தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாநிலத்தை ‘சமத்துவபுரமாக’ மாற்றுவதே திமுக அரசின் இலக்கு!

6 Mar 2026, 3:17 pm
மாநிலத்தை ‘சமத்துவபுரமாக’ மாற்றுவதே திமுக அரசின் இலக்கு!
<p><strong>மாநிலத்தை &lsquo;சமத்துவபுரமாக&rsquo; மாற்றுவதே திமுக அரசின் இலக்கு!</strong></p> <p>சென்னை, மார்ச் 6- தமிழ்நாட்டின் வளர்ச்சி பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக &ldquo;தமிழ்நாடு 2030 &ndash; &nbsp;கனவுகள் மெய்ப்படும்&rdquo; என்ற நிகழ்ச்சி வெள்ளிக் கிழமை நடைபெற்றது. &nbsp;கடந்த ஐந்தாண்டுகளாக செயல்பட்டு வரும் திமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்துரைத்த முத லமைச்சர் மு.க.ஸ்டாலின், 2030-ஆம் ஆண்டுக் குள் தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முன்னணி மாநிலமாக மாற்றும் நோக்கில் 14 அம்சங்கள் கொண்ட விரிவான செயல்திட்டத்தை வெளியிட்டார். &ldquo;இது தனிப்பட்ட ஸ்டாலினின் அறிக்கை அல்ல; தமிழ்நாட்டு மக்களின் கனவு&rdquo; என்றும் அவர் வலியுறுத்தினார். இந்தத் திட்டத்தில் எளிய மக்களின் அடிப் படைத் தேவையாக இருக்கும் வீட்டு வசதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. &lsquo;கலைஞர் கனவு இல்லம்&rsquo; திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் 5 &nbsp;லட்சம் மற்றும் நகர்ப்புறங்களில் 2 லட்சம் என மொத்தம் 7 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் &nbsp;என அறிவிக்கப்பட்டது. குறிப்பாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின குடும்பங்கள் அனை வருக்கும் 2030-க்குள் வீட்டுமனைப் பட்டா வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சமூக நீதியை வலுப்படுத்தும் வகையில் தேவையான இடங்களில் புதிய மாணவர் விடுதிகளும் அமைக்கப் படவுள்ளன. கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை களிலும் பல முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 100 சதவீதம் ஸ்மார்ட் வகுப்ப றைகள் அமைக்கப்படும். &lsquo;நான் முதல்வன் 2.0&rsquo; &nbsp;திட்டத்தின் மூலம் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட &nbsp;அதிநவீன தொழில்நுட்பப் பயிற்சிகள் மாணவர் களுக்கு வழங்கப்பட உள்ளன. உயர்கல்விக் கான அண்ணல் அம்பேத்கர் அயலகத் திட்டம் &nbsp;விரிவுபடுத்தப்படுவதோடு, ஒவ்வொரு மாவட்டத்தி லும் திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்படும் என கூறப்பட்டது. தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் சுமார் 50 லட்சம் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதே அரசின் முக்கிய &nbsp;இலக்காக அறிவிக்கப்பட்டது. தகவல் தொழில் நுட்பத் துறையில் ஏற்றுமதியை 6 லட்சம் கோடி &nbsp;ரூபாயாக உயர்த்தும் திட்டமும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், மாவட்டம் தோறும் நவீன தொழில் பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளன. சிறு, &nbsp;குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உலகளா விய அங்கீகாரம் கிடைக்க ஆண்டுதோறும் பன்னாட்டு கண்காட்சிகள் நடத்தப்படும் என்றும் &nbsp;தெரிவிக்கப்பட்டது. ஜவுளி, தோல் மற்றும் கைத் தறித் துறைகளில் நவீன தொழில்நுட்பங்கள் அறி முகப்படுத்தப்பட்டு சர்வதேச சந்தைகளில் விரி வாக்கம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டது. விவசாயத் துறையில் தன்னிறைவு அடையும் நோக்கில் நிகர சாகுபடி பரப்பை 50 லட்சம் ஏக்கராக &nbsp;உயர்த்தவும், உணவுப் பொருள் உற்பத்தியை 125 &nbsp;லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகரிக்கவும் இலக்கு &nbsp;நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இயற்கை வளங்களைப் பாதுகாக்க மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் 1,000 மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் உருவாக்கப்படும் என அறிவிக்கப் பட்டது. கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தியை &nbsp;ஊக்குவிக்கும் வகையில் தினசரி 4.5 கோடி லிட்டர் &nbsp;பால் உற்பத்தி என்ற இலக்கும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. கிராமப் புறங்களை பொருளாதார வளர்ச்சி மையங்களாக மாற்றும் நோக்கில் &lsquo;உத்தமர் காந்தி &nbsp;மாதிரி கிராமத் திட்டம்&rsquo; முதற்கட்டமாக 10 ஊராட்சி களில் செயல்படுத்தப்படும். மாநகராட்சிகளில் நவீன வடிகால் வசதிகள், திடக்கழிவு மேலாண்மை &nbsp;அமைப்புகள் மற்றும் கலை&ndash;கலாச்சார மையங் கள் உருவாக்கப்படவுள்ளன. மக்கள் நலத்துறை யில், நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் போன்ற வாழ்வியல் நோய்களை கண்டறிய சிறப்பு முகாம் கள் நடத்தப்படவுள்ளன. அதேபோல், மனநல &nbsp;ஆலோசனைகளுக்காக ஒவ்வொரு மாவட்டத்தி லும் தனித்த மையங்கள் செயல்படுத்தப்படும். தமிழகத்தின் ஆன்மீகச் சுற்றுலா தலங்கள் &nbsp;மற்றும் கடற்கரைச் சாலைகளை மேம்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்படும் என முதல மைச்சர் தெரிவித்தார். மாநிலம் முழுவதையும் ஒரு &nbsp;&ldquo;பெரிய சமத்துவபுரமாக&rdquo; மாற்றுவதே அரசின் இறுதி இலக்காகும் என்றும் அவர் கூறினார். பல்வேறு நிதி மற்றும் அரசியல் சவால்கள் இருந்த போதிலும் இந்த தொலைநோக்குத் திட்டங் கள் தமிழ்நாட்டை 2030-க்குள் ஒரு புதிய பொற் காலத்தை நோக்கி கொண்டு செல்லும் என முதலமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, தா.மோ. அன்பரசன், கீதாஜீவன், மா. சுப்பிரமணி யன், பி.கே. சேகர்பாபு, கோவி. செழியன், அன்பில் &nbsp;மகேஸ், மெய்யநாதன், டி.ஆர்.பி.ராஜா, பொய்யா மொழி, தலைமைச் செயலாளர் நா. முருகா னந்தம் ஆகியோர் கடந்த ஐந்து ஆண்டுகளில் தங்கள் துறைகளில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும், அதன்மூலம் பயன் பெற்றவர்கள் விவரங்கள் குறித்தும் விளக்கினர். &nbsp;டி.ஆர். பாலு உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பி னர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தோழமைக் கட்சிகளின் தலைவர்கள், பத்திரிகை மற்றும் ஊடக &nbsp;நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஆசிரி யர்கள், சமூக ஊடகவியலாளர்கள், தொழில்துறை &nbsp;வல்லுநர்கள், கல்வியாளர்கள், திரையுலகத்தைச் சார்ந்தவர்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள், கலை, பண்பாடு, இலக்கியம் சார்ந்த &nbsp;ஆளுமைகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் &nbsp;அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.