நாளுக்கு நாள் அதிகரிக்கும் வன விலங்குகளின் அட்டகாசம்
22 Jan 2026, 2:57 pm
<p><strong>நாளுக்கு நாள் அதிகரிக்கும் வன விலங்குகளின் அட்டகாசம்</strong></p>
<p>உடுமலை, ஜன.22- விளைநிலங்களை சேதப்படுத்தி வந்த காட்டு பன்றிகள் தற்போது, விவசா யிகளையும் தாக்கி வருகிறது. வனத்து றையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலி யுறுத்தியுள்ளனர். மலைப்பகுதியில் இருந்த காட்டு விலங்குகள் உணவு மற்றும் குடிநீர் தேவைகளுக்காக மலை அடிவார பகு தியில் இருக்கும் விளைநிலங்களுக்கு வருகை தருவது நாளுக்கு நாள் அதி கரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுக ளாக உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதி விளைநிலங்களை காட்டு யானை கள் மற்றும் காட்டுப்பன்றிகள் சேதப்ப டுத்தி வருவது இப்பகுதி விவசாயி களை கவலை அடைய செய்துள்ளது. கடந்த வாரம் பொன்னாலம்மன் சோலை, அமராவதி உள்ளிட்ட பகுதி யில் ஐம்பதுக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள், ஆழ்குழாய் கிணற்றில் உள்ள குழாய்களை காட்டு விலங்குகள் சேதப் படுத்தியுள்ளன. மேலும் மலை அடிவா ரத்தில் இருந்து பத்து கிலோ மீட்டர் சுற்ற ளவில் சுற்றி வந்த காட்டுப்பன்றிகள், தற்போது ஐம்பது கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் குடிமங்கலம் ஒன்றியப்பகுதி விளை நிலைங்களுக் கும் வருகிறது. மேலும், விவசாயிகளை யும் தாக்கி வருகிறது. உடுமலை வளை யபாளையத்தில் சின்னத்துரை என்ப ரின் விளைநிலத்தில் பயிர் செய்த மக் காச்சோள பயிர்களை 20க்கும் மேற் பட்ட காட்டுபன்றிகள் முழுமையாக சேதப்படுத்தி உள்ளது. இது குறித்து விவசாயிகள் சிலர் கூறு கையில், வனப்பகுதியில் இருந்த காட் டுப்பன்றிகள் விளை நிலங்களை சேதப் படுத்துவதை தடுக்க வேண்டும். காட்டுப் பன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். வனவிலங்கு கள் ஏற்படுத்தும் சேதங்களுக்கு உரிய நேரத்தில் முழுமையான நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண் டும். கேரள அரசை போல் காட்டுப்பன்றி களை அழிக்க நடவடிக்கை எடுக்க வனத் துறையினர் தீவிரம் காட்ட வேண்டும். மேலும் காட்டுப்பகுதியில் விலங்குக ளுக்கு தண்ணீர் கிடைக்கவும், மலைப்ப குதியில் இருந்து விலங்குகள் வெளியே வரமுடியாத வகையில், மலையடிவார பகுதியில் தடுப்பு வேலி அல்லது அக ழிகள் அமைக்க வேண்டும் என என்ற னர்.</p>
