தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அணையாத அறிவுத் தீ காரணமாகவே கலவரத் தீயைப் பற்ற வைக்க முடியவில்லை! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்

23 Dec 2025, 4:05 pm
அணையாத அறிவுத் தீ காரணமாகவே கலவரத் தீயைப் பற்ற வைக்க முடியவில்லை! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்
<p><strong>அணையாத அறிவுத் தீ காரணமாகவே கலவரத் தீயைப் பற்ற வைக்க முடியவில்லை! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்</strong></p> <p>சென்னை, டிச. 23 - தமிழ்நாட்டில் அறிவுத் தீ அணையாமல் இருப்பதால்தான் கலவர தீயை பற்ற வைக்க முடியவில்லை என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எழுத்தாளர் ப. திருமாவேலன் எழுதிய &lsquo;தீரர்கள் கோட்டம் திமுக&rsquo;, &lsquo;திராவிட அரசியல் - திராவிட அரசு இயல்&rsquo;, &lsquo;முறைசெய்து காப்பாற்றும் முதலமைச்சர்&rsquo; ஆகிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு நூல்களை வெளியிட்டார். பின்னர் விழாவில் பேசிய அவர், &ldquo;நூறாண்​டு​களுக்கு முன்​பு, தமிழகம் எப்​படி இருந்​தது; இன்று எப்​படி இருக்​கிறது. இதே கால​கட்​டத்​தில், நாட்​டின் பிற மாநிலங்​கள் அடைந்​திருக்​கும் சமூக வளர்ச்சி - பொருளா​தார வளர்ச்சி - உட்​கட்​டமைப்பு வளர்ச்சி என்ன? மற்ற எல்​லோரை​யும் விட, அனைத்து வகை​யிலும் நாம் இரு​பது ஆண்​டு​கள் முன்​னோக்கி பயணித்​துக் கொண்​டிருக்​கிறோம். நம்மை எப்படி கார்னர் செய்வது என்று தெரியாமல் எதிரிகள் புலம்புகிறார்கள்&rdquo; என்று முதலமைச்சர் தெரிவித்தார். மேலும், &ldquo;புத்தக வாசிப்புதான் மனதை ஒருமுகப்படுத்துகின்ற தியானம். அதனால் ஒரு நாளைக்கு அரை மணி நேரம் அல்லது 15 நிமிடங்களாவது புத்தகங்களை வாசியுங்கள். உங்களைப் பார்த்து வீட்டில் உள்ள குழந்தைகளும் பின்பற்றுவார்கள். பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் தான் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்&rdquo; என்று கேட்டுக்கொண்ட திருமாவேலன், &ldquo;அறிவுத் தீ அணையாமல் இருப்பதால்தான் நம் ஊரில் கலவரத் தீயை பற்ற வைக்க முடியவில்லை. வாசிப்பும், வளர்ச்சியும் ஒன்றோடொன்று தொடர்புடையது. நிமிர்ந்த தமிழ்நாடு ஒருநாளும் தலைகுனியாது. பாசிசவாதிகளின் பகல்கனவு இங்கு பலிக்காது. வரலாற்றைப் படிப்போம், தொடர்ந்து வரலாறு படைப்போம்&rdquo; என்று குறிப்பிட்டுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.