சுற்றுச்சூழல் மாசுவிலிருந்து விடுபடுவதே கும்மிடிப்பூண்டி மக்களின் பெருங்கனவு
1 Apr 2026, 4:02 pm
<p><strong>சுற்றுச்சூழல் மாசுவிலிருந்து விடுபடுவதே கும்மிடிப்பூண்டி மக்களின் பெருங்கனவு</strong></p>
<p>தமிழகத்தின் முதல் தொகுதியான கும்மிடிப் பூண்டி, ஆந்திர எல்லைகளை ஒட்டிய விவ சாயமும் தொழிற்சாலைகளும் நிறைந்த பகுதியாகும். 2.54 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட இத்தொகுதியில் சிப்காட் வளாகத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் நிலம், நீர், காற்று என அனைத்தும் கடுமையாக மாசடைந்துள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் நோய்வாய்ப்பட்டு அவதிப்படுவதால், சுற்றுச்சூழலை மீட்டு தங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதே இத்தொகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. கும்மிடிப்பூண்டியில் அரசு கலைக் கல்லூரி கும்மிடிப்பூண்டி பகுதியில் புதிய அரசு கலைக் கல்லூரி மற்றும் நவீன பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்பது மாணவர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு. ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல வேண்டும், பேரூராட்சியில் பாதாளச் சாக்கடைத் திட்டம், மீன் வியாபாரிகளுக்குப் புதிய கட்டிடம், அரசு மருத்துவமனையில் மார்ச்சுவரி வசதி மற்றும் விஷக்கடிகளுக்குத் தேவை யான மருந்துகளை எப்போதும் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மக்கள் வலியுறுத்தி வரு கின்றனர். மேலும், மாதர்பாக்கத்தில் 24 மணி நேர மருத்துவ வசதி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகம் அமைக்கப்பட வேண்டும். தாமரை ஏரியைச் சீரமைக்க வேண்டும் கும்மிடிப்பூண்டியின் முக்கிய நீர் ஆதாரமான தாமரை ஏரியைப் போர்க்கால அடிப்படையில் சுத்தப்படுத்தி, நீர் மாசைத் தடுக்க வேண்டும். ஆரம்பாக்கம் பகுதியில் ஸ்டேட் வங்கி கிளை, மீன் பதப்படுத்தும் குளிர்சாதனக் கூடம் மற்றும் குறைந்த அழுத்த மின்சாரப் பிரச்சினையைத் தீர்க்கத் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும். இப்பகுதியில் மாம்பழ விளைச்சல் அதிகம் என்பதால், மாம்பழக் கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடியும். நெல் கொள்முதல் நிலையம் விவசாயிகள் அதிகம் உள்ள இப்பகுதியில் கூடுதல் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் தரமான விதைகளை வழங்க அரசு விதைப் பண்ணைகளை உருவாக்க வேண்டும். கிளிக்கோடு ரயில்வே கிராசிங்கில் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்க மேம்பாலம் அமைப்ப தோடு, நீர்நிலைப் புறம்போக்கு இடங்களில் நீண்டகாலமாக வசிப்பவர்களுக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும். கழிவு நீரைச் சுத்திகரிக்க மறுசுழற்சி மையங்களை ஏற்படுத்துவதும் அவசியமாகும். வாசனை திரவியத் தொழிற்சாலை அமைக்க வேண்டும் ஊத்துக்கோட்டை பகுதியில் பூக்கள் சாகுபடி அதிகளவில் நடைபெறுவதால், அங்கு வாசனை திரவியத் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க வெளிவட்டச் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பழங்குடி இருளர் மற்றும் ஏழை எளிய மக்களுக்குக் குடிமனைப் பட்டா வழங்கி, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க அடுத்த அமையும் அரசு முன்வர வேண்டும் என கும்மிடிப்பூண்டி தொகுதி மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். பெ.ரூபன்</p>
