வாடகை வாகன உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!
7 Dec 2025, 3:52 pm
<p><strong>வாடகை வாகன உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!</strong></p>
<p>சபரிமலை யாத்திரைக்காகப் புறப்படும் பக்தர்கள், மினி பேருந்து கள், டிராவல்ஸ் வாகனங்கள், 50 பேர் வரை செல்லும் பேருந்துகள், சிறிய கார்கள் எனப் பல்வேறு வகை யான வாடகை வாகனங்களை அமர்த்தி, மூன்று முதல் நான்கு நாட் கள் வரை திருச்செந்தூர், கன்னியா குமரி, ராமேஸ்வரம், திருப்பரங் குன்றம், பழனி உள்ளிட்ட பல்வேறு புண்ணிய ஸ்தலங்களுக்கும் சென்று திரும்புவது வழக்கம். இதன்படி, ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் முதல் வாடகை வாகனங்களின் பயன்பாடு அதிக ரித்து, இத்தொழில் சிறக்கும். அண்மைக்காலமாக சொந்தப் பயன்பாட்டு வாகனங்களின் எண் ணிக்கை அதிகரிப்பும், அவற்றை முறையற்ற வகையில் வாடகைக் குப் பயன்படுத்துவதும் தங்களுக்கு வேலையின்மையைத் தருவதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்ற னர். இதுகுறித்து நாமக்கல்லைச் சேர்ந்த வாடகை வாகன ஓட்டிகள் கூறுகையில், “ஒவ்வொரு வருட மும் கோடைக்காலத்திலும் (ஏப்ரல், மே, ஜூன்), தீபாவளிப் பண்டிகைச் சமயத்திலும், அதன்பின்னர் சபரி மலை சீசனிலும்தான் எங்களுக்குப் போதுமான வேலைகள் இருக்கும். ஆனால், கடந்த சில ஆண்டுகளா கவே சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்கள் அதிகளவில் வாட கைக்கு இயக்கப்படுவதால் எங்கள் வேலைவாய்ப்பு குறைந்துவிட் டது” என்றனர். இன்று நடுத்தரக் குடும்பங்க ளில் கூட நான்கு முதல் ஆறு பேர் வரை பயணிக்கக்கூடிய கார்கள் இருப்பது சாதாரணமாகிவிட்டது. குடும்பத்தில் நான்குக்கும் மேற்பட் டோர் சபரிமலைக்குப் பயணம் மேற் கொள்ளும்போது, அவர்கள் வாடகை வாகனங்களை அணுகு வதைத் தவிர்த்து, தங்கள் சொந்த வாகனத்திலேயே பயணத்தைத் தொடர்கின்றனர். சட்ட விதிகள் மீறல் மோட்டார் வாகனச் சட்டப்படி, சொந்த வாகனத்தைப் (வெள்ளை நிற நம்பர் பிளேட்) பணத்திற்காக வாடகைக்குப் பயன்படுத்துவது குற்றமாகும். இருப்பினும், சொந் தக் கார் வைத்திருப்பவர்கள் தங் கள் நெருங்கிய உறவினர்கள் மற் றும் நண்பர்களை குழுவாக சபரி மலைக்கு அழைத்துச் செல்லும் போது, வாடகையாகப் பணம் பெறாமல், ‘டீசல் அல்லது பெட் ரோல் செலவை மட்டும் கொடுத் தால் போதும்’ என்ற நிபந்தனையின் அடிப்படையில் தங்கள் வாகனங் களை இயக்குகின்றனர். இத னால் 20 முதல் 30 பேர் வரை செல்லக் கூடிய பேருந்துகளுக்கு ஆட்கள் கிடைக்காமல் அவதிப்படுகிறார் கள். வாடகை வாகன உரிமையாளர் கள், வருடந்தோறும் வாகனப் பரா மரிப்புக்காகவும், சட்டரீதியான கட மைகளுக்காகவும் அதிகச் செலவு செய்ய வேண்டியுள்ளது. உதாரண மாக, சாதாரணமாக ஒரு வாகனத் திற்கு ஆண்டுக்கு ரூ. 25,000 முதல் ரூ. 30,000 வரை எப்.சி (தகுதிச் சான்றி தழ்) செலவு, மற்றும் ரூ. 15,000 முதல் ரூ. 20,000 வரை இன்சூரன்ஸ் செலவு செய்கின்றனர். ஆனால், சொந்தப் பயன்பாட்டு வாகனங்க ளுக்கு இவ்வளவு பெரிய அளவி லான இன்சூரன்ஸ், எப்.சி. போன்ற செலவினங்கள் இருப்பதில்லை. இத்தகைய அதிக செலவு களை கருத்தில்கொண்டே வாட கை வாகன உரிமையாளர்கள் நியா யமான வாடகையை கேட்க வேண்டியுள்ளது. இந்த நியாய மான கட்டணத்தை செலுத்த விரும்பாத வாடிக்கையாளர்கள் சட்ட விரோதமான சொந்த வாக னங்களை நாடுவதால், அரசு விதி களைப் பின்பற்றி தொழில் நடத்தும் தங்களுக்கு கடைசியில் பொரு ளாதார பாதிப்பும், தேவையற்ற சுமையும்தான் மிஞ்சுவதாக அவர் கள் வேதனையுடன் தெரிவிக்கின்ற னர். சட்டவிரோதமாக இயங்கும் வாகனங்கள் குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற் றும் துறைசார் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், அவ்வப் போது மேற்கொள்ளப்படும் நடவ டிக்கைகள் பின்னர் கண்டு கொள்ளப்படாமல் போவது தொடர் கதையாகி வருகிறது. “தொலைதூரப் பயணங்களின் போது போக்குவரத்துத் துறை போலீசாரும், காவல்துறையி னரும் எங்களைப் போன்ற வாடகை வாகனங்களை மட்டுமே கண் காணித்துச் சோதனையிடுகிறார் களே தவிர, சட்டத்திற்குப் புறம்பாக வாடகைக்குச் செல்லும் சொந்தப் பயன்பாட்டு வாகனங்களை நிறுத் திச் சோதனையிடுவதில்லை,” என் றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்ற னர். நாங்களும் குடும்பம் உள்ள வர்கள். இதை வைத்துத்தான் எங் கள் வாழ்வாதாரமும் நடக்கிறது. இதேநிலை தொடர்ந்தால், நாங்க ளும் வாடகை வாகன முறையிலி ருந்து வெளியேறி, சொந்த வாகனத் தையே வாடகைக்கு ஓட்டிவிட லாமா என்று தோன்றும் சூழலை ஏற்படுத்துகிறார்கள்,” என்றனர். மோட்டார் வாகன விதிகளுக்கு மாறாகச் சொந்தப் பயன்பாட்டு வாகனங்களை வாடகைக்கு இயக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளும், போதிய அள விலான விழிப்புணர்வுகளும் அதி காரிகளால் ஏற்படுத்தப்பட வேண் டும். - எம்.பிரபாகரன்</p>
