தேர்தல் ஆணையம் அறிவித்தும் தொடரும் ‘திரை’
24 Mar 2026, 3:23 pm
<p><strong>தேர்தல் ஆணையம் அறிவித்தும் தொடரும் ‘திரை’</strong></p>
<p>கோவை, மார்ச் 24- மறைந்த தலைவர்களின் சிலைகளை தேர்தல் நேரத்தில் மறைக்க வேண்டிய அவசியமில்லை என இந்தியத் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ள நிலையிலும், கோவையில் தேர்தல் நடத்தை விதி களைக் காரணம் காட்டி மூடப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகள் இன்னும் திறக்கப்படாமல் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், தேர் தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதன் ஒரு பகுதியாக, வாக்காளர்களை கவரும் வகையில் அமையும் என்பதால் அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகள் மற்றும் கட்சி சின்னங்களை மறைக்க மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த னர். அந்த வகையில், கோவை மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்த மறைந்த முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகள் துணிகளால் போர்த்தி மூடப்பட்டன. இதனிடையே, இது தொடர்பாக எழுந்த புகார் களை அடுத்து தேர்தல் ஆணையம் முக்கிய அறி விப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், ”மறைந்த தலை வர்களின் சிலைகளை தேர்தல் நேரத்தின் போது மறைக்க வேண்டிய கட்டாயம் இல்லை” எனத் தெரி விக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியாகி சில தினங்கள் கடந்த போதிலும், கோவையில் அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட முக்கியத் தலைவர்களின் சிலைகள் இன்னும் மூடப் பட்ட நிலையிலேயே உள்ளன. தேர்தல் ஆணையத்தின் தெளிவான உத்தரவு இருந்தும், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி அதி காரிகள் ஏன் இன்னும் சிலைகளைத் திறக்க நடவ டிக்கை எடுக்கவில்லை என அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்புகின்றனர். இது குறித்து தேர்தல் அதிகாரிகளிடம் கேட்ட போது, பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தனர்.</p>
