வேலிக்குள் சிறைப்பட்ட பூர்வகுடிகளின் வாழ்வு
9 Jan 2026, 3:41 pm

வேலிக்குள் சிறைப்பட்ட பூர்வகுடிகளின் வாழ்வு ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் தவிக்கும் பழங்குடியினர்!

இயற்கை எழில் கொஞ்சும் நீல கிரி மலையின் மடியில், பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் பூர்வகுடி மக்களின் வாழ்வு, இன்று தனியார் தோட்ட நிர்வாகங்களின் பிடி யிலும், அதிகாரிகளின் பாராமுகத்தி லும் சிக்கித் தவிக்கிறது. சொந்த மண்ணிலேயே நடப்பதற்கு உரிமை இல்லையா?” என்ற ஆதங்கக் குரல் மலைகளில் எதிரொலித்துக் கொண்டி ருக்கிறது. மலை மாவட்டமான நீலகிரியில் எண்ணற்ற பூர்வகுடி (பழங்குடி) யின மக்கள் வசித்து வருகின்றனர். தங்களுக்கென்ற பழக்க வழக்கங்க ளுடன் வசித்து வரும் இம்மக்களுக்கு, அரசு சார்பில் பல்வேறு நலத்திட் டங்கள் அறிவித்தாலும், அவை முறை யாக செயல்படுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. குறிப் பாக, பழங்குடியின குடியிருப்புக ளுக்கு முறையான அடிப்படை வசதி கள் செய்து தரப்படுவதில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட் டும், போராட்டக்களத்திற்கே பொது மக்களை தள்ளுகின்றனர். மேலும், அரசின் திட்டங்களை மக்கள் பயன் படுத்துவதற்கு பிற சக்திகள் தடுத்து வருவது வன்மையான கண்டத்திற் குரியது. அதன்படி, குன்னூர் வட்டம், மேலூர் ஊராட்சிக்குட்பட்ட மூப்பர் காடு, பால்மரல்ஸ், ஊஞ்சலார் கொம்பை உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். நீண்ட காலமாக வசித்து வரும் இம்மக்கள் குடியிருப்பு களுக்கு, அடிப்படை வசதிகள் கேட்டு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரு கின்றனர். மேலும், பல்வேறு பிரச்ச னைகளையும் இம்மக்கள் சந்தித்து வருகின்றனர். அதன்படி. மூப்பர்காடு கிராமத்தில் வசிக்கும் மக்களை, அவர்களின் உறவினர்கள் மற்றும் வெளியாட்கள் சந்திக்கவும், கிரா மத்திற்குள் செல்லவும், வாகனங்கள் செல்லவும் வழியிலுள்ள தனியார் தோட்ட நிர்வாகங்கள் தடை ஏற்ப டுத்துகின்றனர். மேலும், இக்கிரா மத்தை சுற்றியுள்ள பிற பழங்குடியின கிராமங்களுக்கு சென்ற வர அரசு சார்பில் போடப்பட்ட சாலையை, பழங் குடியின மக்கள் பயன்படுத்துவதற்கு, சம்பந்தபட்ட தனியார் தோட்ட நிர்வா கம் அனுமதி மறுத்து – தடுத்து வரு கிறது. இப்பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க நிதி ஒதுக்கியும், தற்போது வரை அதற்கான பணிகள் துவங்கப்படாமலே உள்ளது. அதற்கு இடையூறாக இப்பகுதியிலுள்ள தனி யார் தோட்ட நிர்வாகம் இருந்து வருகி றது. பால்மரல்ஸ் கிராமத்திலுள்ள மக் களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும். இங்குள்ள குடிநீர் தொட்டி யிலுள்ள நீர் கசிவை சரி செய்து, நாள்தோறும் குடிநீர் வழங்க வேண் டும். ஊஞ்சலார் கொம்பை மக்கள் பயன்படுத்துவதற்கனா மயான வச தியை, கிராமத்தின் அருகாமையி லேயே அமைத்துத்தர வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி இப் பகுதி மக்கள் நீண்ட காலமாக போராடி வரும் நிலையில், அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதன்மூலம் தனியார் தோட்ட நிர்வா கங்களுக்கு அரசு அதிகாரிகள் துணை போகிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், பூர்வகுடி (பழங் குடி) யின மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் வியாழனன்று குன் னூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவ லகத்தில் முறையிட்டனர். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வினோத் தலைமையில், மாவட்டக் குழு உறுப்பினர்கள் இளங்கோவன், மனோஜ் மற்றும் ருக்குமணி, ஜீவா, சுப்பிரமணி, மணி உட்பட அப்பகுதி பழங்குடி மக்கள் கலந்து கொண்ட னர். பழங்குடி மக்களின் கோரிக்கை களை கேட்டறிந்த வருவாய் கோட்டாட் சியர், கிராமங்களுக்கு சென்று ஆய்வு செய்து, உரிய தலையீடு செய்வதாக உறுதியளித்துள்ளார். (ந.நி)