தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்கள் மாணவர் கனவுகளுக்கு ஊக்கம்!

10 Dec 2025, 4:08 pm
புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்கள் மாணவர் கனவுகளுக்கு ஊக்கம்!
<p><strong>புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்கள் மாணவர் கனவுகளுக்கு ஊக்கம்!</strong></p> <p>கோவை, டிச.10- தமிழ்நாடு அரசு சார்பில் செயல்ப டுத்தப்படும் &ldquo;புதுமைப்பெண்&rdquo; மற்றும் அதன் விரிவாக்கமான &ldquo;தமிழ்ப்புதல்வன்&rdquo; திட்டங்க ளால் பயனடைந்த மாணவ, மாணவிகள் முதல்வருக்கு &nbsp;நெகிழ்ச்சியான நன்றிகளை தெரிவித்துள்ளனர். அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1,000/- வழங்கும் புதுமைப்பெண் திட்டம் 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அர சுப்பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி யில் சேரும் மாணவர்களும் பயன்பெறும் வகையில், தமிழ்ப்புதல்வன் திட்டம் கடந்தாண்டு கோவை யில் நடைபெற்ற விழாவில் முதல்வர் தொடங்கி வைத் தார். கடந்த நான்கு ஆண்டுக ளில் கோவை மாவட்டத்தில் மட்டும் புதுமைப்பெண் திட் டத்தின் கீழ் 70,848 மாணவி களும், தமிழ்ப்புதல்வன் திட் டத்தின் கீழ் 58,430 மாணவர் களும் பயனடைந்துள்ளனர். கோவை எஸ்டிடிஏகே இன்ஸ்டிடியூட் ஆப் டெக் னாலஜி கல்லூரியில் கணி னிப்பொறியியல் மூன்றாமாண்டு படிக்கும் மாணவி யே.ஸ்ரீவிஜி கூறுகையில், பொரு ளாதார வசதியின்மையால் உயர்கல்வி படிப்பது சவாலாக இருந்தது. பள்ளி ஆசிரி யரால் புதுமைப்பெண் திட்டம் பற்றி அறிந்து விண்ணப்பித்தேன். மாதம் வரும் ரூ.1,000, எனக்குப் புத்தகங்கள் வாங்கவும், தேர்வு கட் டணம் செலுத்தவும் பேருதவியாக உள்ளது என்று உணர்ச்சி பொங்க தெரிவித்தார். அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் முதலாமாண்டு படிக்கும் மாணவர் ஜோ.பிரவீன், இந்த திட்டம் தனக்கு பேரூதவியாக இருந்ததாக தனது நன்றியினை தெரிவித்துள்ளார். ஏழ்மை யான குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு இத் தொகை, கல்விக்கான செலவுகளை சமா ளிக்க உதவியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.