முந்தய பக்கம்

பொய்யைப் பரப்பும் தேர்தல் ஆணையம்

13 Nov 2025, 3:30 pm
பொய்யைப் பரப்பும் தேர்தல் ஆணையம்
<p><strong>பொய்யைப் பரப்பும் தேர்தல் ஆணையம்&nbsp;பெ. சண்முகம் கண்டனம்</strong></p> <p>சென்னை, நவ. 13 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், தமது சமூகவலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை அவர் வெளி யிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: &ldquo;தமிழ்நாட்டில் 5 கோடி வாக்காளர் களுக்கு எஸ்ஐஆர் (SIR) படிவம் கொடுக்கப்பட்டு விட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் அலுவலர்கள் எல்லாம் புயல் வேகத்தில் பணியாற்றி இருந்தால்தான் இது சாத்தியம். ஆனால், அப்படி எந்தவித &lsquo;அசம்பாவிதங்களும்&rsquo; நடக்கவில்லை என்பது அவர்களுக்கே தெரியும். எஸ்ஐஆர் என்பது கடினமானது அல்ல மிகவும் எளிதானது என்ற பொய்யை நம்ப வைப்பதற்காக, ஆணையமே வெளியிட்ட தகவல் தான், 5 கோடி படிவங்கள் விநியோகம் என்ற பித்தலாட்டம். எங்கள் தெருப்பக்கம் எந்த அதிகாரியும் வரவில்லை என்ற குரல்கள் எங்கெங்கும் ஒலிக்கின்றன. பொய்யைப் பரப்பும் தேர்தல் ஆணையத்திற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். வாக்குரி மையை விட்டுத்தர மாட்டோம்! எஸ்ஐஆர் நடைமுறையை நிறுத்துங்கள்; பாஜகவை தமிழ்நாடு நிராகரிக்கும்!&rdquo; &nbsp;இவ்வாறு பெ. சண்முகம் குறிப் பிட்டுள்ளார்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram