தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஒரு மருத்துவப் போராளியின் அழியா நினைவுகள்: டாக்டர் எல். நரசிம்மன் எனும் ஆளுமை!

6 Feb 2026, 5:17 pm
ஒரு மருத்துவப் போராளியின் அழியா நினைவுகள்:  டாக்டர் எல். நரசிம்மன் எனும் ஆளுமை!

ஒரு மருத்துவப் போராளியின் அழியா நினைவுகள்:  டாக்டர் எல். நரசிம்மன் எனும் ஆளுமை!

கடந்த 2020 பிப்ரவரி 7 அன்று காலை எட்டு மணி. தமிழக மெங்கும் அதிர்ச்சி அலைகள் பர வின. அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் லட்சுமி நரசிம்மன் மாரடைப்பால் காலமானார்  என்ற செய்தி தமிழக மருத்துவச் சமூ கத்தையே துயரக் கடலில் ஆழ்த்தி யது. ஒட்டுமொத்த மருத்துவர்களின் குரலாக, அவர்களின் உரிமைகளுக் காக தன்னைத் தானாகவே அர்ப்ப ணித்துக் கொண்ட ‘எல்.என்’ என்று  அன்போடு அழைக்கப்பட்ட அந்த  மருத்துவப் போராளி இனி இல்லை  என்ற உண்மையை ஏற்க முடியாமல் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் தவித்தனர். அவரது மரணம் என்பது இயற்கை நேரிட்ட ஒன்றல்ல; அது  அதிகார வர்க்கத்தின் அலட்சியத்தா லும், அடக்குமுறையாலும் விளைந்த ஒரு தியாகம் என்பதை மருத்துவ உல கம் இன்றும் கண்ணீரோடு நினைவு கூர்கிறது. போராட்டக் களமே படுக்கையறை சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்த டாக்டர் லட்சுமி நரசிம்மன் ஒரு சிறந்த அறுவைச் சிகிச்சை  நிபுணராக மட்டுமே முடங்கிவிட வில்லை. 1986-ல் சென்னை மருத்து வக் கல்லூரியில் சேர்ந்த இரண்டு ஆண்டுகளிலேயே மாணவர் சங்கச் செயலாளராகப் பொறுப்பேற்று, மருத்துவக் கல்வியில் தனியார் மயத்தை எதிர்த்து முழங்கினார். 1991-ல் அதிமுக அரசு ஸ்ரீ ராமச்சச் திரா மருத்துவமனையை மீண்டும் தனியாரிடம் ஒப்படைக்க முயன்ற போது, தமிழகமே அதிரும் வகை யில் 57 நாட்கள் கடும் போராட்டத்தை நடத்தினார். இதற்காக 17 நாட்களுக்கு மேல் சிறைக்கொடுமைகளை அனு பவித்தார். பயிற்சி மருத்துவர்களின் உதவித்தொகை உயர்வு முதல், அரசு மருத்துவர்களுக்கு ஊதியப்பட்டை நான்கு வழங்குதல் வரை அவரது ஒவ்வொரு போராட்டமும் வெறும்  உணர்ச்சிவசப்பட்டவை அல்ல; அவை ஆவணங்களும் புள்ளிவிவ ரங்களும் கொண்ட அறிவுப்பூர்வ மான போர்க்களங்கள். அதிகார ஆணவமும் அறச்சீற்றமும் 2018-ல் ஊதியக் கோரிக்கை பேச்சு வார்த்தையின்போது, ஒரு உயர் அதிகாரி “அரசு மருத்துவர்களின் சந்தை மதிப்பு என்ன?” என்று கேட்டது எல்.