தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிறுவர்களுக்கான விண்வெளி அறிவியலின் திறவுகோல்

15 Mar 2026, 4:11 pm
சிறுவர்களுக்கான விண்வெளி அறிவியலின் திறவுகோல்
<p><strong>சிறுவர்களுக்கான விண்வெளி அறிவியலின் திறவுகோல்</strong></p> <p>&ldquo;ஆகாயத்தைப் பார், கேள்விகளைக் கேள்; &nbsp;அறிவியல் அங்கேதான் தொடங்குகிறது&rdquo; என்ற உத்வேகமூட்டும் வரி களுடன் விங்ஸ் (Wings) பதிப்பகம் சார்பில் வெளியாகியுள்ளது &lsquo;விண்வெளிக்கு போகலாமா?&rsquo; என்னும் நூல். விண்வெளி அறிவியலில் ஆர்வம் கொண்ட குழந்தைகளுக்கும் ஆரம்பநிலை வாசகர்களுக்கும் இது ஒரு சிறந்த வழிகாட்டியாகும். கேள்விகளின் வழி தேடல் விமானத்தில் பறப்பவர்களை ஏன் நாம் விண்வெளி வீரர்கள் என்று சொல்வதில்லை? ராக்கெட்டுகள் ஏன் தேவைப்படுகின்றன? கிர கணம் குறித்து ஏன் மக்கள் அச்சப்படுகிறார்கள்? விண்கலத்தை ஏவுவதற்கு முன்பு திருப்பதியில் வழிபாடு செய்வது சரியா? - இது போன்ற சுவாரசி யமான மற்றும் தர்க்கரீதியான கேள்விகளுக்கு எளிய முறையில் பதிலளிப்பதன் மூலம் குழந்தைகளிடம் அறிவியல் தேடலை ஆசிரியர் தூண்டுகிறார். அறிவியல் இனி எளிது அறிவியல் என்றாலே கடினமான சொற்கள் இருக்கும் என்ற அச்சத்தைப் போக்கி, பொறி யாளர் தேமொழிச்செல்வி மிக எளிமையான தமிழில் தகவல்களைப் பகிர்ந்துள் ளார். விண்வெளி வீரர்கள் எப்படிப் பயணம் செய்கிறார்கள், அங்குள்ள சூழல் எப்படி இருக்கும், விண்வெளி உடை ஏன் அவசியம் மற்றும் அவர்களின் உணவு முறை போன்ற பல சுவாரசியமான செய்திகள் இதில் இடம்பெற்றுள்ளன. கற்பனைத் திறனும் வரைபடங்களும் அறிவியல் உண்மைகளை வெறும் பாடமாகச் சொல்லாமல், உரையாடல் மற்றும் கதை சொல்லும் பாணியில் அணுகி யிருப்பது ஆசிரியரின் சிறப்பு. மேலும், சிறுவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் வரைபடங்கள் சேர்க்கப்பட்டிருப்பது நூலுக்குக் கூடுதல் பலம் சேர்க்கிறது. இந்த நூலை வாசிக்கும் குழந்தைகள் எதிர்காலத்தில் விண்வெளி வீரர்களாக உருவெடுக்கவும், நமது &lsquo;இஸ்ரோ&rsquo; (ISRO) போன்ற அமைப்புகளில் இணைந்து பணியாற்றவும் இப்புத்தகம் ஒரு விதையாக அமையும் என்பதில் ஐயமில்லை. விண்வெளிக்கு போகலாமா? ஆசிரியர்: பொறியாளர். தேமொழிச்செல்வி வெளியீடு: விங்க்ஸ் (Wings) பதிப்பகம், சென்னை/ விலை: ₹99/ தொடர்புக்கு: 9840969757</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.