தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்தது

10 Jan 2026, 2:48 pm
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்தது
<p><strong>உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்தது&nbsp;</strong></p> <p>சென்னை, ஜன.10 - &nbsp;தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் &nbsp;ஆசிரியர்களின் கடந்த இருபது ஆண்டுகால &nbsp;கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத் திற்கு இணையான பலன்களை அளிக்கும் வகையில், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வந்துள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங் களின் கூட்டமைப்புகளான ஜாக்டோ-ஜியோ மற்றும் ஃபோட்டா ஜியோ ஆகியவை கால வரையறையற்ற வேலை நிறுத்தப் போராட் டத்தை அறிவித்திருந்தன. டிச.22 ஆம் தேதி நடந்த முதல் கட்டப் பேச்சுவார்த்தையில் உடன் பாடு எட்டப்படவில்லை. இதனிடையே, மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி &nbsp;ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழு தனது இறுதி அறிக்கையை அரசிடம் அளித்தது. &nbsp;இதைத் தொடர்ந்து ஜனவரி 2 ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தைகள் மற்றும் குழுவின் &nbsp;பரிந்துரைகளின் அடிப்படையில், முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் புதிய ஓய்வூதியத் திட்டம் &nbsp;குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தமிழக நிதித்துறைச் செயலாளர் த. &nbsp;உதயச்சந்திரன் சனிக்கிழமை (ஜன.10) வெளி யிட்ட அதிகாரப்பூர்வ அரசாணையில், &ldquo;ஏப்ரல் 1, 2004-க்கு பிறகு பணியில் சேர்ந்த &nbsp;அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஓய்வூதியப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. புதிய திட்டத்தின் முக்கிய அம்சங்களாக, &nbsp;பணி ஓய்வு பெறும்போது கடைசி மாத ஊதி யத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக உறுதி யளிக்கப்படுகிறது. இதற்கு பணியாளர்களின் &nbsp;10 சதவீத பங்களிப்புடன், தேவைப்படும் கூடு தல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே &nbsp;ஏற்கும். ஆறு மாதத்திற்கு ஒருமுறை அக விலைப்படி உயர்வு, 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியம், 25 லட்சம் ரூபாய்க்கு மிகாத பணிக் கொடை மற்றும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ஆகியவை வழங்கப்படும். பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியில் சேர்ந்து, புதிய திட்டம் &nbsp;செயல்படுத்துவதற்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்புக் கருணை ஓய்வூதி யம் வழங்கப்படும். அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த திட்டத்தை வர வேற்று முழு ஒத்துழைப்பு நல்குமாறு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டு உள்ளார்&rdquo; என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.