மேடையையே போர்க்களமாக்கிய மாவீரன்!
30 Dec 2025, 4:07 pm
<p><strong>மேடையையே போர்க்களமாக்கிய மாவீரன்!</strong></p>
<p>மேடை நாடகங்களைத் தேச விடுதலையின் கருவியாக மாற்றிய ஈடு இணையற்ற கலை ஞர் தியாகி விஸ்வநாததாஸ். “வெள்ளைக்கொக்கு பறக்குதடி பாப்பா” என்று பாடி, புராணக் கதைகளுக்குள் புரட்சி அரசியலைப் புகுத்திய வர். சாதியப் புறக்கணிப்புகளைத் தகர்த்து, தோழர் கே.பி. ஜானகியம்மாள் போன்ற புரட்சியாளர்களுடன் இணைந்து மேடையேறிய சமத்துவப் போராளி இவர். நாடகத் தடையை மீறிச் சிறை சென்றபோதும், கதர் உடை களையே மேடை வேடங்களாகத் தரித்துத் தன் தேசப் பற்றை உறுதி செய்தவர். 1940 டிசம்பர் 31 அன்று, முருகன் வேடத்தில் மேடையில் நடித்துக் கொண்டிருந்த போதே அங்கேயே உயிர்நீத்து, கலைக்காகவும் தேசத் திற்காகவும் வாழ்ந்தவர் என்பதை மெய்ப்பித்தார். மயில் மீதமர்ந்த அதே முருக வேடத்திலேயே அவரது இறுதி ஊர்வலம் அமைந்தது உலக வரலாற்றில் ஒரு அதி சயம். மக்களுக்காகக் கலை வளர்த்த அந்த மகத்தான தியாகியின் நினைவு நாளில் அவர் புகழ் போற்றுவோம்! இன்று (டிச.31) தியாகி விசுவநாத தாஸ் நினைவு நாள்</p>
