7 பேருக்கு மறுவாழ்வு அளித்த சிறுமி
25 Feb 2026, 3:22 pm
<p><strong>7 பேருக்கு மறுவாழ்வு அளித்த சிறுமி</strong></p>
<p>கோவை,பிப்.25- மூளைச் சாவு அடைந்த 8 வயது சிறுமியின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய அவ ரது பெற்றோர் முன் வந்ததன் மூலம், 7 நபர்களுக்குப் மறு வாழ்வு கிடைத்துள்ளது. கோவை மாநகராட்சி நகர் ஊர மைப்பு நிலைக்குழுத் தலைவரும், 73 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினரு மான டி.சந்தோஷ் - சுகன்யா தம்பதி யினரின் மகள் வெண்பா (8). இச் சிறுமிக்கு கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி யன்று திடீரென ஏற்பட்ட உயர் ரத்த அழுத்தம் மற்றும் மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவு காரணமாக மயக்கமடைந்தார். மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை கள் பலனின்றி, புதனன்று சிறுமி வெண்பா மூளைச் சாவு அடைந்தார். தங்களது மகளின் இழப்பால் சொல் லொணாத் துயரத்தில் இருந்த நிலை யிலும், சமூக நலன் கருதி சிறுமியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது தந்தை சந்தோஷ் மற்றும் தாய் சுகன்யா ஆகியோர் முன்வந்த னர். இதனைத் தொடர்ந்து, மருத்து வக் குழுவினர் சிறுமியின் கல்லீரல், சிறு நீரகங்கள், கண்கள், எலும்பு மற்றும் தோல் ஆகியவற்றை அறுவை சிகிச்சை மூலம் பெற்றனர். இதில் கல்லீரல் மற் றும் ஒரு சிறுநீரகம் கே.எம்.சி.எச் மருத்துவமனையிலும், மற்றொரு சிறு நீரகம், கண்கள், எலும்பு மற்றும் தோல் ஆகியவை கோவையில் உள்ள பிற தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுப்பப்பட்டன. தங்களது மகளின் உடல் உறுப்பு கள் மூலம் 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத் துள்ளது என்பது தங்களுக்கு பெருமி தம் அளிப்பதாக சிறுமியின் பெற்றோர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். சிறுமியின் இந்த உயரிய தியாகம் மற்றும் பெற்றோரின் மனிதாபிமானச் செயல், பொதுமக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் எனப் பலரும் நெகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.</p>
<p> </p>