என் அவர்களின் அடி மனதைச் சீண்டியது. செப்டம்பர் 12 ஆம் தேதி சென்னை கோட்டை நோக்கிய பேரணியில் 6,000-க்கும்  மேற்பட்ட மருத்துவர்கள் முன்னிலை யில் அவர் ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்புமிக்கது. “சுகாதாரத் துறைக்கு அரசு ஒதுக்கும் பட்ஜெட் ரூ.11,300 கோடி. ஆனால், அரசு மருத்துவர்க ளின் உழைப்பின் உண்மையான மதிப்பு ரூ.20,000 கோடிக்கும் மேல். இங்கு காப்பாற்றப்படும் லட்சக்கணக் கான ஏழை உயிர்களின் மதிப்பை எந்தச் சந்தையோடு ஒப்பிடுவீர்கள்?” என்று அவர் கேட்ட கேள்வி இன்றும் கோட்டையின் சுவர்களில் எதிரொ லித்துக்கொண்டிருக்கிறது. அதிமுக அரசின் வஞ்சகமும் மன உளைச்சலும் 2019-ல் ஃபோக்டா (FOGDA) கூட்ட மைப்பை உருவாக்கி, அரசாணை 354-ஐ அமல்படுத்தக் கோரி அவர் நடத்திய போராட்டம் இந்தியா வையே உற்றுநோக்க வைத்தது. அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உறுதிமொழியை ஏற்றுப் போராட்டத்தைக் கைவிட்ட நிலையில், அரசு வஞ்சகமாகப் பழி வாங்கும் நடவடிக்கையில் இறங்கி யது. 118 மருத்துவர்களின் தொலை தூர இடமாற்றமும், குற்ற குறிப்பா ணைகளும் எல்.என் அவர்களைக் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாக் கின. இடமாற்றம் செய்யப்பட்ட பெண் மருத்துவர்களின் குடும்பச் சிதைவு களையும், அவர்களின் குழந்தை களின் துயரங்களையும் கண்டு அவர் துடிதுடித்தார். மூன்று மாதங்களாகச் சென்னைக்கும் புதுக்கோட்டைக்கும் அலைந்து, அமைச்சர்களிடம் கெஞ் சியபோது அவர் சந்தித்த அவமா னங்கள் அவரது இதயத்தைப் பல வீனப்படுத்தின. தியாகமும் தொடரும் கோரிக்கையும் தன் சக தோழர்களின் பாதிப்பைச் சரிசெய்யத் துடித்த அந்தப் போராளியின் இதயம், 2020 பிப்ரவரி 7 அதிகாலையில் நின்று போனது. அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இன்றைய முதல்வர் ஸ்டா லின் அவர்கள், “அதிமுக அரசின் அராஜகமே எல்.என் மரணத்திற்கு முழுக்காரணம்” என்று கண்டனம் தெரிவித்திருந்தார். இன்று திமுக ஆட்சி ஐந்தாவது ஆண்டை நெருங் கிக் கொண்டிருக்கிறது. ஆனால், எல்.என் எதற்காகத் தன் உயிரைத் தியாகம் செய்தாரோ, அந்த அர சாணை 354 இன்னும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்பது 19,000 அரசு மருத்துவர்களின் தீராத ஆதங்கம். டாக்டர் லட்சுமி நரசிம்மனின் நினைவு நாளில், அவர் முன்னெ டுத்த கோரிக்கைகளை நிறைவேற்று வதே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும். சுகா தாரத் துறையை வலுப்படுத்த விரும்பும் இந்த அரசு, மருத்துவர் களின் இந்த நீண்டகாலக் கனவை நனவாக்கும் என்று நம்புகிறோம். -டாக்டர் எஸ்.பெருமாள் பிள்ளை, தலைவர், அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக்குழு

மறைந்த மருத்துவர் ந.லட்சுமி நரசிம்மன்-னின் 6 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, சனியன்று அனுசரிக்கப்படுகிறது. சேலம் மாவட்டம், மேட்டூர் அணை பகுதியிலுள்ள டாக்டர் லட்சுமி நரசிம்மன் நினைவு வளாகத்தில் இன்று நடைபெறும் நிகழ்வில், பல தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.