தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கறிக்கோழி வளர்ப்பு தொகையை உயர்த்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

2 Feb 2026, 4:51 pm
கறிக்கோழி வளர்ப்பு தொகையை உயர்த்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
<p><strong>கறிக்கோழி வளர்ப்பு தொகையை உயர்த்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்&nbsp;மாவட்ட ஆட்சியரிடம் கறிக்கோழி பண்ணை விவசாயிகள் மனு</strong></p> <p>மதுரை, பிப்.2- கறிக்கோழி வளர்ப்பு விவசாயி களுக்கான குறைந்தபட்ச வளர்ப்பு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கறிக்கோழி பண்ணை விவசாயிகள் ஒருங்கிணைப்பு நலச்சங்கம் சார்பில், மதுரை மாவட்ட ஆட்சியரிடம் திங்களன்று மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், ஒப்பந்த விவ சாயிகளுக்கு இடையே நிலவி &nbsp;வரும் இடர்பாடுகளை களைவதற் காக இயற்றப்பட்ட விவசாய உற் &nbsp;பத்தி மற்றும் கால்நடை ஒப்பந்த &nbsp;சட்டத்தின் படி ரத்து செய்யப்பட் டுள்ளதாகவும், அதன் தொடர்ச்சி யாக இந்திய அரசு கால்நடை பரா மரிப்பு, பால்வளம் மற்றும் மீனவர் &nbsp;நலத்துறை 21.12.2021 அன்று வெளி யிட்ட அரசாணையின் அடிப்படை யில் ஒப்பந்த கறிக்கோழி வளர்ப்பு தொடர்பான விதிமுறைகள் அமல் &nbsp;படுத்தப்பட வேண்டிய அவசியம் &nbsp;இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட் டுள்ளது. தற்போது, இடுபொருள் விலை, &nbsp;பராமரிப்பு செலவுகள், நீர் தேவைக்கான செலவுகள் மற்றும் &nbsp;வாழ்வாதாரச் செலவுகள் கடுமை யாக உயர்ந்துள்ள நிலையில், கறிக்கோழி வளர்ப்பு நிறுவனங்கள் &nbsp;தங்களுக்கான உற்பத்தி செலவி னங்களை தொடர்ந்து உயர்த்தி லாபம் ஈட்டிவரும் சூழலில், விவ சாயிகளின் நலன் முற்றிலும் புறக்க ணிக்கப்படுவதாக மனுவில் தெரி விக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக ஒப் &nbsp;பந்த கறிக்கோழி வளர்ப்பில் ஈடு படும் விவசாயிகளுக்கான குறைந்தபட்ச வளர்ப்பு தொகை கிலோவுக்கு ரூ.6.50 என்ற அளவில் எந்தவித உயர்வும் இல்லாமல் தொடர்வது, விவசாயிகளை கடும் &nbsp;நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதாக வும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது &nbsp;தொடர்பாக நடத்தப்பட்ட இரு தரப்பு பேச்சுவார்த்தைகளிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்திய அரசின் கால் &nbsp;நடை பராமரிப்புத்துறை அமைச்சக &nbsp;விதிமுறைகளை தமிழகத்தில் உட னடியாக அமல்படுத்த வேண்டும். தமிழகமெங்கும் செயல்படும் கறிக்கோழி பண்ணைகளை துல்லி யமாக கணக்கெடுத்து, அதன் அடிப்படையில் தனி நலவாரியம் அமைக்க வேண்டும். கறிக்கோழி வளர்ப்பு தொழிலுக்கென மாநில &nbsp;அளவிலான நிரந்தர தொழில் மேம் &nbsp;பாட்டு கமிட்டி அமைக்க வேண்டும். &nbsp;கறிக்கோழி வளர்ப்பு தொழிலை விவசாய தொழிலாக அறிவித்து, மானிய விலை மின்சாரம் மற்றும் &nbsp;விலை இல்லா சூரிய மின் உற்பத்தி அலகுகள் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை தமிழக அரசு நீண்டகாலமாக கிடப்பில் போட்டுள்ளதாகவும், அவற்றை உடனடியாக நிறைவேற்ற வேண் &nbsp;டும் என்றும் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. மேலும் கறிக்கோழி வளர்ப்பு தொகை உயர்வு கோரி நடை பெற்ற வேலைநிறுத்த முன்னெ டுப்புகளின்போது கைது செய் யப்பட்ட விவசாய பாதுகாப்பு சங்க &nbsp;நிர்வாகிகளை எந்தவித நிபந்த னையுமின்றி உடனடியாக விடு விக்க வேண்டும் என்றும் மனுவில் &nbsp;கோரப்பட்டுள்ளது. தேனியில் கறுப்பு துணி கட்டி கோரிக்கை மனு கறிக்கோழி உற்பத்தியாளர் களுக்கு வளர்ப்புக் கூலியாக கிலோ &nbsp;ஒன்றுக்கு ரூ.20 வழங்க வேண்டும் &nbsp;உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கை களை நிறைவேற்றக் கோரி தேனி யில் கறுப்புத் துணி கட்டியவாறு ஆட்சியரிடம் மனு அளித்தனர். தேனி மாவட்ட கறிக்கோழி உற்பத்தியாளர்கள், விவசாய சங் கம் சார்பில் திங்களன்று தங்களது 10 அம்ச கோரிக்கைகளை அரசு &nbsp;நிறைவேற்றக் கோரி மனு அளித்த னர். கறிக்கோழி உற்பத்தியாளர் களுக்கு வளர்ப்புக் கூலியாக கிலோ ஒன்றுக்கு, ரூ.20, நாட்டுக்கோழி உற்பத்தியாளர்களுக்கு ரூ.25 மற்றும் காடை ஒன்றுக்கு ரூ.7 உயர்த்தி வழங்க வேண்டும். கறிக்கோழி பண்ணைகளுக்கு கட்ட ணமில்லா மின்சாரம் வழங்க வேண்டும். கறிக்கோழி பண்ணை &nbsp;விவசாயிகள் நலனுக்காக தமிழ் &nbsp;நாடு அரசு தனி நலவாரியம் அமை க்க வேண்டும். ஆண்டுதோறும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி &nbsp;கூலி உயர்வு ஒப்பந் தத்தை நடை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி கறுப்புத் துணி கட்டியவாறு மனு அளிப்பதற்காக சுமார் 50க்கும் மேற்பட்டோர் வந்த னர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.