தீபமலை எதிரே குவிந்து கிடக்கும் குப்பைகள் புதிய மாநகராட்சியின் அவலம்!
21 Dec 2025, 3:21 pm
<p><strong>தீபமலை எதிரே குவிந்து கிடக்கும் குப்பைகள் புதிய மாநகராட்சியின் அவலம்!</strong></p>
<p>திருவண்ணாமலை,டிச.21- திருவண்ணாமலை தீப மலை எதிரே ஆயிரக்க ணக்கான மக்கள்குடி யிருக்கும் வேங்கிக்கால் பகுதிகளில் குப்பைமேடுகள் பரவலாககுவிந்து கிடப்ப தால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்ஏற்பட்டுள் ளது. அந்தகுப்பைமேடு களை அகற்றவேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவண்ணாமலை தீப மலை எதிரே, வேலூர் சாலையில் அமைந்துள்ளது வேங்கிக்கால் பகுதி.வேங்கிக்கால் ஊராட்சியாக இருந்த இந்தப்பகுதி,இந்தஆண்டுதிருவண்ணாமலை மாநகராட்சியுடன் இணைக் கப்பட்டது, இதனால் வேங்கிக்கால் இப்போது திருவண்ணாமலை மாநக ராட்சியின் ஒருபகுதியாக, வார்டு 39 ஆகஉள்ளது. இந்த இணைப்பின் மூலம் வேங்கி க்காலில் உள்ள சொத்து வரி உள்ளிட்ட அனைத்து வரி களும் மாநகராட்சி மூல மாக வசூலிக்கப்படுகின்றன. திருவண்ணாமலை நக ராட்சியை மாநகராட்சியாகத் தரம்உயர்த்தியபோது, அதனுடன் இணைக்கப்பட்ட 18 கிராமஊராட்சிகளில் வேங்கிக்கால் பகுதியும் ஒன்று.மாநகராட்சியாக மாறிய பிறகு வேங்கிக்கால் பகுதியில் உள்ள பிரதான சாலையான வேலூர் சாலையில் மட்டும் மேம் பாட்டு பணிகள் நடை பெற்றுள்ளது. மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதி களில் எவ்விதஅடிப்படை வசதிகளும் செய்யப்பட வில்லை. சாலைவசதி, குடிநீர், மின்விளக்கு, கழிவு நீர் கால்வாய் என எவ்வித மேம்பாட்டு பணிகளும் நடை பெறவில்லை. வேங்கிக் கால் பகுதியில் மக்கள் குடியிருக்கும் அனைத்து பகுதிகளிலும் குப்பைமேடு கள் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுகா தார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவேதிருவண்ணாமலை மாநகராட்சி நிர்வாகம் வேங்கிக்கால் பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பை களை அகற்ற உரியநட வடிக்கை எடுக்கவேண்டும் எனஅப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
<p> </p>
