விளையாட்டு அரங்கில் திருநங்கைகள் வரலாறும் - சவால்களும்!
14 Dec 2025, 3:45 pm
<p><strong>விளையாட்டு அரங்கில் திருநங்கைகள் வரலாறும் - சவால்களும்!</strong></p>
<p>மைதானத்தில் ஒவ்வொரு விளையாட்டு வீரரும் தங்கள் வியர்வையால் எழுதும் கதை அவர்களது திறமையின் சாட்சியாக அமைகிறது. ஆனால் பாலின அடையாளம் கேள்விக்குட்படுத்தப்படும் போது, அந்த திறமை பின்னுக்குத் தள்ளப்பட்டு, சந்தேகங் களின் நிழல் சாதனைகளை மறைத்துவிடுகிறது. கடந்த காலத்தின் இருண்ட அத்தியாயங்கள் 1936 பெர்லின் ஒலிம்பிக்கில் டோரா ராட்ஜென் என்ற வீராங்கனையின் கதை துயரத்தின் உருவகம். பெண்ணாக வளர்க் கப்பட்ட டோரா, ஜெர்மனிக்காக உயரம் தாண்டுதலில் சாதனை படைத்தார். ஆனால் வெற்றிக்குப் பிறகு, சமூகம் அவரை குற்ற வாளியாக்கியது. குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு, பதக்கங்கள் பறிக்கப்பட்டன. 2008 இல் அவர் இறந்தபோதுதான், தெளிவற்ற பிறப்புறுப்புகள் இருந்ததாக மருத்துவ பதிவுகள் தெரிவித்தன. ஏமாற்றும் நோக்கம் ஒருபோதும் இல்லை, ஆனால் நீதி கிடைக்க பல தசாப்தங்கள் ஆயின. 1960களின் நடுப்பகுதியில், விளை யாட்டு வீராங்கனைகள் மருத்துவர்கள் முன் தங்கள் உடல்களைக் காட்ட வேண்டிய அவ மானகரமான காட்சி ஆய்வுகள் நடத்தப் பட்டன. மனித கண்ணியத்தை காலில் மிதித்த இந்த நடைமுறை, விளையாட்டு அரங்கில் பெண்களை எவ்வளவு இழிவாக நடத்தலாம் என்பதற்கான சாட்சியமாக நிற்கிறது. பின்னர் 1968இல் பார் உடல் சோத னை என்ற அறிவியல் முறை அறிமுகப் படுத்தப்பட்டது. ஆனால் இதுவும் குறை பாடற்றதல்ல. 1966 உலக சாம்பியனை வென்ற எரிகா ஷினெகர், 1968 ஒலிம்பிக் கிற்கு முன் இச்சோதனையில் தோல்வி யடைந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஒரு சாம்பியனின் கனவுகள் ஆய்வகக் குழாயில் நொறுங்கிப் போனது. மவுனத்தை உடைத்த குரல்கள் 1985ஆம் ஆண்டு ஸ்பானிஷ் வீராங்க னை மரியா மார்டினெஸ் விளையாட்டு உலகில் திருப்புமுனையை உருவாக்கினார். பார் சோதனையில் தோல்வியடைந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டபோது, அவர் மவுன மாக ஏற்றுக்கொள்ளவில்லை. தனது போராட்டத்தை பகிரங்கமாக எடுத்துச் சென் றார். அவருக்கு ஆண்ட்ரோஜன் இன்சென்சி ட்டிவிட்டி சிண்ட்ரோம் இருப்பதும், இது எந்த உடலியல் நன்மையும் அளிக்காது என்பதும் தெரியவந்தது. 1977ஆம் ஆண்டில் அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை டாக்டர் ரெனீ ரிச்சர்ட்ஸின் வழக்கு நீதிமன்றத்தை எட்டி யது. அமெரிக்க உச்சநீதிமன்றம் அவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்து, அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க அனுமதி த்தது. திருநங்கை விளையாட்டு வீரர்களின் உரிமைகளுக்கான முக்கியமான சட்ட வெற்றியாக இது அமைந்தாலும், விளை யாட்டு உலகின் மற்ற பகுதிகளில் மாற்றம் மெதுவாகவே வந்தது. போராட்டத்தின் முகம் காஸ்டர் செமென்யா! தென் ஆப்பிரிக்க ஓட்டப்பந்தய வீராங் கனை காஸ்டர் செமென்யாவின் பெயர் இந்த விவாதத்துடன் பிரிக்க முடியாதபடி பின்னிப் பிணைந்துள்ளது. 2009 பெர்லின் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை வென்ற செமென்யா, அவரது ஆண்பால் உடல மைப்பு காரணமாக பாலின சரிபார்ப்பு சோத னைக்கு உட்படுத்தப்பட்டார். இரண்டு முறை ஒலிம்பிக் சாம்பியனும், மூன்று முறை உலக சாம்பியனுமான செமென்யா, இயற்கையாகவே உயர்ந்த டெஸ்டோஸ்டிரோன் அளவு கொண்டிருந்த தால் புதிய விதிமுறைகளின் மையத்தில் சிக்கினார். 