தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சகதியும் துர்நாற்றமும் மக்களை வாட்டி வதைக்கிறது!

19 Nov 2025, 3:33 pm
சகதியும் துர்நாற்றமும் மக்களை வாட்டி வதைக்கிறது!
<p><strong>சகதியும் துர்நாற்றமும் மக்களை வாட்டி வதைக்கிறது!</strong></p> <p>விழுப்புரம் மாவட்டம், வழுத ரெட்டி பகுதியில் சுமார் 10 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு செயல்பட்டு வரும் நகர்புற மக்கள் நல்வாழ்வு மையத்தில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் உள்ளிட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த மருத்துவ நல்வாழ்வு மையத்திற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக வந்து மருந்து மாத்திரைகள் வாங்கிச் செல்கின்றனர். மருத்துவமனை ஊரின் மத்திய பகுதியில் அமைந்திருந்த போதிலும், செல்லும் வழியில் தண்ணீர் தேங்கி எப்போதும் சேரும் சகதியுமாக இருப்பதால், மருத்துவ நல்வாழ்வு மைய வளாகத்தில் துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கிறது. நல்வாழ்வு மையத்திற்கு சிகிச்சைக்காக செல்வோர் மூக்கைப் பிடித்துக்கொண்டுதான் செல்லும் நிலை தொடர்கதையாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தேங்கிக் கிடக்கும் சேரும் சகதியில் படாமல் மெதுவாக நடந்தாலும் சில நேரங்களில் வயதானவர்கள், குழந்தைகள் வழுக்கி விழும் அவல நிலையும் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலை குறித்து நகராட்சி மற்றும் மாவட்ட சுகாதாரத்துறையின் கவனத்திற்கு அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் இதுவரை யாரும் நட வடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அப்பகுதி மக்கள், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் அல்லது நகராட்சி கவுன்சிலர், நாடாளுமன்ற உறுப்பினர் யாராவது நல்வாழ்வு மைய வளாகத்திற்கு சிமெண்ட் தரை போடாவிட்டாலும் பர வாயில்லை, மண்ணாவது அடித்துக் கொட்டி மேடாக்க கூடாதா என்று தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மக்கள் நல்வாழ்வு மைய நேரம் முடிந்த பிறகு, மருத்துவமனை வளா கத்தில் அப்பகுதியைச் சார்ந்த சமூக விரோதிகள் சிலர் அத்துமீறி நுழைந்து வராண்டாவில் அமர்ந்து மது அருந்துவதும், மது பாட்டில் களை உடைத்துவிட்டு செல்வதும் வாடிக்கையான விஷயமாக நடந்தேறி வருகிறது. காலையில் நல்வாழ்வு மையத்தைத் திறக்க வரும் மருத்துவரும் உதவியாளரும் அதனைச் சுத்தம் செய்வதே அன்றாட முதல் பணியாக இருப்பதை நினைத்து முகம் சுளித்து வருகின்றனர். நல்வாழ்வு மையத்தில் மது அருந்துவதும், மாடுகள் சாணம் போடு வதும் வாடிக்கையான விஷயமாக இருப்பதால், மருத்துவமனை வளாகம் தாழ்வான பகுதி என்ப தால் நீர் வெளியேறுவதற்கு வழி யில்லாமல் திடீரென பெய்யும் மழையின் காரணமாக தண்ணீர் தேங்கி நீண்ட நாட்களுக்கு சேரும் சகதியாக துர்நாற்றம் வீசி வருகிறது. நோயாளிகள் மட்டுமல்ல, மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் பணியாளர்களும் பணி செய்ய முடியாத நிலை உள்ளது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மக்கள் நல்வாழ்வு மையமே நோய்களை உருவாக்கும் மையமாக மாறி உள்ளது. அப்பகுதி மக்கள் பேசி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சம்பந்தப்பட்ட துறையை விரைந்து நடவடிக்கை எடுத்து நல்வாழ்வு மைய வளாகத்தில் சிமெண்ட் தரை அல்லது மண்ணா வது அடித்து மேடுபடுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. - பா.பொன்னுசாமி</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.