முந்தய பக்கம்

துமையான சிந்தனை

13 Dec 2025, 1:22 pm
                 துமையான    சிந்தனை
<p><strong>துமையான சிந்தனை&nbsp;</strong></p> <p>முதலமைச்சர் வருகிறார் என்றவுடன் அரசு எந்தி ரம் வழக்கம்போல தயாரிப்பில் இறங்கியது. பள்ளிக்கூடக் குழந்தைகள் வரவழைக்கப்பட்டனர். ஏராளமான பூங்கொத்துகள் வாங்கப்பட்டிருந்தன. அந்தப் பூங்கொத்துகளை ஏந்தியவாறு முதல்வரிடம் கொடுப்பது போன்று சில அதிகாரிகள் பயிற்சி எடுத்தனர். &lsquo;இதையெல்லாம் எதிர்பார்க்கும் முதல்வர் &nbsp;அல்ல&rsquo; என்று சிலர் சொன்னதையும் அவர்கள் கேட்க வில்லை. &nbsp;பத்து மணிக்கு நிகழ்வு என்று சொல்லப்பட்டி ருந்தது. எப்படியும் 11.30 வரையில் ஆகி விடும் என்ப தில் அதிகாரிகள் உறுதியாக இருந்தனர். சிலர் வீட்டி லிருந்து கிளம்பவே இல்லை. பலரின் வாக்கிடாக்கி கள் திடீரென்று பரபரத்தன. &lsquo;நிகழ்வு நடக்கும் இடத்திற்கு இன்னும் பத்து நிமிடங்களில் முதல்வர் வந்து விடுவார்&rsquo; என்று அறிவித்தன. அப்போது 9.45தான் ஆகி யிருந்தது. &lsquo;இவரென்ன... முதல்வரா இல்லையா&rsquo; என்று &nbsp;புலம்பிக்கொண்டே வந்து சேர்ந்தனர். 9.55க்கு முதல்வர் &nbsp;புத்ததேவ் வந்திறங்கினார். பூங்கொத்துகளைக் கொடுத்தபோது புத்ததேவின் முகத்தில் பெரிய மாறு தல்கள் இல்லை. வரிசையில் இருந்த அதிகாரி ஒருவர் &nbsp;சிறிய பூ ஒன்றைக் கையில் வைத்திருந்தார். அருகில் &nbsp;சென்ற முதல்வர், &ldquo;இதென்ன வித்தியாசமா இருக்கே&rdquo; &nbsp;என்று கேட்டார். அந்த அதிகாரியோ, &ldquo;ஆமா.. ஒரு வருஷத்துக்கு இந்தப் பூ வாடாது&rdquo; என்றார். &ldquo;அப்படியா..&rdquo; என்று கேட்ட முதல்வர் முகத்தில் மலர்ச்சி. தனது அலுவலக அதிகாரியொருவரை அழைத்தார். &ldquo;இந்தப் பூவை ஏற்றுமதி செய்யுறதுக்கு என்ன &nbsp;வாய்ப்புனு பாருங்க&rdquo; என்று சொல்லிவிட்டு நகர்ந் தார்</p>
Share
FacebookXWhatsAppTelegram