தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழகத்தின் எதிர்காலத்தை வஞ்சகக் கூட்டத்திடம் ஒப்படைக்க முடியாது!

1 Apr 2026, 4:02 pm
தமிழகத்தின் எதிர்காலத்தை வஞ்சகக் கூட்டத்திடம் ஒப்படைக்க முடியாது!
<p><strong>தமிழகத்தின் எதிர்காலத்தை வஞ்சகக் கூட்டத்திடம் ஒப்படைக்க முடியாது!</strong></p> <p>திருவாரூர், ஏப்.1- &nbsp;2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரத்தைத் திரு வாரூர் மண்ணிலிருந்து செவ்வா யன்று தொடங்கிய தமிழக முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், தில்லி பா.ஜ.க &nbsp;தலைமையிலான என்.டி.ஏ கூட்ட ணியையும், அதற்குத் துணை போகும் அ.தி.மு.க-வையும் கடுமை யாகச் சாடினார். &ldquo;தமிழகத்தின் வளர்ச்சிப் &nbsp;பாதையைச் சிதைக்கத் துடிக்கும் வஞ்சகக் கூட்டத்தை வேரோடு வீழ்த்த வேண்டும்&rdquo; என அவர் மக்களிடம் அறைகூவல் விடுத்தார். &nbsp;அரசியல் சதுரங்கத்தில் தில்லி (எதிர்) தமிழ்நாடு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற் றிய முதலமைச்சர், இந்தத் தேர்தலை &nbsp;&lsquo;தமிழ்நாடு அணி மற்றும் தில்லி &nbsp;அணி&rsquo;க்கு இடையிலான போராக வர் ணித்தார். &ldquo;பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி என்பது தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்கத் துடிக்கும் ஒரு &nbsp;சந்தர்ப்பவாதக் கூட்டணி. 2014 முதல் &nbsp;இந்தியாவை மோசமான நிலைக்கு &nbsp;அழைத்துச் சென்ற பாஜக-விடம், &nbsp;அதிமுக சரணாகதி அடைந்துள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் பழனி சாமி இன்று பாஜக-வின் கிளைச் செய லாளராக மாறி, தமிழகத்தின் தன் னாட்சி அதிகாரத்தைத் தாரைவார்த்து வருகிறார்&rdquo; என்று குற்றம் சாட்டினார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை, சென்னை மெட்ரோ ரயில் திட்ட நிதி &nbsp;மற்றும் ஓசூர் விமான நிலைய அனு மதி போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த கோரிக்கைகளைத் தில்லி அரசு திட்டமிட்டுப் புறக்கணிப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், &ldquo;இந்தித் திணிப்பை ஏற்கவில்லை என்பதால் நம் வீட்டுக் குழந்தைகளின் கல்வி &nbsp;நிதியைக்கூடத் தில்லி அரசு வழங்க &nbsp;மறுக்கிறது. இத்தகைய வஞ்சகக் கூட்டத்திடம் தமிழகத்தின் எதிர்கா லத்தை ஒப்படைக்க முடியுமா?&rdquo; எனக் கேள்வி எழுப்பினார். பொருளாதார மறுமலர்ச்சிக்கான வாக்குறுதிகள் அதிமுக-வின் தேர்தல் அறிக்கை திமுக-வின் திட்டங்களை நகலெடுத்து உருவாக்கப்பட்டதாக விமர்சித்த முதல மைச்சர், திமுக-வின் தேர்தல் அறிக் கையை &lsquo;திராவிட மாடல் 2.0&rsquo; எனப் &nbsp;பிரகடனப்படுத்தினார். இதில் இடம் பெற்றுள்ள முக்கிய அரசியல்-பொரு ளாதாரத் திட்டங்கள்: * குடும்பத் தலைவிகளுக்கு ரூ.8,000 கூப்பன்: குடும்பத் தலைவி களுக்குத் தேவையான வீட்டு உபயோ கப் பொருட்களை வாங்க அல்லது மாற்றிக் கொள்ள ரூ.8,000 மதிப்பி லான கூப்பன்கள் வழங்கப்படும். * மகளிர் உரிமைத் தொகை உயர்வு: தற்போதைய உரிமைத் தொகை &nbsp;மாதம் ரூ.2,000-ஆக உயர்த்தப்படும். * விவசாயிகள் மற்றும் மீன வர்கள் நலன்: டெல்டா மண்டல விவ சாயிகளுக்காக நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3,500- ஆகவும், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,500-ஆகவும் உயர்த்தி வழங்கப் படும். 20 லட்சம் விவசாயிகளுக்கு இலவச நவீன மின்சார பம்புசெட்டுகள் வழங்கப்படும். * கல்வி ஊக்கத்தொகை: புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல் வன் திட்டங்கள் மூலம் வழங்கப்படும் உதவித்தொகை மாதம் ரூ.1,500-ஆக உயர்த்தப்படும். 35 லட்சம் மாண வர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப் படும். டெல்டா மண்டலத்திற்கான சிறப்பு வளர்ச்சித் திட்டம் கடந்த கால சாதனைகளாகச் சிப்காட் தொழில் வளாகங்கள், அரசு &nbsp;மருத்துவக் கல்லூரிகள் மற்றும் குடி நீர்த் திட்டங்களை வரிசைப்படுத்திய முதலமைச்சர், வரும் ஐந்தாண்டு களில் டெல்டா மாவட்டங்களின் உட் கட்டமைப்பை முற்றிலுமாக மாற்றிய மைக்க ரூ.20,000 கோடி ஒதுக்கப் படும் என அறிவித்தார். மன்னார்குடி மற்றும் கூத்தாநல்லூர் பகுதிகளில் புதிய தொழில் பூங்காக்கள் மற்றும் ஆறுகளைப் புனரமைக்கும் பணி களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார். கலவர பூமியாக மாற்றத் துடிக்கும் சதி முறியடிப்பு &ldquo;தமிழகத்தை எப்படியாவது கலவர பூமியாக்கி லாபம் அடையலாம் எனத் &nbsp;திட்டமிட்டுப் போலிச் செய்திகளைப் பரப்பியவர்களின் சதி முறியடிக்கப்பட்டு உள்ளது. தமிழகம் இன்று அமைதிப் பூங்காவாகத் தலைநிமிர்ந்து நிற்கிறது. &nbsp;தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சி தொட ரவும், உரிமைகள் காக்கப்படவும் உதய சூரியன் மற்றும் கூட்டணிக் கட்சி களின் சின்னங்களுக்கு மக்கள் வாக்க ளிக்க வேண்டும்&rdquo; என அவர் கேட்டுக் கொண்டார். இந்தத் தேர்தல் பரப்புரையில் வேட் பாளர்கள் பூண்டி கலைவாணன் (திருவாரூர்), டி.ஆர்.பி. ராஜா (மன்னார் குடி), மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி) மற்றும் முகமது முபாரக் (நன்னிலம்) ஆகியோரை ஆதரித்துப் பெருவாரி யான வாக்குகள் சேகரிக்கப்பட்டன.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.