இருளில் மூழ்கியுள்ள அகல் விளக்கு தொழிலாளர்களின் வாழ்க்கை
3 Dec 2025, 2:59 pm
<p><strong>இருளில் மூழ்கியுள்ள அகல் விளக்கு தொழிலாளர்களின் வாழ்க்கை</strong></p>
<p>தமிழ்நாட்டின் தொன்மையான பாரம்பரியங்களில் ஒன்றான மண்பாண்டத் தொழில், தற்போது கடும் சவால்களை சந்தித்து, கவனிப்பாரற்று இருக்கும் ஒரு அவல நிலையில் உள்ளது. குறிப் பாக, ஒரு காலத்தில் இத்தொழி லுக்குப் பெயர் பெற்ற திருப்பூர் போன்ற மாவட்டங்களில், நகரமய மாக்கல் மற்றும் கடுமையான சுற்றுச்சூழல் விதிமுறைகள் கார ணமாக, இத்தொழிலாளர்களின் வாழ்க்கை இருளில் மூழ்கியுள் ளது. உற்பத்தி முடங்கி, விற்பனையாளர்களாக மாறிய அவலம் மண்பாண்டங்கள் மற்றும் அகல் விளக்குகளை தாங்களே உற்பத்தி செய்து வந்த தொழிலா ளர்கள், இன்று வெளியில் இருந்து பொருட்களை வாங்கி வந்து விற் கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள னர். தமிழ்நாட்டில் சுமார் ரூ.20 கோடி மதிப்பில் வணிகம் நடந்து வந்த இந்த தொழில், கடந்த சில ஆண்டுகளில் விற் பனை குறைவு, உற்பத்தி வசதிகள் இல்லாமை போன்ற பல சவால்க ளால் கடுமையாக நலிவடைந் துள்ளது. இதனால் தொழிலாளர்க ளின் எண்ணிக்கையும் வெகு வாகக் குறைந்து, பலர் வேறு தொழில்களுக்கு மாறத் தொடங்கி யுள்ளனர். இதுகுறித்து மண்பாண்டத் தொழிலாளி துரைசாமி கூறுகை யில், “முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, திருப்பூர் - தாராபுரம் சாலையில் 20-க்கும் மேற்பட்ட சூளைகள் இயங்கின. அப்போது நாங்கள் மண்பாண்டங்கள், அகல் விளக்குகள் ஆகியவற் றை உற்பத்தி செய்து விற்றோம். ஆனால், குடியிருப்புகள் பெருகிய தால், சூளைகளில் இருந்து வரும் புகை சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிப்பதாக புகார்கள் எழுந் தன. இதன் விளைவாக, சூளை கள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது, திருப்பூரில் விற் பனை செய்யப்படும் மண்பாண் டங்கள் அனைத்தும் திருவண்ணா மலை, தருமபுரி, விருதுநகர், பொள்ளாச்சி, கோபி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஊர்களில் இருந்துதான் வாங்கப்படுகின் றன. கார்த்திகை தீபம், பொங்கல், விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகை காலங்களில் மட் டுமே இத்தொழிலில் ஓரளவு வியா பாரம் நடக்கிறது. 80 பைசாவிற்கு வாங்கும் அகல் விளக்குகளை ரூ.1-க்கும், ரூ.1.20-க்கு வாங்கு வதை ரூ.1.50-க்கும், ரூ.1.60-க்கு வாங்குவதை ரூ.2-க்கும் விற்க வேண்டியுள்ளது. இதில் போக்கு வரத்துச் செலவும் அடங்கும். வருடத்தில் இந்த மூன்று பண்டி கைகளில் மட்டுமே பொதுமக்கள் அதிகளவில் பொருட்கள் வாங் கிச் செல்கின்றனர். மற்ற நாட்க ளில் விற்பனை சராசரியாக இருப்ப தால், கிடைக்கும் தற்காலிக வரு மானம் தொழிலாளர்களின் வாழ் வாதாரத்தைப் பராமரிக்கப் போது மானதாக இல்லை” என்றார். ஐந்து தலைமுறைகளாக இத் தொழிலில் ஈடுபட்டுள்ள சரஸ் வதி என்ற மற்றொரு தொழிலாளி, “என் மாமனார் இங்கே சூளை வைத்து மண்பாண்டங்கள் செய் தார். ஆனால் இப்போது இங்கே உற்பத்தி செய்ய எந்த வசதியும் இல்லை; ஆட்களும் இல்லை. அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து வாங்கிய விளக்குகளை கார்த்திகை தீபத்தன்று விற்கி றோம். இது எங்கள் குடும்பத்தில் இத்தொழிலின் இறுதி நாட்கள் தான். இனி யாரும் இதை தொடர மாட்டார்கள்,” என்று தனது ஆதங் கத்தைத் தெரிவிக்கிறார். கோரிக்கைகள் பொங்கல் பரிசுத் தொகுப்பில் மண்பானை, மண் அடுப்பு போன் றவற்றை சேர்த்து, அவற்றை அரசு நேரடியாக தொழிலாளர் களிடம் கொள்முதல் செய்து, நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டும். மண்பாண்ட உற்பத்தி பயிற்சிப் பள்ளிகளை நிறுவி, இத்தொழிலை தொடர அரசு கடன் உதவிகள் வழங்க வேண்டும். கைவினைக் கலை ஞர்களுக்கு சூளை அமைப்ப தற்கு தனியாக இடம் மற்றும் ஊக்கத் தொகைகள் வழங்கி இத் தொழிலை அரசு ஊக்குவிக்க வேண்டும் என்றே இந்த மண் பாண்ட தொழில் செய்து வரும் தொழிலாளர்கள் தெரிவித்தனர். நகரமயமாக்கல் மற்றும் சுற் றுச்சூழல் விதிமுறைகள் காரண மாக இத்தொழிலின் உற்பத்தி முடக்கப்பட்டிருந்தாலும், மாற்று வழிகள் மூலம் இத்தொழிலை புதுப்பிக்க அரசு உரிய தீர்வு காண வேண்டியது அவசியம். இல்லையெனில், தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளமான இந்த தொன்மையான மண்பாண் டத் தொழில், காலப்போக்கில் முற் றிலும் மறைந்துவிடும் அபாயம் உள்ளது என்பதே எதார்த்தம். - லிவின்</p>
