தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குகைக்கோயிலாக மாற்றப்பட்ட சமணப்பள்ளி சிதரால் மலையில் எஞ்சிய வரலாற்றுச்சுவடு

28 Mar 2026, 4:13 pm
குகைக்கோயிலாக மாற்றப்பட்ட சமணப்பள்ளி சிதரால் மலையில் எஞ்சிய வரலாற்றுச்சுவடு
<p><strong>குகைக்கோயிலாக மாற்றப்பட்ட சமணப்பள்ளி சிதரால் மலையில் எஞ்சிய வரலாற்றுச்சுவடு</strong></p> <p>கன்னியாகுமரி சுற்றுலா தலங்களும் தொன் மையும் நிறைந்த மாவட்டம். இங்குள்ள சிதரால் திருச்சாரணத்து மலையில் சமணப்பள்ளி செயல்பட்டதன் சுவடுகள் எஞ்சி உள்ளன. இங்குள்ள குகைகளில் சமணர் சிற்பங்கள், குகை கோயில்கள் கல்வெட்டுகள், கல்லில் செதுக்கப்பட்ட சமணப் படுக்கைகள் காணப்படுகின்றன. சீனாவரை பரவிய புகழ் திருச்சாரணத்து மலையைப் பற்றி நாட்டின்முதல் பிரதமர் நேரு, சீனப் பயணம் மேற்கொண்டிருந்த போது அந்நாட்டு தலைவர் சூயென்லாய், விசாரித்தாராம். அந்த அளவுக்கு புகழ்வாய்ந்த சிதரால் கோயில் நேருவின் வேண்டுகோளின்படி தொல்பொருள் பாதுகாப்புத் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இங்கு காலை 8 மணி முதல் 4 மணி வரை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். சுமார் ஒரு கிலோ மீட்டர் சாய்வான மலைப்பாதையில் செல்ல வேண்டும். முன்பெல்லாம் கரடுமுரடான நடைபாதையில் செல்ல வேண்டியிருந்ததாக இப்பகுதியைச் சேர்ந்தவரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாவட்ட நிர்வாகியுமான ஆர்.ரத்தினகுமார் தெரிவித்தார். 2001 முதல் 2006 கால கட்டத்தில் திருவட்டார் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஜே.ஹேமச்சந்திரனின் பெரும் முயற்சிகளால் மலை அடிவாரத்தில் நுழைவு வாயிலும் மலை உச்சிவரை 10 அடி அகலத்தில் நடைபா தையில் கற்களும் பதிக்கப்பட்டதாக அவர் தெரிவித் தார். இரண்டு இடங்களில் 5 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட 2 குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை பயன்பாட்டில் இல்லாததால் மலை ஏறுவோர் சிரமப்படும் நிலை உள்ளது. ஒரே பாறையில் 24 தீர்த்தங்கரர்கள் சிலைகள் நாகர்கோவிலிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் இந்த மலைக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயி லின் உள்ளும், புறமும் சமணச் சிற்பங்கள் ஏராளமாக உள்ளன. இந்த குகைக் கோயில் 13 ஆம் நூற்றாண்டில் பகவதி கோயிலாக மாற்றப்பட்டது. எனினும், கோயி லுக்குள் இருக்கும் தீர்த்தங்கரர்கள் மற்றும் உப தேவதை களின் சிற்பங்கள் எவ்வித மாற்றமும் இன்றி அப்ப டியே பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பல நூற்றாண்டுப் பழைமை வாய்ந்த இந்த சமண மதக் கோவிலில் மகாவீரர், மற்றும் 23 தீர்த்தங்கர்களின் சிலைகள் பாறை களில் செதுக்கப்பட்டுள்ளன. குகைக் கோவிலின் மையமாக 24ஆவது தீர்த்தங் கரரான மகாவீரர் சிற்பம் இடம்பெற்றுள்ளது. அருகில் 23ஆவது தீர்த்தங்கரர் மற்றும் பத்மாவதி பார்சு வநாதர்யின் சிற்பங்கள் உள்ளன. 24 தீர்த்தங்கரர்களின் வடிவங்களும் ஒரே பாறையில் செதுக்கப்பட்டுள்ளன. மேற்குநோக்கிய இந்த பகுதியின்கீழ் குகைக் கோயில் கிழக்கு நோக்கி உள்ளது. இது பூட்டியிருப்பதால் சுற்றுலா பயணிகளால் அங்கு சென்று பார்வையிட முடியாத நிலை உள்ளது. இதன் ஒரு பகுதி பகவதி அம்மன் கோயி லாக மாற்றப்பட்டுள்ளது. கல்லில் செதுக்கிய சமணர் படுக்கைகள் காணப்படுகின்றன. திருவிதாங்கூர் மன்னராக இருந்த ஸ்ரீமூலம் திருநாள் 1885-1924 காலகட்டத்தில் இக்கோயிலில் &lsquo;சிதராலம்மா&rsquo; என்ற பகவதி அம்மனை நிறுவியதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. 