பாஜக - அதிமுக கூட்டணியை வீழ்த்துவதே மார்க்சிஸ்ட் கட்சியின் இலக்கு! விழுப்புரத்தில் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேட்டி
10 Jan 2026, 2:48 pm
<p><strong>பாஜக - அதிமுக கூட்டணியை வீழ்த்துவதே மார்க்சிஸ்ட் கட்சியின் இலக்கு! விழுப்புரத்தில் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேட்டி</strong></p>
<p>விழுப்புரம், ஜன. 10 - தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணியை வேரறுப்பதில் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியான நிலைப் பாட்டைக் கொண்டுள்ளது என்று கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரி வித்துள்ளார். விழுப்புரத்தில் சனிக்கிழமை நடை பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்புப் பேரவை மற்றும் நிதியளிப்பு கூட்டத்தில் பங்கேற்ற பின், செய்தியாளர்க ளிடம் அவர் பேசியதன் தொகுப்பு வரு மாறு: அமெரிக்க ஏகாதிபத்தியமும் ஒன்றிய அரசின் மவுனமும் வெனிசுலா ஜனாதிபதி கடத்தப் பட்டதைக் கண்டித்து, சென்னையில் போராடிய கம்யூனிஸ்ட் தோழர்கள் மீது காவல்துறை ஏவிய வன்முறையை வன்மை யாகக் கண்டிக்கிறோம். அமெரிக்காவில் வெள்ளை மாளிகை முன்பே போராட அனுமதி உள்ள சூழலில், தமிழகத்தில் அமெரிக்கத் தூதரகம் முன்பு போராட அனுமதி மறுப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது. 135 தோழர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மேலும், இந்தியப் பொருட்கள் மீது 500 சதவிகித வரி விதிக்கப்போவதாக அமெ ரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டல் விடுத்துள் ளார். இது ஜவுளி, தோல் மற்றும் கடல் உணவு சார்ந்த தொழில்களை முடக்கி, தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் செயலாகும். இந்தியப் பொருளாதாரத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள இந்தத் தாக்குதலைக் கண்டித்து, வரும் ஜனவரி 22 அன்று தமிழ கத்தின் 10 முக்கிய மையங்களில் சிபிஎம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். பாஜகவின் அரசியல் பழிவாங்கல் மற்றும் திரைத்துறை நெருக்கடி அமலாக்கத்துறை, சிபிஐ வரிசையில் இப்போது தணிக்கைத் துறையையும் (Censor Board) ஒரு ஆயுதமாக ஒன்றிய பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது. ‘ஜன நாயகன்’ படக்குழுவினருக்குக் கொடுக்கப் படும் நெருக்கடிகள் இதற்குச் சான்று. தவெக தலைவர் விஜய், பாஜகவை பகைத்துக் கொள்ளக்கூடாது என்பதற்கா கவே இந்த விவகாரத்தில் மவுனம் காக்கி றாரா என்ற கேள்வி எழுகிறது. மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும்போது குரல் கொடுக்காத வர்கள் எப்படி மக்கள் பணியாற்றுவார்கள்? தமிழக அரசுக்கு முன்வைக்கப்படும் கோரிக்கைகள் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் போது கைரேகை பதிவு நடைமுறையில் உள்ள குளறுபடிகளைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாகப் பெயரைப் பதிவு செய்து கையெழுத்துப் பெற்றுக் கொண்டு விரைவாகப் பரிசுத் தொகுப்பை வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், சம வேலைக்கு சம ஊதியம் கோரிப் போராடும் இடை நிலை ஆசிரியர்களின் நியாயமான கோ ரிக்கையை ஏற்று அரசு உடனடியாகத் தீர்வு காண வேண்டும். தேர்தல் வாக்குறுதியான மாதாந்திர மின் கட்டண முறையை அமல் படுத்தக் கோரி ஜனவரி 13 அன்று முதல்வரை நேரில் சந்தித்து முறையிட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.</p>
