புதுச்சேரியில் பொய்த்துப்போன ஆட்சி
9 Feb 2026, 3:02 pm
<p><strong>புதுச்சேரியில் பொய்த்துப்போன ஆட்சி </strong></p>
<p>கே. பாலகிருஷ்ணன் கடும் தாக்கு புதுச்சேரி, பிப்.9 - புதுச்சேரியில் செய்தி யாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன், என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சியை “பொய்த்துப் போன ஆட்சி” எனச் சாடி னார். மேலும் அவர் கூறுகையில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து என்பது வெறும் அறிவிப்பாகவே உள்ளதாக வும், ஒன்றிய இணைய மைச்சர் எல். முருகன் கூறு வது போல இங்கு நல்லாட்சி நடக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். கடந்த 5 ஆண்டுகளில் பஞ்சாலை களைத் திறக்கவில்லை, வேலைவாய்ப்பு அறவே இல்லை, தொழில் வளர்ச்சி முடங்கிக் கிடக்கிறது எனத் தெரிவித்த அவர், போலி மருந்து ஊழலே இந்த அரசின் சாதனையாக உள்ளது என்று குற்றம் சாட்டினார். ஒன்றிய அரசு தென் மாநிலங்களைப் புறக்கணிப் பதாகவும், கார்ப்பரேட்டு களுக்கு ரூ. 18 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்த மோடி அரசு, விவசாயிகள் மற்றும் மாணவர்களின் கடனைத் தள்ளுபடி செய்ய மறுப்பதாகவும் அவர் கூறி னார். மாநிலத்தின் கடன் தள்ளுபடி அல்லது கூடுதல் நிதி என எதையுமே ஒன்றிய பாஜக அரசிடம் இருந்து பெறவில்லை என்றும், மதுக்கூடங்களை மட்டுமே அதிகரித்துள்ளதாகவும் சாடினார். இந்த ஆட்சியைக் கண்டித்து வரும் பிப்ரவரி 20 அன்று வில்லியனூர் மற்றும் அரியாங்குப்பம் பகுதிகளில் இருந்து பேரணி யாக வந்து சட்டப்பேரவை முன் ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் என அறிவித்தார். இந்தியா கூட்டணியில் தமிழகத்தைப் போலவே பேச்சுவார்த்தை நடை பெறும் என்றும், இம்முறை புதுச்சேரியில் குறைந்தது 2 தொகுதிகளில் சிபிஎம் போட்டியிடும் என்றும் தெரி வித்தார். மேலும், ஒன்றிய அரசைக் கண்டித்து வரும் பிப்ரவரி 12 அன்று நடை பெறும் அகில இந்திய பொது வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்திற்குச் சிபிஎம் முழு ஆதரவு அளிக்கும் என்று கூறினார். இந்தச் செய்தியாளர் சந்திப் பின் போது கட்சியின் புதுச்சேரி மாநில ஒருங்கி ணைப்பாளர் பெருமாள், மாநில செயலாளர் ராமச் சந்திரன், செயற்குழு உறுப்பி னர்கள் ராஜாங்கம், கொள ஞ்சியப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.</p>