19ஆம் நூற்றாண்டில் பகவதி அம்மன்... திருச்சாரணத்து மலையில் பத்மாவதி ஆறாட்டுக் காக, சமணப் பெண் துறவிகளால் வெட்டப்பட்டதாக கூறப்படும் நீர்ச்சுனை ஒன்று உள்ளது. குகைக்கோயிலின் மேற்கு பகுதியில் இதயம் போன்ற வடிவத்தில் இது அமைந்துள்ளது. குகைக்கோயிலின் உச்சியில் மகுடம் சூட்டியதுபோல் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன் கீழ் பகுதியில் செங்கல் கட்டுமானம் இடிந்துபோன நிலையில் காணப்படுகிறது. இது மேற்பகுதி கட்டுமானங்கள் (கோபுரம்) பிற்காலத்தில் செய்யப்பட்டதற்கான தடயமாக உள்ளது. ஒடுக்குமுறைகள் கோலோச்சியபோது அதற்கு எதிராக அகிம்சையை போதித்தது சமண மதம். அதனால் தான் சமண மதம் எளிதாக தமிழகத்தில் வேரூன்றி இருந்தி ருக்கிறது. அதன் சுவடுகள் சிதராலின் திருச்சார ணத்து மலையில் நிலைத்து நிற்கின்றன. இதுகுறித்த வரலாற்றை இளம் தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு தலையிட வேண்டும். வரலாற்று ஆய்வுக்கான தலமாக சிதரால் மாற்றப்பட்டு சுற்றுலா வரைபடத்தில் இடம்பெறச் செய்வது காலத்தின் தேவை. பள்ளி கோவிலானது வரலாற்று ஆய்வாளர் முனைவர் சிவ.விவேகானந்தன் எழுதியுள்ள, &lsquo;சிதரால் திருச்சாரணத்து மலை&rsquo; சமணப் பள்ளி என்கிற ஆய்வு நூலில் கூறப்பட்டுள்ளதாவது: சிதரால் மலையில் சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் அமைந்த சமணப்பள்ளி இருந்துள்ளது. இது சமண மடாலயம் என்று அழைக்கப்பட்டது. சமண சமயத்து இளந் துறவிகளான சாரணர்கள் சிதரால் மலையில் தங்கியி ருந்து சமணப் பணி செய்துள்ளனர். திருச்சாரணத்து மலை சமணப் பள்ளியைப் போல முற்காலத்தில் பல பள்ளிகள் இருந்துள்ளன. திருச்சாரணத்து மலைக் கோவி லில் பார்சுவநாதரும், பத்மாவதி இயக்கியும் கோவிலில் தெய்வமாக இருந்துள்ளனர். சைவம் புகுந்த போது சமண சமயத்து இயக்கியான பத்மாவதி, சைவசமயத்து பகவதி அம்மனாக மாற்றம் பெற்றார். தொடக்கத்தில் குகைப் பள்ளியாக இருந்தது எட்டாம் &nbsp;நுற்றாண்டிலிருந்து குகைக் கோவிலாக மாற்றம் பெற் றது. வழிபாடுகளும் சமயப் போதனைகளும் இங்கு &nbsp;நடைபெற்றன. குகைக் கோவிலாக மாற்றம் பெற்ற நிலை யில் இந்துக்கோவிலாக மாறி பகவதி அம்மனாக உரு மாற்றம் பெற்றது. திருச்சாரணத்து மலைக் கோவிலில் காணப்படும் கல்வெட்டுக்கள் பதினேழு. இவற்றில் பன்னி ரெண்டு கல்வெட்டுகள் சமணசமயம் தொடர்பானவை. திருச்சாரணத்துமலை சமணப்பள்ளி கி.பி 12ஆம் நூற் றாண்டு முதல், சைவமதத்தைத் தனக்குள் கொண்ட தாக விளங்கியது. தமிழ்ப் பல்லவராயனால் இம்மாற்றம் நடைபெற்றது. தமிழகத்தில் கி.பி.3ஆம் நூற்றாண்டு முதல் சமணத்து றவிகள் உறைந்துள்ள குகைப் பள்ளிகள் தமிழகம் முழுவதும் பரவியுள்ளன. தொடக்கக் காலத்தில் சமண சமயம், சமயப் பணிக்கு முதன்மை தந்ததே ஒழிய உருவ வழிபாட்டிற்கு அல்ல. சமண சமயத்தில் உள்ள தீர்த்தங் கரர் ஒவ்வொருவருக்கும் இயக்கர், இயக்கி என்ற பரிவாரத் தெய்வங்கள் உண்டு. தீர்த்தங்கரர்கள் அறிவிற் சிறந்தவர்களாக மதிக்கப்பட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.