அரசு நடத்திய பேச்சுவார்த்தை ஏமாற்றம் அளிக்கிறது
22 Dec 2025, 2:53 pm
<p><strong>அரசு நடத்திய பேச்சுவார்த்தை ஏமாற்றம் அளிக்கிறது திட்டமிட்டபடி போராட்டம்: ஜாக்டோ-ஜியோ தலைவர்கள் பேட்டி</strong></p>
<p>சென்னை, டிச.22 - அரசு நடத்திய பேச்சுவார்த்தை ஏமாற்றத்தை அளிக்கிறது என்றும், திட்டமிட்டபடி ஜன.6 முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம் நடை பெறும் என்றும் ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தொடர் போராட்டத்தை ஜாக்டோ - ஜியோ அறிவித்திருந்தது. இந்நிலையில் அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களுடன் திங்களன்று (டிச.22) தலைமைச் செயலகத்தில் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, நிதி அமைச்சர் தங்கம் தென்ன ரசு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளரகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், “பேச்சு வார்த்தை என்று சொல்லி ஜாக்டோ- ஜியோ மற்றும் அரசு ஊழியர், ஆசிரி யர் இயக்கங்களை அழைத்து, அரசு கோரிக்கை கருத்துக் கேட்பு ஆலோ சனைக் கூட்டம் நடத்தியதற்கு” கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ஜாக்டோ-ஜியோ பேர மைப்பில் அங்கம் வகிக்கும், போரா டும் சங்கங்களைத் தவிர்த்து, அரசுக்கு ஆதரவான சில சங்கங் களைப் பேசுவதற்கு அழைத்த தமிழ் நாடு அரசின் மனித வள மேலாண் மைத் துறையின் முறையற்ற செய லையும் ஜாக்டோ-ஜியோ கண்டித் துள்ளது. இதன்பின் ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மு.பாஸ்கரன், பிரபாகரன், தியோடர் ராபின்சன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஏற்கனவே திட்ட மிட்டபடி, டிச.27 அன்று மாவட்ட தலைநகரில் கருப்பு அட்டை அணிந்து வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடைபெறும். ஜனவரி 6ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும்” என்றனர்.</p>
<p> </p>
