டு அமைதியான முறையில் போராட்டத் தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் மார்க் சிஸ்ட் கட்சியினர் மீது காவல் துறை யினர் பொய் வழக்குப்பதிவு செய்துள்ள னர். பல ஆண்டுகளாக சாலை வசதி யின்றி அவதிப்பட்டு வரும் மக்கள், தங்களின் அடிப்படை உரிமையை வலியுறுத்தி இந்த போராட்டத்தை முன் னெடுத்தனர். ஆனால், போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் குறிப் பாக, பெண்கள் மற்றும் முதியவர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டி ருப்பது மனித நேயமற்ற செயல். இந்த சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட செட்டி வயல் பகுதி மக்களை மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் வியாழ னன்று நேரில் சந்தித்து, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். இதில் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜி.வர்கீஷ், ராசி.ரவிக் குமார், ஏரியா கமிட்டி உறுப்பினர்கள் ஹசைன், கே.எம்.ஷாஜி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலை வர் பெரியார் மணிகண்டன், வாலிபர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ரஜிதா மணிகண்டன், செட்டிவயல் கிளைச் செயலாளர் ராஜகோபால் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத் தில், செட்டிவயல் மக்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பொய்யான வழக்கு களை சட்ட ரீதியாக எதிர்கொள்வது; சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி நிறைவு பெறும் வரை மக்களுடன் இணைந்து செயல்படுவது; மேலும், இப்பிரச்சனை குறித்து திங்களன்று (மார்ச் 30) மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.</p>
