தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

துரத்தும் எஸ்ஐஆர் அச்சம்

25 Nov 2025, 3:29 pm
துரத்தும் எஸ்ஐஆர் அச்சம்
<p><strong>துரத்தும் எஸ்ஐஆர் அச்சம்</strong></p> <p>கோவை, நவ.25- தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. &nbsp;இந்நிலையில், படிவங்களை வாங்கிய மக் கள் அதனை பூர்த்தி செய்து கொடுப்பதில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது. பல் வேறு பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப் பட்டு வரும் நிலையில், ஒவ்வொரு மக்களுக் கும் ஒவ்வொரு மாதிரியான பிரச்சனை இருப் பதால் படிவங்களை பூர்த்தி செய்ய உதவுவ தில் பி.எல்.ஓ அதிகாரிகளுக்கும் குழப்பம் ஏற்படுகிறது. &nbsp;இந்நிலையில் கோவையில் பல்வேறு பகுதிகளில் படிவங்களை பூர்த்தி செய்வதில் இருக்கும் சிக்கல் காரணமாக பூர்த்தி செய்து கொடுக்காமல் சிலர் அப்படியே வீட்டில் வைத் துள்ளனர். அதே போல பலர் பூர்த்தி செய்து &nbsp;கொடுத்து விட்டு வாக்குரிமை பறிபோகுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். குறிப்பாக பெற் றோர் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் எண், வாக்காளித்த விபரங்களை எடுத்து கொடுப்பதில் பொதுமக்கள் திக்குமுக்காடி வருகின்றனர். &nbsp; &nbsp; இதுகுறித்து தொண்டாமுத்தூர் பகுதி யைச் சேர்ந்த பேக்கரி உரிமையாளர் ரேனா &nbsp;கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்திலி ருந்து திருமணம் முடித்து கோவையில் தங்கி &nbsp;பேக்கரி வைத்து நடத்தி வருகிறோம். சிறப்பு &nbsp;தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிக் கான படிவத்தை கொடுக்கச் சென்றேன். பெற் றோர் ஆதார் உள்ளிட்ட விபரங்களை கேட்ட னர். ஆனால் எனது பெற்றோர் ஒன்றாக இல்லை. இருவரும் பிரிந்து எனது அம்மா மட் டும் என்னுடன் இருக்கிறார். இந்த சூழலில் அப்பாவின் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை எண்ணை எப்படி என் னால் வாங்க முடியும். இந்த தகவல் கிடைக்க வில்லை என்பதால் படிவத்தை கொடுக்க முடியவில்லை, வீட்டிற்கு வந்து விட்டேன். இதற்காக வியாபாரத்தை விட்டு விட்டு எத் தனை முறை தான் அலைய முடியும். இந்த &nbsp;ஆதார், வாக்காளர் அட்டை எண்ணை அப்பா விடம் பேசி வாங்க முடியாது. இந்நிலையில் அப்பா எங்கு வாக்காளித்தார், என்ற விபரங் களை எப்படி வாங்குவது. சிறு பிழை இருந் தாலும் படிவத்தை வாங்க மாட்டார்களாம். இதனால் படிவத்தை அப்படியே வீட்டில் &nbsp;வைத்துவிட்டேன். இப்படி கேட்டுக்கொண்டி ருந்தால் வாக்குரிமை போனால் போகட்டும் என்று தான் இருக்க தோன்றுகிறது. எங்கள் வீட்டில் என்னுடன் பிறந்தவர்கள் நான்கு பேருக்கும் இதே பிரச்சனை என்பதால் படி வங்களை பூர்த்தி செய்யாமல் அப்படி வைத் துள்ளோம், என்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.