சிட்லப்பாக்கம் பகுதிக்கு பட்டா கேட்டு மனு கொடுக்கும் இயக்கம் குடியிருப்புகளை அகற்ற மாட்டோம் என வட்டாட்சியர் உறுதி
10 Nov 2025, 5:08 pm
<p><strong>சிட்லப்பாக்கம் பகுதிக்கு பட்டா கேட்டு மனு கொடுக்கும் இயக்கம் குடியிருப்புகளை அகற்ற மாட்டோம் என வட்டாட்சியர் உறுதி</strong></p>
<p>சென்னை, நவ. 10 - சிட்லப்பாக்கம் பகுதி யில் வசிக்கும் சுமார் 500 குடும்பங்களுக்கு குடி மனைப்பட்டா வழங்ககோரி திங்களன்று (நவ.10) தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. சிட்லபாக்கம் சர்வே எண் 256/2, 256/3 ஆகிய வற்றில் பெரியார்தெரு, ஆனந்தா நகர், ராம கிருஷ்ணாபுரம் குடியிருப்பு கள் உள்ளன. 1960ஆம் ஆண்டிலிருந்து இப்பகுதி யில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 50 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வசித்த வருவதை மாவட்ட ஆட்சியரும் உறுதிப்படுத்தியுள்ளார். சிட்லபாக்கம் ஏரியின் நான்கு பக்கங்களிலும் தடுப்பு கரைகள் அமைக்கப் பட்டுள்ளது.ஏரியின் வரத்துக்கால்வாய், வெளி வாயில், நீர்பாய்ச்சி வழி கள் ஆகியவை அனைத்தும் முறையாக பராமரிக்கப்படு கின்றன. ஏரியின் உள் பகுதியில் பூங்கா, நடை பாதை, விளையாட்டு மை தானம் உள்ளிட்ட பிற வசதிகள் அமைக்கப் பட்டுள்ளது. இதனால், ஏரி யின் எல்லைகள் முழுமை யாக பாதுகாக்கப்படுகிறது. சிஎம்டிஏ ஆவணங்க ளின்படி ஏரியின் ஆயக்கட்டு பகுதிகள் வகைமாற்றம் செய்யப்பட்டு, குடி யிருப்பு பகுதியாக அங்கீ கரிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட பேரிடர் மேலாண்மை திட்டத்தில், பெரியார் தெரு மற்றும் ஆனந்தா நகர் பகுதிகள் வெள்ளம் பாதிக்காத பகுதிகளாக வரையறுக்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறை ஆவ ணங்களில் அதிகாரிகள் செய்த பிழையால் இங்குள்ள மக்களுக்கு குடிமனைப்பட்டா வழங்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், வழக்கு ஒன்றை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், நவ.19ந் தேதிக்குள் குடி யிருப்புகளை அகற்ற உத்தரவிட்டுள்ளது. எனவே, ஆவணங்களை சரி செய்து பசுமைத் தீர்ப்பா யத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். பெரி யார் தெரு, ஆனந்தா நகர், ராமகிருஷ்ணாபுரம் குடியிருப்பாளர்களுக்கு நில வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இந்த மனு கொடுக்கம் இயக்கம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து வட்டாட்சியர் கனிமொழியை சந்தித்து சிபிஎம் அகில இந்திய கட்டுப்பாட்டுக் குழு தலைவர் ஜி.ராம கிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் மனு அளித்து பேசினர். இதனை தொடர்ந்து பேசிய ஜி.ராம கிருஷ்ணன், “நீதிமன்றமும், தீர்ப்பாயமும் அரசு ஆவ ணங்களின் அடிப்படையில் தான் தீர்ப்பளிக்கும். எனவே, குடியிருப்பு பகுதியை அடுத்த சில நாட்களில் ஆய்வு செய்து, வருவாய்த்துறை ஆவணங்களில் உள்ள குறைகளை சரிசெய்து, பசுமை தீர்ப்பாயத்திற்கு சரி யான ஆவணங்கள் வழங்கப்படும். குடியிருப்பு களை அகற்ற நடவடிக்கை எடுக்கமாட்டோம் என்று வட்டாட்சியர் உறுதி யளித்துள்ளார். மக்களின் குடியிருப்புகளை பாது காக்கும் போராட்டத்தில் இறுதிவரை மார்க்சிஸ்ட் கட்சி துணை நிற்கும்” என்றார். சிபிஎம் சிட்லப்பாக்கம் கிளைச் செயலாளர் ஆர். தமீம் பாஷா தலைமை யில் நடைபெற்ற இந்த இயக்கத்தில் தென் சென்னை மாவட்டச் செய லாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர்கள் ஏ.பாக்கியம், எம்.தாமோதரன், மதிமுக மாவட்டச் செயலாளர் மாவை.மகேந்திரன், சிபிஎம் நிர்வாகி டி.சந்துரு உள்ளிட்டோர் பேசினர்.</p>
