முந்தய பக்கம்

குன்னூர் கிளையின் முதல் பெண் நடத்துநர் நியமனம்!

8 Feb 2026, 3:55 pm
குன்னூர் கிளையின் முதல் பெண் நடத்துநர் நியமனம்!
<p><strong>குன்னூர் கிளையின் முதல் பெண் நடத்துநர் நியமனம்!</strong></p> <p>உதகை, பிப்.8- அரசு போக்குவரத்துக் கழகத்தின் குன்னூர் கிளையின் முதல் பெண் நடத்துநராக தீபா என்பவர் பணியமர்த் தப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே &nbsp;உள்ள ஓட்டுப்பட்டறை பகுதியை சேர்ந்தவர் ரவி. தமிழ்நாடு அரசின் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுந ராக பணியாற்றி வந்த இவருக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதன்பின் சிகிச்சையில் இருந்தபோது, உயிரிழந்தார். ரவி யின் இழப்பால் அவரின் மனைவி மற்றும் இரண்டு மகன்கள் கடுமை யான இன்னலுக்குள்ளாகினா். இதைய டுத்து, ரவியின் ஓட்டுநர் பணிக்கு இணை யாக அவரின் மனைவி தீபாவுக்கு அரசு பேருந்து நடத்துநர் பணி வழங்கி, தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழகம் &nbsp;ஆணை பிறப்பித்தது. இதைத்தொ டர்ந்து, பணி நியமன ஆணையை பெற்றுக் கொண்ட தீபா, அரசு போக்கு வரத்துக் கழகத்தின் குன்னூர் கிளை யின் முதல் பெண் நடத்துநராக தற் போது பணியை தொடங்கியுள்ளார். நீல கிரி மாவட்டம், கோத்தகிரி அரசு போக் குவரத்துக் கழகத்தில் கடந்தாண்டு பெண் ஒருவர் நடத்துநராக நியமிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram