புதர் மண்டிக் கிடக்கும் அரசு மாணவர் விடுதி கட்டடம்
12 Mar 2026, 4:20 pm
<p><strong>புதர் மண்டிக் கிடக்கும் அரசு மாணவர் விடுதி கட்டடம்</strong></p>
<p>பாபநாசம், மார்ச் 12- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அலுவலக சாலையில் அரசினர் மாணவர் விடுதி (ஆ.தி.ந) செயல்பட்டு வந்தது. கட்டடம் சேதமடைந்ததால் விடுதி செயல்படவில்லை. தற்போது இந்த விடுதி கட்டடத்தைச் சுற்றி மரம், செடி, கொடிகள் மண்டி விஷ ஜந்துக்களின் நடமாட்டம் உள்ளது. இந்த கட்டடத்தைச் சுற்றி போடப் பட்டுள்ள சுற்றுச் சுவரும் ஆங்காங்கே விரிசல் விட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த கட்டடத்தை மாவட்ட நிர்வாகம் நேரில் ஆய்வு செய்வதுடன், இந்த கட்டடத்தை இடித்து விட்டு, புதிதாக கட்டப்படும் கட்டடத்தில், பாபநாசம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு கலை, அறிவியல் கல்லூரியை ஏற்படுத்தி, சில வகுப்புகளை இயக்கலாம் என்கின்றனர் பாபநாசம் பகுதி பொதுமக்கள்.</p>
