தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பங்கீடு முடிஞ்சாச்சு... ஆனா பங்கு பிரியல! இலை மேல் அமர்ந்து உள்ளடி பார்க்கும் தாமரை!

27 Mar 2026, 3:15 pm
பங்கீடு முடிஞ்சாச்சு... ஆனா பங்கு பிரியல! இலை மேல் அமர்ந்து உள்ளடி பார்க்கும் தாமரை!
<p><strong>பங்கீடு முடிஞ்சாச்சு... ஆனா பங்கு பிரியல! இலை மேல் அமர்ந்து உள்ளடி பார்க்கும் தாமரை!</strong></p> <p>கோவை, மார்ச் 27- கூட்டணி தர்மம் என்பது &lsquo;கூடி வாழ்ந்தால் கோடி நன்மை&rsquo; என்பது பழமொழி. ஆனால், கோவை கிணத்துக்கடவு தொகுதியிலோ, &ldquo;கூடி வாழ்ந்தால் காலி பண்ணிடுவோம்&rdquo; என்கிற ரீதியில் அதிமுக - பாஜக இடையே போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன. &ldquo;வசந்த காலம்&rdquo; வரும் என்று வழிமேல் &nbsp;விழிவைத்துக் காத்திருந்த கிணத்துக்கடவு பாஜக மாஜி மாவட்டத் தலைவர் வசந்தரா ஜனுக்கு, தொகுதி ஒதுக்கீட்டில் விழுந்தது &nbsp;பலத்த &lsquo;அடி&rsquo;. தொகுதி மீண்டும் அதிமுக விற்கே என்று தகவல் வெளியானதும், பாஜக தொண்டர்கள் அதிர்ச்சியில் &lsquo;உறைந்து&rsquo; போய், ஆத்திரத்தில் &lsquo;உருகி&rsquo; சாலைக்கு வந்துவிட்டனர். ஈச்சனாரி பகுதியில் வியாழ னன்று இரவு நடந்த சாலை மறியல், &lsquo;ஆக்ஷன்&rsquo; பட பாணியில் அமைந்தது. &ldquo;எங்களைக் கேட் காமல் எப்படி ஒதுக்கலாம்?&rdquo; என்று முழக்க மிட்ட கையோடு, ஆர்வமிகுதியால் ஒரு தொண் டர் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு &lsquo;தீக்கு ளிக்க&rsquo; முயல, அங்கு பதற்றம் &lsquo;பீக்&rsquo; அடித் தது. நல்லவேளையாக போலீசார் அவரை &nbsp;தடுத்து நிறுத்தியதால், விபரீதம் தவிர்க்கப் பட்டது. &ldquo;உயிரைக் கொடுத்தாவது தொகு தியை வாங்குவோம்&rdquo; என்ற ரேஞ்சுக்கு தொண்டர்கள் கொந்தளித்ததை பார்த்து, உயிரை கொடுத்த பிறகு தொகுதி எதுக்குடா என அங்கிருந்தவர்கள் நகைத்தது ஒரு புறம் இருக்க. இந்த விவகாரத்தின் பின்னணியில் முன் னால் தலைவர் அண்ணாமலை தரப்பிற்கும், ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தரப்பிற்கும் இடையிலான &ldquo;ஈகோ&rdquo; யுத்தமே காரணம் என பாஜக வட்டாரங்களே கிசுகிசுக்கின் றன. போராட்டத்தில் ஈடுபட்ட சிலரோ ஒரு படி மேலே போய், &ldquo;இப்போ அதிமுகவை தோற்க டிச்சாதான், அடுத்த முறை நமக்குப் பயந்து &nbsp;தொகுதியை ஒதுக்குவாங்க&rdquo; என்று பகிரங்க மாகவே &lsquo;உள்ளடி&rsquo; வேலைகளுக்கு அஸ்தி வாரம் போட்டுள்ளனர். இதனால், &ldquo;கூட்ட ணிப் பூவே... எங்களை குத்திக் கிழிப் பாயோ?&rdquo; என்ற அச்சத்தில் அதிமுகவினர் கிலியில் உள்ளனர். மொத்தத்தில், கிணத்துக்கடவு தொகு திப் பங்கீடு என்பது இரு கட்சிகளுக்கும் இடையே &ldquo;காதலும் மோதலும்&rdquo; கலந்த ஒரு &nbsp;மெகா சீரியலாக மாறியுள்ளது. தாமரை மலருமா அல்லது இலை மறைவில் காய் &nbsp;கருகிப்போகுமா என்பது போக போகத் தான் தெரியும்!</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.