கனமழையால் வெப்பம் தணிந்தது
16 Mar 2026, 4:46 pm
<p><strong>கனமழையால் வெப்பம் தணிந்தது</strong></p>
<p>கோவை, மார்ச் 16– சூலூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்க ளன்று மாலை ஒரு மணி நேரத் திற்கும் மேலாக இடி, மின்ன லுடன் கூடிய பரவலாக கன மழை பெய்தது. கடந்த சில நாட்களாக கோவை மாவட்டத்தில் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில், சூலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்களன்று மாலை திடீரென வானில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்யத் தொடங்கியது. குறிப் பாக சூலூர், காசிகவுண்டன்புதூர், கலங்கல், காங்கேயம் பாளையம், காடம்பாடி, செங்கத் துறை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று டன் மழை நீடித்தது. இந்த திடீர் மழையி னால் கிராமப்புற சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதுடன், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகி றது. நீண்ட நாட்களுக்குப் பிறகு பெய் துள்ள இந்த கனமழையினால் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்பதால் தென்னை மற்றும் காய்கறி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள் ளனர். பாதுகாப்பு கருதி ஒரு சில இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டதைத் தவிர, பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதுமின்றி ஒரு மணி நேர மழை இப்பகுதி மக்களுக்கு நிம் மதியை அளித்துள்ளது.</p>
