விவசாய நிலத்தில் சூரிய மின்வேலி அமைக்கும் வனத்துறை பிக்லி மலைவாழ் மக்கள் கடும் எதிர்ப்பு
30 Mar 2026, 3:40 pm
<p><strong>விவசாய நிலத்தில் சூரிய மின்வேலி அமைக்கும் வனத்துறை பிக்லி மலைவாழ் மக்கள் கடும் எதிர்ப்பு</strong></p>
<p>தருமபுரி, மார்ச் 30- தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனத்துறை சார்பில் கோலாப்பட்டி முதல் கொட்டூர்மலை வரை சுமார் 15 கி.மீ தூரத்திற்கு ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் சூரிய மின்வேலி அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. தற்போது இப்பணி இறுதி நிலையை எட்டியுள்ளது. இந்நிலையில், பிக்லி அருகே யுள்ள மலைவாழ் விவசாயிகள், தங்கள் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் சூரிய மின்வேலி குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ள னர். இந்த மின்வேலி விவசாய நிலங்கள் வழியாகச் செல்வதால், தங்களது விளைநிலங்கள், மரங்கள் மற்றும் கிணறுகளை அணுக முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக பிக்லியைச் சேர்ந்த வி.வெற்றி கூறுகையில், “வனப்பகுதியை ஒட்டியுள்ள 10 ஏக்கர் நிலத்தில் சுமார் 20 மலைவாழ் குடும்பங்கள் விவசாயம் செய்து வருகிறோம். தற்போது வனத்துறை விளைநிலங்களுக்குள்ளேயே மின்வேலித் தூண்களை அமைத்து வருவதால், எங்களது பயிர்களை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது நேரடியாக எங்கள் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும். அதே போல 2 கி.மீ சுற்ற ளவு கொண்ட தாங்கல் பகுதிகளில் கால்நடைகளை மேய்க்க முடியாத சூழல் உருவாகியுள்ளது” என அவர் குற்றம்சாட்டினார். மற்றொரு குடியிருப்பாளரான எஸ்.பெருமாள் கூறுகையில், “எங்கள் மயானத்திற்குச் செல்லும் பாதையும் இதனால் முடக்கப் பட்டுள்ளது. சூரிய மின்வேலியை ஒரு சாக்காக வைத்து எங்களை இந்தப் பகுதியிலிருந்து விரட்டப் பார்க்கிறார்கள். மின்வேலியை ஒரு 200 மீட்டர் தள்ளி அமைத்தால் எந்தப் பாதிப்பும் இருக்காது. ஆனால் வனத்துறை அதற்கு மறுக்கிறது” என அவர் குற்றம்சாட்டினார்.</p>
