தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மார்க்சிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டம் வெற்றி சின்னமனூர் நகராட்சி எல்லைக்குள் 77 பட்டியலின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா உத்தமபாளையம் வட்டாட்சியரகத்தில் சிபிஎம் தலைவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது

30 Jan 2026, 5:56 pm
மார்க்சிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டம் வெற்றி  சின்னமனூர் நகராட்சி எல்லைக்குள்  77 பட்டியலின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா  உத்தமபாளையம் வட்டாட்சியரகத்தில் சிபிஎம் தலைவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது
<p><strong>மார்க்சிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டம் வெற்றி &nbsp;சின்னமனூர் நகராட்சி எல்லைக்குள் &nbsp;77 பட்டியலின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா &nbsp;உத்தமபாளையம் வட்டாட்சியரகத்தில் சிபிஎம் தலைவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது</strong></p> <p>அருமனை,ஜன. 30- கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பேரூராட்சி கூட்டத்திற்கு தொடர்ச்சியாக செயல் அலுவலர் வராத காரணத்தினால் கூட்டங்களை மாற்றி வைத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த மாதத்திற்கான கூட்டம் 30-ஆம் தேதி வெள்ளிக்கிழமை செயல் அலுவலர் &nbsp;ஒப்புதலுடன் அனை த்து கவுன்சிலர்களுக்கும் நோட்டீஸ் வழங் கப்பட்டது. மாலை 4 மணிக்கு நடைபெற விருந்த கூட்டத்திற்கு அனைத்து கவுன்சி லர்களும் தலைவரும் பேரூராட்சி அலுவல கத்தில் அமைந்துள்ள கூட்ட அரங்கத்தில் சென்று வெகு நேரம் காத்திருந்தனர்.ஆனால் &nbsp;பேரூராட்சி செயல் அலுவலர் வர வில்லை. இதைத் தொடர்ந்து பேரூராட்சி தலைவர் லெதிகா மேரி பேரூராட்சி செயல் அலுவலரை தொடர்புகொண்டு கேட்ட போது, தற்போது ஏடி அலுவலகத்தில் இருப்பதாக கூறியுள்ளார். &nbsp;செயல் அலுவலரால் பணிகள் முடக்கம்:மக்கள் அவதி இதைத்தொடர்ந்து பேரூராட்சி கவுன் சிலர்கள், தலைவர் தலைமையில் பேரூ ராட்சி அலுவலகத்துக்குள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பேரூராட்சி தலைவர் கூறுகையில, தொடர்ச்சியாக பேரூராட்சியில் செயல் அலுவலர் வராததால் பேரூராட்சி பணிகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன. அது போன்று அரசு திட்டங்களை மக்கள் மத்தி யில் கொண்டு செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே தற்போது இந்த பேரூராட்சியின் செயல் அலுவலர் திருவட்டார் பேரூராட்சியிலும் பொறுப்பு அலுவலராக செயல்பட்டு வருகிறார். தற்போது இவர் அருமனை பேரூராட்சி யில் எந்த வித அரசு திட்டங்களையும் செயல்படுத்தாமல் புறக்கணிக்கிறார். அது மட்டுமல்லாமல் பேரூராட்சி பகுதி மக்களுடைய அடிப்படைத் தேவைகளை யும் செயல்படுத்த முடியாமல் அன்றாட மக்கள் பேரூராட்சியில் பல மணி நேரம் காத்திருந்து புலம்பலுடன் திரும்பு கின்றார்கள். &nbsp;எனவே அருமனை பேரூராட்சி யில் நிரந்தரமாக செயல்படக்கூடிய செயல் அலுவலரை அரசு தலையிட்டு பணியில் அமர்த்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறோம் என கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.