உலகிற்கே வழிகாட்டும் ‘கேரளா மாடல்’! இந்தியாவின் ஒளிவிளக்கு!
7 Apr 2026, 5:38 pm
<p><strong>உலகிற்கே வழிகாட்டும் ‘கேரளா மாடல்’! இந்தியாவின் ஒளிவிளக்கு!</strong></p>
<p>கேரளாவில் பினராயி விஜயன் தலை மையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு, மனித வள மேம்பாட்டிலும் வறுமை ஒழிப்பிலும் படைத்துள்ள சாதனைகள் இன்று உலக நாடுகளையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அமெரிக்காவையே முந்திய கேரளா! 2025-ஆம் ஆண்டில் ‘தீவிர வறுமை ஒழிந்த மாநிலமாக’ கேரளா தன்னை அறிவித்துக் கொண்டது. கேரளாவின் உள்நாட்டு உற்பத்தி அமெரிக்காவின் உற்பத்தியில் வெறும் 0.56% தான். ஆனால், மனித மேம்பாட்டுக் குறி யீட்டில் (HDI) அமெரிக்காவையே கேரளா முந்தியுள்ளது. இது தாராளமயக் கொள்கை களுக்கு மாற்றாக, இடதுசாரிகள் முன்வைக்கும் ‘உள்ளடக்கிய வளர்ச்சி’க்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். அறிவுசார் பொருளாதாரமாக மாறும் கல்வித்துறை! கல்வித்துறையில் கேரளா செய்துள்ள முதலீடு சுமார் ரூ. 5000 கோடி. 50,000 பள்ளி வகுப்பறைகள் ‘ஹை-டெக்’ வசதி பெற்றுள்ளன. இந்தியாவில் முதன்முதலாக அரசுப் பள்ளி களில் செயற்கை நுண்ணறிவு (AI) கல்வியைப் புகுத்திய பெருமை இடதுசாரி அரசையே சாரும். உயர்கல்வியில் 8 பல்கலைக்கழகங்கள் மற்றும் 359 கல்லூரிகள் தேசியத் தரச்சான்று பெற்றுள்ளன. டிஜிட்டல் பல்கலைக்கழகம், கிராபென் புதுமை மையம் என கேரளா இன்று ஒரு ‘அறிவுசார் பொருளாதாரமாக’ (Knowledge Economy) உருவெடுத்துள்ளது. சுகாதாரத்தில் ‘காருண்யா’ சாதனை! ‘காருண்யா’ திட்டத்தின் கீழ் 73 லட்சம் மக்களுக்கு ரூ. 70,000 கோடி மதிப்பிலான விலை யில்லாச் சிகிச்சை அளிக்கப்பட்டு, ஏழை எளிய மக்களின் மருத்துவச் சுமையை அரசு ஏற்றுள் ளது. 886 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உலகத் தரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளன. மாவட்ட மற்றும் தாலுக்கா அளவில் அதிநவீன உயர் சிகிச்சை சிறப்பு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. விவசாயிகளின் அரண் மற்றும் குடும்பஸ்ரீ புரட்சி! விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் பாது காப்பு அளிப்பதில் கேரளா முன்னோடி. காய்கறிகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை (MSP) நிர்ணயித்த இந்தியாவின் முதல் மாநிலம் கேரளா தான். 46 லட்சம் பெண்களை உள்ளடக்கிய ‘குடும்பஸ்ரீ’ இயக்கம், இன்று பெண்களைத் தொழில்முனைவோராகவும், அரசியல் தலைவர்களாகவும் மாற்றியுள்ளது. 57% குடும்பஸ்ரீ பெண்கள் இன்று உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகளாகச் செயல்பட்டு ஜனநாயகத்தைக் காக்கின்றனர். விருதுகளின் நாயகன்! நிதி ஆயோக்கின் ஆரோக்கியக் குறியீடு, நீடித்த வளர்ச்சிக்கான குறியீடு, உணவுப் பாதுகாப்பு எனப் பட்டியலிட்ட அனைத்துத் துறைகளிலும் கேரளா தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் விருது முதல் தேசிய டிஜிட்டல் விருது வரை கேரளாவின் சாதனைகளுக்குச் சான்றாக நிற்கின்றன. தேசத்திற்கு வழிகாட்டும் ஒளிவிளக்கு! “மக்களுக்காக மக்கள் நடத்தும் ஆட்சி” என்பதற்கு இலக்கணமாகத் திகழும் இடதுசாரி அரசின் இந்தப் பயணம், தேசத்தின் இருளை நீக்கும் ஒளிவிளக்காகத் தொடர்கிறது. மிகக் குறைந்த நிதி ஆதாரங்களைக் கொண்டு, எளிய மக்களை உள்ளடக்கிய வளர்ச்சியை எட்ட முடியும் என்பதை உலகிற்கு கேரளா நிரூபித்துள்ளது. இந்த ‘கேரளா மாடல்’ தான் இன்றைய இந்தியாவின் தேவை! - முனைவர் தி.ராஜ் பிரவின்</p>
<p> </p>
