முந்தய பக்கம்

திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது நில அளவைக் கல் தான்!

5 Dec 2025, 4:21 pm
திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது  நில அளவைக் கல் தான்!
<p><strong>திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது &nbsp;நில அளவைக் கல் தான்!</strong></p> <p>முன்னாள் வட்டாட்சியர் திட்டவட்டம் விருதுநகர், டிச.5- &nbsp;&ldquo;திருப்பரங்குன்றம் மலையின் மேல் தர்ஹா அருகில் இருப்பது, &lsquo;தியோட் லைட் ஸ்டோன்&rsquo; எனப்படும் நில அளவைக் &nbsp;கல் தான்&rdquo; என ஓய்வு பெற்ற வட்டாட்சியர் உறுதிபடத் தெரிவித் துள்ளார். &nbsp;விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற வட்டாட்சியர் பாலமுருகன். இவர், மேலும் கூறு கையில், &ldquo;வெள்ளையர்களால் நிலப்பரப்பை அளவீடு செய்யும்போது இந்த மாதிரியான &ldquo;தியோட் லைட் ஸ்டோன்&rdquo; கற்கள் ஆங்காங்கே நிறுவப்பட்டன. குறிப்பாக மலைப்பகுதியில், உயரத்திற்குத் தகுந்தாற் போல் சுமார் 30 சென்டிமீட்டர் முதல் 240 சென்டிமீட்டர் வரை &nbsp;உயரமுள்ள கற்கள் இடத்திற்கு தகுந்தாற் போல் அமைக் கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் இது &nbsp;போன்ற ஏராளமான சர்வே கற்கள் உள்ளது. நான் புல ஆய்விற்கு செல்லும்போது இது மாதிரியான கற்களை மலைப்பகுதியில் பார்த்திருக்கிறேன். மேற்படி பிரச்சனைக்குரிய இடத்தில் இருக்கும் சர்வே கல்லின் மேலே உள்ள குழிப்பகுதியானது நில அளவை கருவியை பொருத்துவதற்காக உண்டாக்கப்பட்ட குழியா கும். கிராமப்புறங்களில் உள்ள இது மாதிரியான கற்களில் &nbsp;பொதுமக்கள் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுவதால் அந்த &nbsp;கற்களெல்லாம் தீபம் ஏற்றும் தூண்கள் ஆகி விடாது. தீர்ப்பளித்த நீதிபதி சுவாமிநாதன், முன்னதாகவே நில அளவை அலு வலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியரி டம் மேற்படி இடத்தை தணிக்கை செய்திருந்தால் இது மாதிரி குழப்பங் கள் வந்திருக்க வாய்ப்பு இல்லை. &nbsp;இவ்வாறு ஓய்வுபெற்ற வட்டாட் சியர் பாலமுருகன் கூறியுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram