கோவில்பட்டியின் கனவுக் களமும் மகாராஜனின் உன்னத பயணமும்!
16 Nov 2025, 3:30 pm
<p><strong>கோவில்பட்டியின் கனவுக் களமும் மகாராஜனின் உன்னத பயணமும்!</strong></p>
<p>மணம் கமழும் மிட்டாய் களுக்கும், ஹாக்கி வீரர்களுக்கும் பெயர் போன கோவில்பட்டி (தூத்துக்குடி மாவட்டம்), இப்போது புதிய பெரு மையின் பெயரை எழுதிக் கொண்டிருக் கிறது. அந்த பெயர் மகாராஜன் ஆறு முகப்பாண்டியன். வெறும் 17 வயதில், இந்திய பளுதூக்கும் விளை யாட்டின் எதிர்காலத்தை தன் தோள்களில் சுமந்து நிற்கிறார். அது வெறும் உருவகமல்ல, உண்மை யான எடையின் சாட்சியம். வேர்களிலிருந்து விழுதுகள் வரை சங்கரலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகப்பாண்டியன் - முரு கலட்சுமி தம்பதியினரின் மகன் மகா ராஜன். எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்த இந்த சிறுவன், 5ஆம் வகுப்பு படித்த போதே பளுதூக்கும் கலையின் மீது அசாதாரண ஈர்ப்பு கொண்டிருந்தான். அவனது முதல் அடியெடுத்து வைப்பில் இருந்தே, குடும்பமும் அவனது கனவுகளுக்கு உறுதுணையாக நின்றது. உள்ளூர் அளவில் பயிற்சியாளர் கள் சொர்ணமுத்து, சுடலைமுத்து ஆகி யோரின் வழிகாட்டுதலில் பயிற்சி பெற்ற மகாராஜன், தமிழக விளை யாட்டு அபிவிருத்தி ஆணையத்தின் வீர மேம்பாட்டுத் திட்டத்தின் பயனாளி யாக தேர்வு செய்யப்பட்டபோது, அது அவரது வாழ்க்கையில் திருப்புமுனை யாக அமைந்தது. இன்று இந்திய ராணுவ விளை யாட்டு இன்ஸ்டிட்யூட் பயிற்சி முகாமில் தனது திறமைகளை கூர்மைப் படுத்திக் கொண்டிருக்கும் மகாராஜ னின் பின்னணியில், ஒரு சாதாரண குடும்பத்தின் அசாதாரண நம்பிக்கை யும் ஆதரவும் மறைந்திருக்கிறது. சமீபத்தில், பஹ்ரைன் நாட்டின் மணாமா நகரில் நடைபெற்ற இளை யோர் ஆசிய விளையாட்டுப் போட்டி களில், 60 கிலோ எடைப் பிரிவில் இரட்டை வெள்ளிப் பதக்கங்களுடன் தாய்நாடு திரும்பினார் மகாராஜன். தங்கத்தை வெறும் ஒரு கிலோ இடைவெளியில் தவறவிட்டாலும், அது தோல்வியல்ல, எதிர்கால வெற்றிக்கான வாக்குறுதி. சாதனைகளின் சரித்திரம் மகாராஜனின் பயணம் மணாமாவில் மட்டும் நின்றுவிட வில்லை. இதுவரை சர்வதேச போட்டி களில் 5 பதக்கங்களை வென்று அசத்தி யுள்ளார். கடந்த ஜூலையில் நடந்த ஆசிய இளைஞர் மற்றும் இளை யோர் பளுதூக்கும் சாம்பியன்ஷிப் பில் தங்கம் வென்ற இவர், ஆகஸ்ட் மாதம் குஜராத் மாநிலம் அகமதா பாத்தில் நடந்த காமன்வெல்த் பளுதூக்கும் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்று வரலாறு படைத்தார். இந்த வெற்றிகள் வெறும் புள்ளி விவ ரங்கள் அல்ல, அவை தமிழக விளை யாட்டு வரலாற்றில் எழுதப்படும் புதிய அத்தியாயங்கள். அங்கீகாரமும் அரவணைப்பும் மகாராஜனின் சாதனைகளைப் பாராட்டி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். கோவில்பட்டிக்கு சமீபத்தில் வருகை தந்த முதலமைச்சர்,”மிட்டாய்க்கும் ஹாக்கிக்கும் பெயர்போன கோவில்பட்டி, இனி பளுதூக்கும் விளையாட்டுக்கும் பெயர்போகும்” என்று குறிப்பிட்டு, மகாராஜனின் எதிர்காலப் பயிற்சிகளுக்கும் வளர்ச்சிக் கும் தமிழக அரசு தொடர்ந்து ஆதர வளிக்கும் என உறுதியளித்துள்ளார். மகிழ்ச்சியும்-கோரிக்கையும் “பளுதூக்கும் போட்டியில் மகன் மகாராஜன் பதக்கம் வென்றுள்ள தால் மகிழ்ச்சியை வெளிப்படுத் திருக்கும் தாய் முருகலட்சுமி, மக னிற்கு வாழ்த்து தெரிவித்த தமிழக முதல்வருக்கும் நன்றியை தெரி வித்து உணர்ச்சியை வெளிப்படுத்தி யிருக்கிறார். “மகாராஜன் பளு தூக்கும் போட்டியில் பதக்கம் வென்றி ருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தற்சம யம் பளுதூக்கும் வீரர்களுக்கு போதிய பயிற்சி மையம் கோவில்பட்டியில் இல்லை. இங்கு ஹாக்கி விளையா ட்டிற்கு பயிற்சி மையம் உள்ளது போல், பளுதூக்கும் வீரர்களுக்கும் தமிழ்நாடு அரசு பயிற்சி மையம் அமைத்து தர வேண்டும்” என்று மகாராஜனின் பயிற்சியாளர்கள் சொர்ணமுத்து மற்றும் சுடலைமுத்து ஆகியோர் பெருமிதத்துடன் வலியுறுத்துகின்ற னர். இந்த கோரிக்கை வெறும் தனி நபர் நலனுக்காக அல்ல, கோவில் பட்டியில் இருந்து இன்னும் பல மகாராஜன்கள் உருவாக வேண்டும் என்ற ஆசையின் வெளிப்பாடு. கனவின் தொடக்கம் மகாராஜனின் பயணம் இன்னும் தொடங்கிய இடத்தில் நிற்கிறது. ஒவ்வொரு பயிற்சியும், ஒவ்வொரு போட்டியும், அவரை அவரது இறுதி இலக்கை நோக்கி நகர்த்துகிறது - ஒலிம்பிக் தங்கம். கோவில்பட்டியின் சந்துகளில் விளையாடிய சிறுவன், இப்போது உலக மேடைகளில் இந்தி யக் கொடியை பறக்க வைக்கும் வீர னாக உருவெடுத்துக் கொண்டிருக் கிறார். அவரது கைகளில் வெறும் இரும்புக் கம்பிகள் இல்லை, இந்திய விளையாட்டின் எதிர்கால நம்பிக்கை தாங்கி நிற்கிறது. மகாராஜன் ஆறுமுகப்பாண்டி யனின் கதை, கடின உழைப்பும் கனவும் கைகோர்த்து நடக்கும் பயணத்தின் சாட்சியம். இது ஒரு எளிய குடும்பத்தின் நம்பிக்கையின் கதை, அர்ப்பணிப்புள்ள பயிற்சியா ளர்களின் உழைப்பின் கதை, ஒரு மாநில அரசின் ஆதரவின் கதை. ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக, இது ஒரு சிறுவனின் அசாத் திய கனவின் கதை. அந்த கனவு இன்னும் நிறைவேறவில்லை. அது தொடர்கிறது - மேலும் உயரமாக, மேலும் வலிமையாக, மேலும் பிரகாச மாகவும் வாழ்த்துவோம்! -சி.ஸ்ரீராமுலு </p>
