தேர்தல் அறிவிப்பு வெளியான உடன் சுறுசுறுப்பாக களமிறங்கிய எல்.டி.எப்
16 Mar 2026, 4:46 pm
<p><strong>தேர்தல் அறிவிப்பு வெளியான உடன் சுறுசுறுப்பாக களமிறங்கிய எல்.டி.எப்</strong></p>
<p>தேர்தல் அறிவித்த நாளிலேயே, கேரள இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எப்) வேட்பாளர்களும் ஊழியர்களும் தொகுதிகளில் இறங்கி சுறுசுறுப்பாக களமாடத் தொடங்கி உள்ளனர். இரண்டாவது நாளாக திங்களன்றும் இந்த காட்சியை கேரளம் முழுவதும் காண முடிந்தது. ஆட்சித் தொடர்ச்சியை எதிர்நோக்கி இடது ஜனநாயக முன்னணி, முதல் நாளிலேயே தேர்தல் பிரச்சாரத்தில் முன்னிலை பெற்றது. ஞாயிறன்று மாலை தேர்தல் அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே தங்கள் வேட்பாளர் பட்டியலை சிபிஎம் அறிவித்தது. உடனடியாக ஊழியர்கள் பிரச்சாரத்துக்காக களத்துக்கு வந்தனர். மாலையிலேயே வேட்பாளர் பேரணிகள் நடத்தப் பட்டன. ஏற்கெனவே, சுவர் எழுத்துகள், சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் உயர்ந்துள்ளன.</p>
