தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அனைத்துத் தரப்பினருக்கும் பட்ஜெட் மூலம் ஒன்றிய அரசு வழங்கிய பரிசு ‘ஏமாற்றம்’

1 Feb 2026, 3:51 pm
அனைத்துத் தரப்பினருக்கும் பட்ஜெட் மூலம் ஒன்றிய அரசு வழங்கிய பரிசு ‘ஏமாற்றம்’
<p><strong>அனைத்துத் தரப்பினருக்கும் பட்ஜெட் மூலம் ஒன்றிய அரசு வழங்கிய பரிசு &lsquo;ஏமாற்றம்&rsquo;</strong></p> <p>கோவை, பிப்.1- தற்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட் ஜெட் மூலம், ஒன்றிய அரசு ஏமாற்றத் தையே பரிசாக வழங்கியுள்ளதாக பல் வேறு தொழில் துறையினர் தெரிவித் துள்ளனர். ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் 2026-27 &nbsp;ஆண்டுக்கான நிதிநிலை அறிக் கையை வெளியிட்டார். அமெரிக்கா வரி விதிப்பால் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ள ஜவுளி மற்றும் சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் மிகப்பெரிய ஏமாற்றத்தை இந்த நிதிநிலை அறிக்கை ஏற்படுத்தி யுள்ளது. &nbsp;தங்க இறக்குமதி வரியை குறைக்காதது ஏமாற்றம் &ldquo;கடந்தாண்டு பட்ஜெட்டில் ஒன்றிய &nbsp;நிதியமைச்சர் தங்கத்திற்கான இறக்கு மதி வரியை 15 சதவீதத்திலிருந்து 6 &nbsp;சதவீதமாகக் குறைத்த நிலையில், இந் தாண்டு அதனை மேலும் 3 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என நகை வியா பாரிகள் சார்பில் கோரிக்கை வைக்கப் பட்டிருந்தது. குறிப்பாக, கடந்த ஓராண்டு காலத்தில் தங்கத்தின் விலை &nbsp;ஒரு கிராமுக்கு 10,000 ரூபாயிலிருந்து 17,000 ரூபாய் வரை சுமார் 70 சதவீ தம் உயர்ந்துள்ளது. தங்கத்தின் அடிப் படை விலை இவ்வளவு பிரம்மாண்ட மாக உயர்ந்துள்ள நிலையில், வரியை &nbsp;3 சதவீதமாகக் குறைத்திருந்தாலும் அரசுக்குக் கிடைக்கும் வருவாயில் எந்த பாதிப்பும் ஏற்பட்டிருக்காது. மேலும், இறக்குமதி வரி அதிகமாக &nbsp;இருப்பது இந்தியா முழுவதும் சட்ட விரோத தங்கக் கடத்தல் அதிகரிக்க &nbsp;முக்கிய காரணமாக அமைகிறது. &nbsp;வரியை குறைப்பதன் மூலம் கடத் தலை தடுத்து, வெளிப்படையான வர்த்தகத்தை ஊக்குவிக்க முடியும். &nbsp;நகை வியாபாரிகளின் நீண்ட கால எதிர் பார்ப்பான இந்த வரிக்குறைப்பு குறித்து ஒன்றிய பட்ஜெட்டில் அறி விப்பு வராதது ஏமாற்றமளிக்கிறது&rdquo; என தமிழ்நாடு நகை வியாபாரிகள் கூட்டமைப்பு மற்றும் கோயம்புத்தூர் ஜுவல்லர்ஸ் அசோசியேஷன் தலை வர் சபரிநாத் தெரிவித்துள்ளார். சிறு தொழில்களை நசுக்கும்., &nbsp;&ldquo;கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட &nbsp;22,000 கோடி ரூபாய் எவ்விதப் பயனும் &nbsp;அளிக்கவில்லை என்று ஒன்றிய &nbsp;அரசிடம் முறையிட்டு வந்த நிலையில், &nbsp;தற்போதைய பட்ஜெட்டில் அந்த தொகையை 10,000 கோடி ரூபாயாக ஒன்றிய அரசு குறைத்துள்ளது சிறு தொழில் முனைவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) ஒரு &nbsp;சதவீதமான சுமார் 3.50 லட்சம் கோடி &nbsp;ரூபாயை தொழில்துறையின் பாது காப்பிற்கு ஒதுக்க வேண்டும் என்ற &nbsp;கோரிக்கை முற்றிலுமாக புறக்கணிக் கப்பட்டுள்ளது. மேலும், சிறு தொழில் களை பாதுகாத்திட நிறுத்தப்பட்ட 15 &nbsp;சதவீத மானியத்தை மீண்டும் வழங்க &nbsp;வேண்டும், வெட் கிரைண்டர், கம்ப்ர ஸர், ஜாப் ஆர்டர்கள் மற்றும் பம்ப் செட் மோட்டார்களுக்கான ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் குறித்து இந்த பட்ஜெட்டில் எந்த அறி விப்பும் இல்லை. மூலப்பொருள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த விலை நிர்ணயக் கமிட்டி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிரா கரிக்கப்பட்டுள்ளது. வங்கிக் கடன் களை திருப்பிச் செலுத்துவதில் உள்ள நெருக்கடியை கருத்தில் கொண்டு, சட்ட நடவடிக்கை மேற் கொள்வதற்கான கால அவகாசத்தை 180 நாட்களாக மாற்ற வேண்டும் என்ற &nbsp;வலியுறுத்தலையும் ஒன்றிய அரசு ஏற்க வில்லை. ஒட்டுமொத்தத்தில் இந்த பட் ஜெட் சிறு தொழில்களை முடக்கும் வகையிலேயே