பாலியல் குற்றவாளியான ராம் ரஹீமிற்கு ஆதரவாக விளம்பரம் மன்னிப்புக் கோரியது ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ்
13 Sept 2026, 9:21 pm

பாலியல் குற்றவாளியான ராம் ரஹீமிற்கு ஆதரவாக விளம்பரம் மன்னிப்புக் கோரியது ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ்

புதுதில்லிபாஜக ஆளும் ஹரியானா மாநிலம் சிர்சாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது ‘தேரா சச்சா சவுதா’ அமைப்பு. ஆன் மீக அமைப்பான இதன் தலைவராக உள்ள குர்மீத் ராம் ரஹீம் சிங் (59), தனது இரண்டு பெண் சீடர் களைப் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக சிபிஐ நீதிமன்றத் தால்விதிக்கப்பட்ட 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார். இவர் மீது ஒரு வழக்கில் விடுதலை கிடைத்திருந்தாலும், மற்றொரு வழக்கு நிலுவையில் உள்ளது. ஆர்எஸ்எஸ் - பாஜக உடனான நெருக்கம் காரணமாக ராம் ரஹீம் அடிக்கடி பரோலில் விடுவிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. இவர் தற்போது 21 நாட்கள் பரோலில் சிறையிலிருந்து வெளியேவந்துள்ளார்.

இந்நிலையில், பாலியல் வன் கொடுமைக் குற்றவாளியான ராம் ரஹீம் சிங்கிற்கு ஆதரவாக வடஇந்திய ஊடகங்கள் செப்டம்பர் 12 அன்று முதல் பக்கத்தில் முழுப பக்க விளம்பரம் ஒன்றை வெளியிட் டன. “தேரா சச்சா சவுதா என்றால் என்ன? (உண்மை vs கற்பனை)” என்ற தலைப்பிலான அந்த விளம்பரத்தில், தேரா சச்சா சவுதா அமைப்பு 7.5 கோடி மக்களைப் போதையிலிருந்து விடுவித்துள்ளது; 35.40 கோடி மரங்களை நட்டுள்ளது; 33.85 லட் சம் யூனிட் ரத்த தானம் செய்துள்ளது மற்றும் 22 கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்துள்ளது எனக் கூறப்பட்டிருந்தது. மேலும், “போதைப்பொருள் மாஃபியாக் கள் மற்றும் தேரா அமைப்பிற்கு எதிரான சக்திகளால்” ராம் ரஹீமுக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பாஜகவிற்கு ஆதரவான ஊடகங்கள் இத்தகைய சர்ச்சைக்குரிய விளம்பரங்களை வெளியிடுவது வழக்கமானது என்பதால், அந்நாளிதழ்களின் வெளியீடு பெரியளவில் கண்டுகொள்ளப்படவில்லை. ஆனால், நடுநிலையுடன் செயல் படும் நாட்டின்முக்கிய ஆங்கில நாளிதழ்களில் ஒன்றான ‘தி இந்து’ நாளிதழின் முதல் பக்கத்திலும் ராம் ரஹீமின் விளம்பரம் வெளியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கடும் எதிர்ப்பு

கடந்த 2017-ல் ராம் ரஹீமிற்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு வந்தபோது, பஞ்ச்குலா நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி அவரதுஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில் 36 பேர் உயிரிழந்தனர். குறிப்பாக, செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களே முதன்மை இலக்காகினர். 37 பத்திரிகையாளர்களின் வாகனங்கள், கேமரா உள்ளிட்ட கருவிகள் சேதப்படுத்தப்பட்டன; சில பத்திரிகையாளர்கள் காயமடைந்தனர். ராம் ரஹீமின் பின்னணி இவ்வளவு மோசமாக உள்ள சூழலில், ‘தி இந்து’ நாளிதழின் முதல் பக்கத்தில் இத்தகைய விளம்பரம் வெளியானதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் கிளம்பின.

நிபந்தனையற்ற மன்னிப்பு

இதனைத் தொடர்ந்து, ராம் ரஹீம் தொடர்பான விளம்பரத்தை வெளியிட்டதற்காக ‘தி இந்து’ நாளி

தழ் மன்னிப்புச் செய்தியை வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 13 அன்று நாளிதழின் முதல் பக்கத்தில் வெளியான செய்தியில், “தேரா சச்சா சவுதா தலைவரும், பாலியல் வன்கொடுமைக் குற்றவாளியுமான குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு எதிராக ‘போதைப்பொருள் மாஃபியாக் கள் மற்றும் தேரா அமைப்பிற்கு எதிரான சக்திகளால்’ சதித்திட்டம்தீட்டப்பட்டதாகக் குற்றம் சாட்டி, ‘தேரா சச்சா சவுதா என்றால் என்ன? (உண்மை vs கற்பனை)’ என்ற தலைப்பில் வெளியான அருவருக் கத்தக்க முதல் பக்க விளம்பரத்தை வெளியிட்டதற்காக ‘தி இந்து’ நாளிதழ்ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துக்கொள்கிறது. இந்த விளம் பரத்தை வெளியிட்டதற்காகத் தனது வாசகர்களிடம் ‘தி இந்து’ நிபந்தனையற்றமன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.