மக்களுக்குப் பாதிப்பில்லாத பகுதியில் சாயப் பட்டறைகளை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
9 Dec 2025, 4:25 pm
<p><strong>மக்களுக்குப் பாதிப்பில்லாத பகுதியில் சாயப் பட்டறைகளை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்</strong></p>
<p>சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தல் சேலம், டிச. 9- சேலம் மாநகரம், ஜாகீர் அம்மா பாளையம் பகுதியில், மேக்ன சைட் நிறுவனத்திற்குச் சொந்த மான 184.5 ஏக்கர் நிலத்தில், சுமார் ரூ.360 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இடத்தில் யான் கலரிங் பார்க் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் 21 சாயப்பட்டறைகளை அமைக்க கட்டுமானப் பணிகள் துவங்கியுள்ளன. இதனால் நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்ப டும் எனப் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் டிசம்பர் 9 செவ்வாயன்று நேரில் ஆய்வு செய்து பொதுமக்களின் கோரிக் கைகளைக் கேட்டறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் பெ. சண்முகம் செய்தியாளர் களைச் சந்தித்துப்பேசியதாவது: சாயப்பட்டறை அமைப்பில் சுற்றுச்சூழல் அச்சம் சேலம் ஜாகீர் அம்மாப்பாளை யம் பகுதியில் சாயப்பட்டறைத் தொழிலுக்கான அரசின் அறிவிப்பு, அப்பகுதி மக்கள் மத்தியில் மிகப் பெரிய அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது. மண்வளத்தையும் நீர்வளத்தையும் அழிக்கும் வகை யில் எந்தத் தொழிலும் வருவது தமிழக நலனுக்கு நல்லதல்ல. இத்தகைய சாயப்பட்டறைகள் இயங்க தினந்தோறும் சுமார் 2 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப் படும். இந்த நீர் எங்கிருந்து வரும் என அதிகாரிகள் சொல்ல மறுக் கிறார்கள். சம்பந்தப்பட்ட இடத்தில் ஏரி, ஆறு போன்ற எந்த நீர் ஆதாரமும் இல்லாத நிலையில், தினந்தோறும் 2 லட்சம் லிட்டர் நிலத்தடி நீரை எடுத்தால், இப்பகுதி முழுவதும் உள்ள நீர் ஆதாரம் உறிஞ்சப்பட்டு மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் நியாயமானது. பூஜ்ஜி யம் டிகிரி மாசு (Zero Liquid Dis charge – ZLD) பூமிக்குள் செல்லாது என அரசு அதிகாரிகள் கூறுவதும் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த வில்லை. மக்கள் ஒத்துழைப்பும் மாற்றுத் திட்டமும் அவசியம் பொதுமக்களின் அச்சத்தைப் போக்குவது மாநில அரசின் கட மையாகும். மக்கள் எழுப்பும் சந்தே கங்களுக்கு மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடி யாகத் தெளிவு அளிக்க வேண்டும். மக்கள் எதிர்ப்பை மீறித் திட்டத் தைச் செயல்படுத்துவது அரசுக்கு நல்ல பெயரைத் தராது. எனவே, தமிழக அரசு உடனடியாக இத் திட்டத்தை நிறுத்திவிட்டு, மக்க ளுக்குப் பாதிப்பு இல்லாத பகுதியில் சாயப்பட்டறைகளை அமைக்க வேறு இடத்தை தேர்வு செய்ய யோசிக்க வேண்டும். மேலும், கனிமவளம் மிக்க மேக்னசைட் பகுதியில் இத்திட்டத்தை அமைப்பது பொருத்தமானதா என அரசு பரிசீலனை செய்ய வேண்டும். மக்கள் ஒத்துழைப்பு டன் திட்டத்தை நிறைவேற்றினால் மட்டுமே அந்தத் திட்டம் வரவேற்பு பெறும். இவ்வாறு பெ. சண்முகம் வலியுறுத்தினார். ஆய்வின்போது சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் செ. முத்துகண்ணன் உட்படப் பலரும் உடனிருந்தனர்.</p>
