பெயர் மட்டுமல்ல, குணமே மாறிய ‘ஜி ராம் ஜி’ மசோதா உழைக்கும் மக்கள் மீதான நேரடித் தாக்குதல்!
18 Dec 2025, 3:48 pm
<p><strong>பெயர் மட்டுமல்ல, குணமே மாறிய ‘ஜி ராம் ஜி’ மசோதா உழைக்கும் மக்கள் மீதான நேரடித் தாக்குதல்! </strong></p>
<p>இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அகற்றிவிட்டு, மனுவாதச் சட்டத்தை நிலைநிறுத்தத் துடிக்கும் பாஜக அரசு, புதிய சட்டங் கள் என்ற பெயரில் தற்போதுள்ள உரிமைகளை நீர்த்துப்போகச் செய்து வருகிறது. வேளாண் சட்டங் கள், தொழிலாளர் சட்டத் தொகுப்பு, தேசியக் கல்விக் கொள்கை என அனைத்துப் பிரிவு மக்களுக்கும் எதிராகத் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தி வருகிறது. அடிவேரை அகற்றத் துணை வேர்களை வெட்டும் இந்த அரசியல் சூழ்ச்சியின் ஒரு பகுதி யாகவே, தற்போது ‘விக்சித் பாரத் – வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வா தாரத்திற்கான உத்தரவாதத் திட்டம்’ (ஜி ராம் ஜி 2025) என்ற பெயரில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமான வேலை உறுதிச் சட்டத்தை அழிக்க முற்படுகிறது. போராடிப் பெற்ற வேலை உரிமைச் சட்டம் கிராமப்புறங்களில் பொருளா தார ரீதியாகப் பாதாளத்தில் தள்ளப் பட்டு, சமூக ரீதியாக ஒடுக்கப்பட்டு ள்ள விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க நீண்ட போராட்டங்கள் நடந்தன. வறு மை, பசி, பட்டினி மற்றும் மாநிலம் விட்டு மாநிலம் குடிபெயர்ந்து சொல்லொணாத் துயரங்களுக்கு மக்கள் உள்ளானபோது, வேலை மற்றும் கூலியைச் சட்டப்பூர்வமாக்க இடதுசாரிகளும், விவசாயத் தொழி லாளர் சங்கங்களும் தொடர் போரா ட்டங்களை நடத்தின. இதன் விளை வாக, 2005 ஆம் ஆண்டு இடது சாரிகள் கொடுத்த அரசியல் அழுத்தத்தால் அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத் தால் கொண்டுவரப்பட்டதுதான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம். நாடு விடு தலை அடைந்த பின் வேலை வாய்ப்பினை அடிப்படை உரிமை யாக்கித் தரப்பட்ட முதல் சட்டமாகும் இது. வெற்றியின் சின்னமான வேலை உறுதிச் சட்டம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு, கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்திற்கும் பொரு ளாதாரத்திற்கும் அதன் மதிப்பை நிரூபித்துள்ளது. குறிப்பாகப் பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைக்குப் பெரும் உதவியாக மாறியது. விவசாயத் தொழிலாளர்களின் ஊதியம் குறை வதைத் தடுத்து, அது நிலையாக இருக்கவும் வழிவகுத்தது. இத்திட்ட த்தைத் தோல்வியின் சின்னம் எனக் கேலி செய்த பிரதமர் மோடி அவர்கள், பின்னாளில் மக்களின் ஆதரவைப் பார்த்துவிட்டு ‘வறுமை யை ஒழிக்கத் தவறிய காங்கிர ஸின் நினைவுச்சின்னம்’ என்றார். உண்மையில், இது கிராமப்புற உழைக்கும் மக்களின் இடை விடாத போராட்டத்தால் வென்றெடுக் கப்பட்ட வெற்றியின் சின்னமாகும். மத்திய அரசின் தொடர் தாக்குதல்கள் சுமார் 2.64 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கினால் மட்டுமே இத்திட்டத்தில் முழுமையாக நூறு நாள் வேலை வழங்க முடியும். ஆனால், மத்திய அரசு போதிய நிதி ஒதுக்காமல் பல்வேறு நிபந்தனைகளை விதித்து கோடிக்கணக்கான மக்களை வேலையிலிருந்து அகற்றியது. மெல்ல மெல்லப் பட்டினி போட்டுக் கொல்ல நினைத்த அரசு, தற்போது புதிய மசோதாவைக் கொண்டு வந்து இச்சட்டத்தைத் தூக்கிலிடப் பார்க்கிறது. கடந்த டிசம்பர் 16 அன்று மக்களவையில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி இப்புதிய மசோ தாவை மத்திய அமைச்சர் அறி முகப்படுத்தியுள்ளார். 44 பக்கங் களைக் கொண்ட இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது கொடுமையாகும். வேலை வாய்ப்பைப் பறிக்கும் மோசடி புதிய மசோதாவின் பிரிவு-6, உச்சகட்ட விவசாயப் பருவ காலங்களில் 60 நாட்கள் வேலை வழங்கக் கூடாது என வலியுறுத்து கிறது. இது ஏற்கெனவே இருக்கும் உரிமையைப் பறிக்கும் மோசடி யாகும். விவசாயப் பணிகளுக்குத் தொழிலாளர்கள் எளிதாகக் கிடைக்க வேண்டும் என மத்திய அரசு கூறு வது, நிலவுடைமையாளர்கள் மீதான அவர்களின் வர்க்கப் பிணைப்பையே காட்டுகிறது. தொழி லாளர்களை எப்போதும் நிலப் பிரபுக்களைச் சார்ந்து இருக்கச் செய்யும் இந்த முயற்சியை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மாநிலங்கள் மீது சுமையை ஏற்றித் தப்பிக்கும் சூழ்ச்சி கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைத்து வரும் பாஜக அரசு, நிதிப் பங்கீட்டிலும் பெரும் முறை கேட்டைச் செய்கிறது. இதுநாள் வரை மத்திய அரசு ஏற்று வந்த நிதிப் பொறுப்பை மாற்றி, இனி மத்திய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீதம் என நிதி ஒதுக்கீடு செய்ய புதிய மசோதா வலியுறுத்துகிறது. ஏற்கனவே நிதியின்றித் தவிக்கும் மாநிலங்கள் மீது இந்தச் சுமையை ஏற்றி, இத்திட்டத்தைப் பலவீனப் படுத்த மத்திய அரசு முயல்கிறது. மேலும், வேலை வழங்கத் தவறினால் அதற்கான இழப்பீட்டையும் மாநி லங்களே வழங்க வேண்டும் என் பது மாநிலங்களுக்குக் கூடுதல் சுமையாகும். நாளை இத்திட்டத்தில் சிக்கல் வரும்போது மாநில அரசு களைக் கைகாட்டி மத்திய அரசு தப்பித்துக் கொள்ளும். விண்ணப்பிக்கும் அனைவரு க்கும் வேலை என்ற உரிமையை மறுத்து, அதை ஒரு சாதாரணத் திட்டமாக மாற்றும் மத்திய அரசின் இந்த அராஜகத்திற்கு எதிராக உழைக்கும் வர்க்கம் ஒன்றுதிரள வேண்டும். இன்று (டிசம்பர் 19) அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெறும் மாநிலந்தழுவிய கண்டனப் போராட்டங்களில் உழைக்கும் மக்கள் அனைவரும் திரளாகப் பங்கேற்க வேண்டும். </p>