அமைந்துள்ளது&rdquo; என டாக்ட் சங்கத்தின் தலைவர் ஜே. ஜேம்ஸ் வேதனையுடன் தெரிவித்துள் ளார். முதலீட்டாளர்களை ஏமாற்றிய ஒன்றிய அரசு இந்திய வர்த்தக சபை (ICC) அமைப்பின் பிரதிநிதி அண்ணாமலை, ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள 2026-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை குறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், &ldquo;உலகளாவிய அரசியல் பதற்றங்கள் &nbsp;மற்றும் அமெரிக்காவின் பொருளா தார மாற்றங்களால் ஏற்கனவே கடந்த &nbsp;ஓராண்டாக தொடர் நட்டத்தை சந்தித்து &nbsp;வரும் முதலீட்டாளர்களுக்கு, இந்த பட் ஜெட் மிகப்பெரிய ஏமாற்றத்தையே பரி சாகத் தந்துள்ளது. சந்தைக்கு தேவை யான உத்வேகத்தை வழங்க தவறிய துடன், புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் எந்த ஒரு ஊக்கத் திட்டமும் &nbsp;இதில் இடம் பெறாதது கவலையளிக் கிறது. குறிப்பாக, நிறுவனங்கள் தங்க ளது பங்குகளை திரும்பப் பெறு வதற்கான வரி உயர்த்தப்பட்டிருப்பது தொழில் முனைவோரை தளர்வடைய &nbsp;செய்யும். அதேபோல் பத்திரப் பரிவர்த் தனை வரியின் (STT) உயர்வு காரண மாக டெரிவேட்டிவ் சந்தையில் வர்த்த கம் செய்வதற்கான செலவு பல மடங்கு &nbsp;அதிகரிக்கும். இத்தகைய கூடுதல் வரி கள் முதலீட்டாளர்களின் லாபத்தை குறைப்பதோடு, வர்த்தகத்தின் அள வையும் பெருமளவு வீழ்ச்சியடையச் செய்யும். கடந்த ஓராண்டாக வெளி நாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையிலிருந்து வெளியேறி வரும் &nbsp;நிலையில், சில்லறை முதலீட்டாளர் கள் தங்களின் முதலீடுகளை பாது காக்க பட்ஜெட்டில் ஏதேனும் சலுகை கள் வரும் என்று காத்திருந்தனர். ஆனால், நம்பிக்கையூட்டும் எந்த அறி விப்பும் இல்லாததால், சந்தை வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் இந்த &nbsp;இக்கட்டான நேரத்தில் புதிய முதலீடு களை செய்ய முடியாமல் சாமான்ய முதலீட்டாளர்கள் நடுத்தெருவில் விடப்பட்டுள்ளனர்&rdquo; என்றார். இயற்கை வளங்களைப் பாதுகாக்க., &lsquo;சிறுதுளி&rsquo; அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், ஒன் றிய அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கை குறித்து கூறுகையில், &ldquo;இயற்கை ஆர்வலர்களின் கண் ணோட்டத்தில் பார்த்தால் இந்த பட் ஜெட் ஏமாற்றத்தையே அளிக்கிறது. தற்போது நாம் எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய அச்சுறுத்தல்களான காற்று மாசுபாடு மற்றும் நீர் மாசுபாடு ஆகியவற்றை கட்டுப்படுத்த முறை யான நிதி ஒதுக்கீடோ அல்லது &nbsp;திட்டங்களோ இதில் இடம்பெற வில்லை. இது மனிதர்களை மட்டுமல் லாமல், வனவிலங்குகள் மற்றும் ஒட்டு மொத்த சூழலியலையும் பாதிக்கும் விஷயமாகும். சுற்றுலா மற்றும் மலை யேற்றம் போன்றவற்றுக்கு அனுமதி &nbsp;அளிக்கும்போது முறையான கட்டுப் பாடுகள் விதிக்கப்படுவதில்லை. உதா ரணமாக, வெள்ளியங்கிரி மலை &nbsp;போன்ற இடங்களுக்கு செல்பவர்கள் பிளாஸ்டிக் கழிவுகளை வீசிச் செல் வதால் வனவிலங்குகளும் நீர்நிலைக ளும் கடுமையாகப் பாதிக்கப்படு கின்றன. இயற்கை வளங்களை பெருக்குவதற்குப் பதிலாக, அவற்றை &nbsp;அழிப்பதற்கான வழிகளையே நாம் உருவாக்கி வருகிறோம். மேலும், பெருகி வரும் மக்கள் &nbsp;தொகைக்கு ஏற்ப கழிவு மேலாண் மைக்கு (Waste Management) இந்த &nbsp;பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப் படவில்லை. கழிவு மேலாண்மைக் கென தனி அமைச்சகத்தை உரு வாக்க வேண்டும் என்பது எங்கள் நீண்ட &nbsp;நாள் கோரிக்கையாகும். திடக் கழிவு மற்றும் சாக்கடைக் கழிவுகளை மேலாண்மை செய்ய தனிக் கவனம் செலுத்த வேண்டும். இதனை வணிக மயமாக்குவதில் தவறில்லை; சுய உத விக்குழுக்கள் மற்றும் சிறு தொழில் முனைவோருக்குப் போதுமான மானி யங்களை வழங்கி, கழிவு மேலாண்மை திட்டங்களில் அவர் களை ஈடுபடுத்தினால் மட்டுமே சுற்றுச் சூழலை பாதுகாக்க முடியும்&rdquo; என தெரிவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.