2018 இல் உலக தடகளம் வரம்பை மேலும் குறைத்தபோது, அவரது தடகள வாழ்க்கை முடிவுக்கு வந்தது. ஒரு சாம்பிய னின் கதை இவ்வாறு சோகமாக முடிவதை உலகம் பார்த்தது. உலக அரங்கில் புதிய முகங்கள் நியூஸிலாந்தைச் சேர்ந்த லாரல் ஹப்பார்ட் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் திருநங்கை தடகள பளு தூக்கும் வீரர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்தார். அமெரிக்க நீச்சல் வீராங்கனை லியா தாமஸ் 2022 ஆம் ஆண்டில் தேசிய சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். கனடாவின் வெரோனிகா ஐவி 2018 உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார். ஒவ்வொரு வெற்றியும் ஒரு புதிய கதவைத் திறக்கிறது, ஒவ்வொரு சாதனையும் தடை களை தகர்க்கிறது. இந்திய மண்ணின் துணிச்சல் இந்தியாவில் திருநங்கை விளையாட்டு வீரர்கள் இன்னும் பெரிய சவால்களை எதிர்கொள்கின்றனர். சமூக களங்கம், குடும்ப எதிர்ப்பு, பொருளாதார சிரமங்கள் என பல தடைகள் உள்ளன. இவை அனைத்தையும் உடைத்து எறிந்து ராஜஸ்தானைச் சேர்ந்த ரித்திகா சிங் தேசிய ஐஸ்ஸ்டாக் சாம்பியன்ஷிப்பில் ஒரு தங்கம் உட்பட நான்கு பதக்கங்களை வென்றுள்ளார். கேரளாவின் ராகினி 100 மீட்டர் ஓட்டத்தில் இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கங்களை வென்றார். தமிழகத்தின் நந்தினி கால்பந்தாட்ட அணியின் தலைவராக தலைமைத்துவத்தை நிரூபித்தார். 2025ஆம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கை விருதுகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியது, திருநங்கை சமூகத்தின் பங்களிப்புகளுக்கு அரசின் அங்கீகாரமாகும். எதிர்காலத்தின் பாதை விளையாட்டு உலகம் ஒரு சந்திப்புப் புள்ளியில் நிற்கிறது. உள்ளடக்கம் மற்றும் திருநங்கை உரிமைகளுக்கான அழுத்தம் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், நியாய மான போட்டி பற்றிய கவலைகள் உண்மை யானவை. விதிமுறைகள் மற்றும் விதிகளுக்கு அப்பால், அடிப்படை சமூக மாற்றம் தேவை. குடும்பங்கள், பயிற்சியாளர்கள், சக விளை யாட்டு வீரர்கள் அனைவரும் திருநங்கை விளையாட்டு வீரர்களை ஆதரிக்கவேண்டும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் விழிப்பு ணர்வு திட்டங்கள் தேவை. ஊடகங்கள் திரு நங்கை விளையாட்டு வீரர்களை நேர்மறை யாக சித்தரிக்க வேண்டும். அரசாங்கங்கள் நிதி உதவி, பயிற்சி வசதிகள், சட்டப் பாது காப்பு வழங்க வேண்டும். விளையாட்டு அரங்கில் திருநங்கைகளின் பயணம் சவால்கள் நிறைந்ததாக இருந்தாலும், நம்பிக்கையின் அறிகுறிகள் பல உள்ளன. லாரல் ஹப்பார்ட், லியா தாமஸ் போன்ற சர்வதேச வீரர்களும், ரித்திகா சிங், ராகினி, நந்தினி போன்ற இந்திய வீரர்களும் தடை களை தகர்த்து புதிய பாதைகளை வகுத்து வருகின்றனர். அமெரிக்க ஸ்கேட்போர்டு வீராங்கனை அலனா ஸ்மித் கூறியது போல், “நான் ஒரு நல்ல ஸ்கேட்டராக அறியப்பட விரும்புகிறேன். பாலினம் ஒரு பொருட்டல்ல.” இது எதிர்கால விளையாட்டு உலகின் லட்சியமாக இருக்க வேண்டும். ஒருவரது பாலின அடையாளத்தை விட அவரது திறமை, அர்ப்பணிப்பு, விளையாட்டுத்தனம் ஆகியவை முக்கியத்துவம் பெறும் உலகம். ஒவ்வொரு மனிதருக்கும் - அவரது பாலின அடையாளம் எதுவாக இருந்தாலும் - விளையாட உரிமை உண்டு. நியாயமான போட்டி முக்கியம், ஆனால் உள்ளடக்கமும் அதே அளவு முக்கியம். இந்த இரண்டையும் சமநிலையில் வைக்கும் வழிகளை கண்டறிவதே நமது கூட்டுப் பொறுப்பாகும். - சி.ஸ்ரீராமுலு</p>
