தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வறுமையை மிதித்து ஆசிய சிகரம் நோக்கி தமிழக வீரர்களின் பயணம்!

1 Feb 2026, 3:51 pm
வறுமையை மிதித்து ஆசிய சிகரம் நோக்கி தமிழக வீரர்களின் பயணம்!
<p><strong>வறுமையை மிதித்து ஆசிய சிகரம் நோக்கி தமிழக வீரர்களின் பயணம்!</strong></p> <p>&ldquo;வாழ்க்கை என்பது ஒரு சைக்கிள் பயணம் போன்றது; வீழ்ந்துவிடாமல் இருக்க வேண்டுமானால் நாம் முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும். இந்தத் தத்துவத்தை வெறும் வார்த்தையாகப் பார்க்காமல், தங்கள் வாழ்க்கைப் போராட்டமாகவே மாற்றிக் காட்டியிருக்கிறார்கள் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு இளம் சிங்கங்கள்&rdquo;. &nbsp;சவூதி அரேபியாவில் வரும் &nbsp;5 முதல் 13ஆம் தேதி வரை நடை பெறவுள்ள &lsquo;ஆசிய ரோடு சைக்கிளிங் மற்றும் பாரா சைக்கிளிங் சாம்பியன்ஷிப்&rsquo; போட்டியில் இந்தியா சார்பில் &nbsp;ர. சஞ்சய், பி. பிரதீப் &nbsp;ஆகியோர் பங்கேற்கின்றனர். இவர்களது வெற்றிக் கதை, வறுமை யின் பிடியில் சிக்கித் தவிக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் ஒரு பாடப்புத்தகம். &nbsp;நிமிர்ந்து நிற்கும் சஞ்சய்! கோயம்புத்தூர் மாவட்டத்தின் வளமான மண், விளையாட்டு வீரர்களுக்குப் பெயர் போனது. அங்குள்ள நேரு கலைக் கல்லூரியில் உளவியல் பயின்று வரும் மாணவர் ர. சஞ்சய், ஆசிய நாடுகளின் கவனத்தை ஈர்க்கத் தயாராகிவிட்டார். சஞ்சய்யின் தந்தை ரவிச்சந்திரன், தாய் சரஸ்வதி. குடும்பத்தின் பொருளாதாரச் சுமை தோள்களை அழுத்தினா லும், மகன் ஓட்டும் சைக்கிளின் வேகம் மட்டும் குறையக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். &nbsp;&ldquo;உளவியல் படிக்கும் சஞ்சய், தோல்விகளை எப்படி வெற்றியாக மாற்றுவது என்ற மனவலிமையை ஆடுகளத்தில் கற்றுக் கொண்டவர்&rdquo; என்பது அவருக்கு பெருமை சேர்க்கிறது. &nbsp;தேசிய அளவில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்திய அணிக்குள் நுழைந்துள்ள சஞ்சய்க்கு, தமிழக அரசு ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கி அவர் சிறகுகளை விரித்துப் பறக்க வழிவகை செய்துள்ளது. &nbsp;தடைகளைத் தகர்த்த பிரதீப் ! மற்றொருபுறம், சென்னை அம்பத்தூர் பகுதியின் நெரிச லான சந்துகளில் தனது கனவுகளைத் துரத்திப் பிடித்தவர் பி. பிரதீப். இவரது குடும்பப் பின்னணி நம் கண்களைக் கசிய வைக்கும் அதே வேளையில் பெருமிதத்தையும் அளிக்கிறது. தந்தை தங்க வேல், அம்பத்தூர் தொழிற்பேட்டைப் பகுதியில் &nbsp;சுமை தூக்கும் ஒரு கூலி தொழிலாளியாக (Loadman) வியர்வை சிந்திப் பணிபுரிபவர். வாழ்க்கையின் சுமையை முதுகில் சுமந்து கொண்டு, மகனின் சர்வதேச கனவுக்கு அஸ்திவாரமாகத் திகழ்கிறார். வறுமை ஒரு பக்கம், உடல் ரீதியான சவால்கள் மறுபக்கம் என தடைகள் பல இருந்தாலும், பிரதீப் எதற்கும் அஞ்சவில்லை. &nbsp;பாரா சைக்கிளிங் பிரிவில் இவர் காட்டி வரும் வேகம் சர்வதேசத் தரத்திலானது. இவரது போராட்டத்தை அங்கீகரித்த தமிழ்நாடு அரசு, ரூ. 