தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஈரான் மீதான ஏகாதிபத்தியத் தாக்குதல் உலக முதலாளித்துவ நெருக்கடியே காரணம்

4 Mar 2026, 5:01 pm
ஈரான் மீதான ஏகாதிபத்தியத் தாக்குதல் உலக முதலாளித்துவ நெருக்கடியே காரணம்
<p><strong>ஈரான் மீதான ஏகாதிபத்தியத் தாக்குதல் உலக முதலாளித்துவ நெருக்கடியே காரணம்</strong></p> <p>புதுதில்லி, மார்ச் 4- ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடுத்துள்ள கொடூரமான இராணுவ ஆக்கிர மிப்பை இந்திய தொழிற்சங்க மையம்(சிஐடியு) வன்மையாகக் கண்டித்துள்ளது. இந்தத் தாக்கு தல் ஐநா சாசனத்தின் விதிகளைப் புறந்தள்ளி, ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் சுதந்திரத்தைப் பறிக்கும் ஏகாதிபத்தியச் செயலாகும் என சிஐடியு குற்றம் சாட்டியுள்ளது. உலகப் பொருளாதார நெருக்கடியும் போர் வெறியும் இந்த இராணுவ மோதலை வெறும் இரு நாடுகளுக்கு இடையிலான மோதலாகப் பார்க்க முடியாது; இது உலக முதலாளித்துவத்தின் ஆழமான நெருக்கடியின் வெளிப்பாடாகும் என சிஐடியு பொதுச்செயலாளர் எளமரம் கரீம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். இராணுவச் செலவினம்: உலகப் பொருளா தாரம் மந்தநிலையைச் சந்தித்து வரும்வேளை யில், உலக இராணுவச் செலவினம் முன்னெப் போதும் இல்லாத வகையில் 2.4 டிரில்லியன் அமெரிக்க டாலர்களைக் கடந்துள்ளது. இதில் &nbsp;அமெரிக்கா மட்டுமே 40 சதவீதத்தைப் பங்களிக்கிறது. ஆயுத வர்த்தக நோக்கம்: தங்களின் பொரு ளாதாரச் சரிவைச் சமாளிக்கவும், &lsquo;இராணுவ-தொழில்துறை கட்டமைப்பை&rsquo; (Military-Industrial Complex) ஊக்கப்படுத்தவும், இயற்கை வளங்களைக் கைப்பற்றவும் அமெரிக்கா போரை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறது. ஈரானின் முக்கியத்துவமும் எரிசக்தி பாதுகாப்பும் 9 கோடி மக்கள் தொகையைக் கொண்ட ஈரான், உலகின் 10 சதவீத எண்ணெய் வளத்தையும், 17 சதவீத இயற்கை எரிவாயு வளத்தையும் கொண்டுள்ளது. உலக பெட்ரோலியப் போக்கு வரத்தில் 20 சதவீதம் கடந்து செல்லும் ஹோர்முஸ் &nbsp;ஜலசந்தியை உள்ளடக்கிய இப்பகுதியில் ஏற் பட்டுள்ள பதற்றம், உலக எரிசக்தி பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாகும். &nbsp;கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதத்தை இறக்குமதி செய்யும் இந்தியாவைப் போன்ற நாடுகளுக்கு, இது கடும் விலை உயர்வையும் பணவீக்கத்தையும் உண்டாக்கி உழைக்கும் மக்கள் மீது பெரும் சுமையை ஏற்றும் என சிஐடியு எச்சரித்துள்ளது. காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் தெற்கு ஈரானின் மினாப்பில் உள்ள பெண்கள் பள்ளியின் மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சில் 165-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டது, அமெரிக்க - இஸ்ரேலியக் கூட்டணியின் காட்டு மிராண்டித்தனத்தை வெளிப்படுத்துகிறது. ஜெனிவா ஒப்பந்தங்களை மீறி மக்கள் வசிக்கும் பகுதி கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இலக்கு வைக்க ப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. &nbsp; இதற்குப் பதிலடியாக நடக்கும் இராணுவத் தாக்குதல்களும் அப்பகுதியில் பெரும் அழிவை ஏற்படுத்தி வருகின்றன. மோடி அரசின் கொள்கை மாற்றம் மற்றும் இந்தியர்களின் பாதுகாப்பு பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேலுடன் கொண்டுள்ள பாதுகாப்பு உறவு இந்தியாவின் பாரம்பரியக் கொள்கையிலிருந்து விலகிச் செல்வதைக் காட்டுகிறது. யூத இனவெறி பிடித்த இஸ்ரேல் மற்றும் அமெரிக்க அழுத்தத்திற்குப் பணிந்து மோடி அரசு செயல்படுவது இந்தியா வின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கி யுள்ளது. குறிப்பாக, வளைகுடா நாடுகளில் (GCC) &nbsp;பணியாற்றும் 90 லட்சம் இந்தியத் தொழிலாளர் &nbsp;களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மோடி அரசின் இத்தகைய வெளியுறவுக் கொள்கை மாற்றங்கள் ஆபத்தில் தள்ளியுள்ளன. அவர் களின் பாதுகாப்பு மற்றும் நாடு திரும்புதல் குறித்து மோடி அரசு மௌனம் காப்பது கண்டிக்கத்தக்கது. உழைக்கும் வர்க்கத்திற்கு அழைப்பு ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பால் பாதிக்கப் பட்டுள்ள ஈரான் மக்களுக்கும், மேற்கு ஆசிய உழைக்கும் வர்க்கத்திற்கும் சிஐடியு தனது ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக் கொள்கிறது. வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர் களைப் பாதுகாக்க ஒன்றிய அரசு உடனடியாக விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். அமெரிக்க - இஸ்ரேலிய ஏகாதிபத்தியத் தாக்குதலுக்கு எதிராகவும், மோடி அரசின் தவ றான வெளியுறவுக் கொள்கையைக் கண்டித்தும் இந்தியத் தொழிலாளர்களும் மக்களும் வீதி களில் இறங்கிப் போராட வேண்டும் என சிஐடியு அறைகூவல் விடுத்துள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.