“தூய சக்தி” வேட்பாளர்களின் தீய பின்னணிகள்!
2 Apr 2026, 3:50 pm
<p><strong>“தூய சக்தி” வேட்பாளர்களின் தீய பின்னணிகள்!</strong></p>
<p>“தூய சக்தி” என்று முழங்கும் த.வெ.க-வின் வேட்பாளர் பட்டியல், அக்கட்சியின் முகமூடியைக் கிழித்துள்ளது. திருப்பூர் வடக்கு, பூம்புகார் வேட்பாளர்கள் சில நாட்களுக்கு முன்பு வரை பா.ஜ.க-வில் இருந்தவர்கள். ஆர்.கே.நகர் வேட்பாளர் பெண்கள் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் சிக்கியவர். கொள்கை முரண்பாடுகள் கவுண்டம்பாளையம் வேட்பாளர் ஜோதிடம் மூலம் புற்றுநோய் குணமாகும் எனப் பேசுபவர். பெரியாரைக் கொள்கைத் தலைவராகக் கொண்டிருப்பதாகக் கூறும் விஜய்க்கு இதைவிட அவமானம் வேறில்லை. கம்பம் வேட்பாளரோ தன்னைச் சாதி வெறியர் எனப் பகிரங்கமாக அறிவித்தவர். பேராவூரணி வேட்பாளர் கஞ்சா வழக்கிலும், பட்டுக்கோட்டை வேட்பாளர் பாலியல் வழக்கிலும் சிக்கியவர்கள் என்பது அதிர்ச்சியளிக்கிறது. ஏமாற்றப்பட்ட தொண்டர்கள் உழைத்த ரசிகர்களுக்கு வாய்ப்பு எனக்கூறிவிட்டு, மாற்றுக்கட்சிகளில் இருந்து வந்த 106 பேருக்குச் சீட் வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் பிரதிநிதித்துவம் குறித்துப் பேசிய விஜய், 234 இடங்களில் வெறும் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பளித்துள்ளார். விருகம்பாக்கம் ஓட்டுநர் மகன் வேட்பாளர் என்பது ஒரு ‘ரியல் எஸ்டேட்” அரசியல் நாடகம் என்பது அம்பலமாகியுள்ளது. பயமும் பதுங்கலும் விஜய் இரு தொகுதிகளில் போட்டியிடுவது அவரது நம்பிக்கை யின்மையைக் காட்டுகிறது. சிறுபான்மை யினர் அதிகம் உள்ள தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து ‘ஜோசப் விஜய்’ என அடையாளப்படுத்துவது ஓட்டு வங்கி அரசியலே. “விஜய்க்கு பா.ஜ.க கதவுகள் திறந்தே உள்ளன” என்ற ஒன்றிய அமைச்சரின் பேச்சு, த.வெ.க-வின் பின்னணியைச் சந்தேகிக்க வைக்கிறது. மொத்தத்தில், த.வெ.க-வின் பல முகமூடிகள் முதல் தேர்தலிலேயே கழன்று விழத் தொடங்கிவிட்டன.</p>