2.5 லட்சம் வழங்கி, &ldquo;உன்னுடன் அரசு இருக்கிறது&rdquo; என்ற நம்பிக்கையை ஊட்டியுள்ளது. அரசாங்கம் தந்த ஆக்சிஜன்! விளையாட்டுத் துறையில் தமிழகம் இந்தியாவிற்கே முன்மாதிரியாகத் திகழ்கிறது. குறிப்பாக, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்த இரு வீரர்களின் வறுமைச் சூழலையும், திறமையையும் உணர்ந்து, வழங்கிய நிதி உதவி வெறும் பணம் மட்டுமல்ல; அது அந்த வீரர்களின் குடும்பங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய கவுரவம். &ldquo;பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது&rdquo; என்ற துணை முதலமைச்சரின் செயல்பாடு, வறுமையால் வாடும் பல வீரர்களை மைதானங்களுக்கு அழைத்து வரும் என்பதில் ஐயமில்லை. மின்னலை விஞ்சும் திறமை சஞ்சய் ஸ்பிரிண்டிங் எனப்படும் இறுதி நிமிடங்களில் மின்னல் வேகத்தில் சைக்கிளைச் செலுத்துவதில் வல்லவர். இக்கட்டான திருப்பங்களிலும் சமநிலை தவறாமல் வேகத்தை நிலை நிறுத்துவது இவரது தனிச்சிறப்பு. சஞ்சய்யின் சைக்கிள் சக்கரங்கள் உள்நாட்டுப் போட்டிகளில் சுழலத் தொடங்கிய காலத்திலிருந்தே பதக்கங்கள் குவியத் தொடங்கின. ஒடிசாவில் நடைபெற்ற தேசிய ரோடு சைக்கிளிங் சாம்பியன் ஷிப்பில் (ஜூனியர் பிரிவு) கடுமையானப் போட்டிக்கு இடையே வெள்ளிப் பதக்கம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். &nbsp;சிஎம் கோப்பை, மாநில அளவிலான போட்டிகளில் 3 &nbsp;தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று தனது ஆதிக்கத்தை நிலை நாட்டி யுள்ளார். சென்னையில் நடைபெற்ற &lsquo;டிராக் ஆசிய கோப்பை&rsquo; (Track Asia Cup) போட்டியில் பங்கேற்ற அனுபவம் இவருக்கு சர்வதேசப் போட்டியின் நுணுக்கங்களைக் கற்றுத் தந்தது. &lsquo;தன்னம்பிக்கை நாயகன்&rsquo; உடல் சவால்களை ஒருபோதும் தடையாகக் கருதாத பிரதீப், பாரா சைக்கிளிங்கில் ஒரு முன்னோடியாக உருவெடுத்துள்ளார். தேசிய பாரா சைக்கிளிங்: இந்தியாவின் பல்வேறு மாநி லங்களில் நடைபெற்ற பாரா சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டி களில் பங்கேற்று தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார். &nbsp;பதக்க வேட்டை! இந்த இரு வீரர்களும் சும்மா சவூதி அரேபியாவுக்குப் பயணிக்கவில்லை; அவர்கள் கடந்து வந்த பாதையில் சிந்திய வியர்வையும், வென்ற பதக்கங்களுமே அவர்களுக்கு இந்த நுழைவுச் சீட்டைப் பெற்றுத் தந்திருக்கின்றன. ஆசிய சிகரம் தொடுவார்களா? சவூதி அரேபியாவின் பாலைவனச் சாலைகளில் இவர்களின் சைக்கிள் சக்கரங்கள் சுழலும் போது, அது தமிழகத்தின் எளிய மக்களின் நம்பிக்கையாகவும் சுழலும்.ஆசிய சிகரத்தில் ஏற்றி வைக்கும். &nbsp;தமிழகத்தின் இந்த இரண்டு மைந்தர்களும் சவூதி அரேபியாவில் இந்தியக் கொடியை உயர்த்திப் பிடிக்கவும், தங்கப் &nbsp;பதக்கங்களுடன் தாய்மண் திரும்பவும் தமிழகமே திரண்டு நின்று வாழ்த்துகிறது! பறக்கட்டும் தமிழகத்தின் வெற்றிச் சக்கரம்! &nbsp; -சி.ஸ்ரீராமுலு</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.