தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா இராமேஸ்வரத்திலிருந்து 116 படகுகளில் சென்றனர்

27 Feb 2026, 5:32 pm
 கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா இராமேஸ்வரத்திலிருந்து 116 படகுகளில் சென்றனர்
<p><strong>&nbsp;கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா இராமேஸ்வரத்திலிருந்து 116 படகுகளில் சென்றனர்</strong></p> <p>இராமநாதபுரம்,பிப்.27- இராமநாதபுரம் மாவட் டம், இராமேஸ்வரத்தில் பிப்ர வரி 27 அன்று காலையில் கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழாவிற்கு செல்லும் பக்தர்களை வழி அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி யில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன், மாவட்ட வருவாய் அலுவலர் வ. சங்கரநாராயணன் ஆகி யோர் &nbsp;பக்தர்கள் செல்லும் படகுகளை கொடியசைத்து பாதுகாப்புடன் சென்று வர வாழ்த்தி அனுப்பி வைத்த னர். பின்னர் அவர் தெரி விக்கையில், &nbsp;கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணி யார் கோவில் திருவிழா 2026 பிப்ரவரி 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் நடைபெறு கின்றன. இவ்விழாவில் பங்கேற்க இந்திய அரசு அனு மதியுடன் தமிழக அரசு வழி காட்டுதலின்படி தமிழ கத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து 3996 பேர் விண்ணப்பித்து அவர்க ளுக்கு உரிய அனுமதி வழங் கப்பட்டு இன்று காலை 7 &nbsp;மணிக்கு 90 விசைப்படகு கள் &nbsp;மற்றும் 26 நாட்டுப்படகு கள் மூலம் செல்கின்றனர். மேலும் பயணம் மேற்கொள் ளும் அனைவருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன் பக்தர் கள் கச்சத்தீவு சென்று மீண்டும் இராமேஸ்வரம் வரும்வரை அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை யும் இந்திய கடற்படை, தமிழக கடற்படை, மாவட்ட காவல்துறை, மீன்வளத் துறை மற்றும் மாவட்ட நிர்வா கம் இணைந்து மேற்கொண்டு வருகின்ற னர். பக்தர்கள் பாது காப்புடன் சென்று அரசு வழி காட்டுதலை பின்பற்றி திருவிழாவில் பங்கேற்று வரவேண்டும். பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் அனைவருக்கும் வாழ்த்துக் கள் என்று &nbsp;தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் உதவி காவல் கண்காணிப்பாளர் மீரா, மீன்வளத்துறை துணை இயக்குநர்கள் சின்ன குப்பன் அவர்கள், கோபி நாத் , இராமநாதபுரம் வரு வாய் கோட்டாட்சியர் செ. ஹபிபூர் ரஹ்மான், இரா மேஸ்வரம் வட்டாட்சியர் அப்துல் ஜபார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.