மார்க்சிஸ்ட் கட்சியின் உறுதிமிக்க போராட்ட எதிரொலி சாலை அமைக்கும் பணியை துவங்கிய நெல்லியாளம் நகராட்சி
5 Mar 2026, 3:59 pm
<p><strong>மார்க்சிஸ்ட் கட்சியின் உறுதிமிக்க போராட்ட எதிரொலி சாலை அமைக்கும் பணியை துவங்கிய நெல்லியாளம் நகராட்சி</strong></p>
<p>உதகை, மார்ச் 5- சாலை வசதி இல்லாததால் நோய் வாய்ப்பட்டவர்களை தொட்டில் கட்டி தூக்கி வரும் அவலத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியினர் மற்றும் பழங்குடியின மக்கள் நடத்திய உறுதிமிக்க போராட்டத்தின் காரணமாக செட்டி வயல் பகுதியில் சாலை அமைக்கும் முதற்கட்ட பணிகள் வியாழனன்று துவங்கியது. நீலகிரி மாவட்டம், பந்தலூரை அடுத்த நெல்லியாளம் நகராட்சி, 5 ஆவது வார்டுக்குட்பட்ட செட்டிவயல் பகுதியில் பழங்குடியினர் உட்பட 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமாகவும், மண் சாலையாகவும் காணப்படுவதால், அவசர தேவைகளுக்கு ஆம்புலன்ஸ் மற்றும் வாகனங்கள் இப்பகுதிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் நோயாளிகளையும், கர்ப் பிணிகளையும் பல கிலோ மீட்டர் தூரம் உள்ள உப்பட்டியிலிருந்து பந்தலூர் செல்லும் சாலையில் இடதுபுறம் உள்ள பூ மரம் வரை தொட்டில் கட்டி சுமந்து செல்லும் நிலை இருந்து வருகிறது. இங்கு தார்ச்சாலை அமைக்க வேண் டும் என அப்பகுதி பொதுமக்கள் நக ராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத் தனர். ஆனால், எந்தவித நடவடிக்கை யும் எடுக்கப்படாததால், ஆவேசம டைந்த அப்பகுதி மக்கள் சில நாட்க ளுக்கு முன்பு மார்க்கிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைமையில் நெல்லி யாளம் நகர்மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, தார்ச் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப் படும் என அதிகாரிகள் உறுதியளித்த னர். ஆனால், இதற்கான பணிகளை முன்னெடுக்கவில்லை. இதனைய டுத்து கடந்த செவ்வாயன்று மார்க் கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும், ஊர் பொதுமக்களும் நகராட்சி அலுவலகம் முன்பு வாயில் கருப்புத்துணி கட்டி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். நெல்லியாளம் நகராட்சி எந்த உறுதி யும் அளிக்கப்படாத நிலையில், போராட் டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் அங்கேயே சமைத்து சாப்பிட்டு, போராட்டத்தை தொடர்ந்தனர். இதனையடுத்து புதனன்று காலை 11 மணிக்கு சாலை அமைக்கும் பணிகள் துவங்கப்படும் என அதிகாரிகள் உறுதி யளித்தனர். இதனையடுத்து போராட் டத்தை விலக்கிக்கொண்டனர். ஆனால், உறுதியளித்தபடி சாலை அமைக்கும் பணிகளை தொடராத நிலையில், மீண்டும் புதனன்று மதியம் நகராட்சியை முற்றுகையிட்டனர். இவர்களை பலவந்தப்படுத்தி போலீ சார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து இரவு விடு வித்தனர். ஆனால் போராட்டத்தில் ஈடு பட்டவர்கள் சாலை அமைக்காமல் இங் கிருந்து செல்ல மாட்டோம் என பந்தலூர் பேருந்து நிலைய வாயிலிலேயே ஐம் பதுக்கும் மேற்பட்டோர் உறங்கினர். மீண்டும் வியாழனன்று காலை நெல்லி யாளம் நகராட்சியை முற்றுகையிட்ட னர். மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் அப்பகுதி மக்களின் உறுதிமிக்க போராட்டத்தை கண்டு அச்சமுற்ற அதிகாரிகள் வியாழ னன்று செட்டிவயல் பகுதியில் சாலை அமைப்பதற்கான பூர்வாங்க பணி களை துவக்கினர். மார்க்சிஸ்ட் கட்சி யின் உறுதி மிக்க போராட்டத்தால் நீண்ட கால கோரிக்கைக்கு விடிவு பிறந்து விட்டதாக அப்பகுதியினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.</p>
