முந்தய பக்கம்

சிறுதானிய சிற்றுண்டி அங்காடி மாவட்ட ஆட்சியர் திறந்துவைத்தார்  

28 Nov 2025, 2:28 pm
சிறுதானிய சிற்றுண்டி அங்காடி மாவட்ட ஆட்சியர் திறந்துவைத்தார்  
<p><strong>சிறுதானிய சிற்றுண்டி அங்காடி மாவட்ட ஆட்சியர் திறந்துவைத்தார் </strong>&nbsp;</p> <p>கள்ளக்குறிச்சி, நவ.28 - பரிக்கல் கிராமத்தில் சிறுதானிய சிற்றுண்டி அங்காடி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாத் தொடங்கி வைத்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் வட்டம்,பரிக்கல் கிராமத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் புதிதாக அமைக்கப்பட்ட மதி சிறுதானிய சிற்றுண்டி அங்காடியினை மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.எஸ்.பிரசாத்,உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜே.மணிக்கண்ணன்,ஆகியோர் திறந்து வைத்தனர். சிறுதானிய உற்பத்தி மற்றும் பயன்பாட்டினை அதிகரித்து பாரம்பரிய உணவு பழக்கங்களை மீட்டெடுக்கவும்,சிறுதானிய உணவுகளின் முக்கியத்து வத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகை யிலும் மகளிர் சுய உதவிக் குழு மூலம் நடத்த பெறும் இந்த மதி சிறு தானிய சிற்றுண்டி அங்காடி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.பரிக்கல் கிராமத்தைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நீதி கடனாக ரூபாய் 10 லட்சம் வழங்கப்பட்டு இந்தியன் வங்கி மூலம் இந்த மதி சிறு தானிய சிற்றுண்டி அங்காடி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.மகளிர் முன்னேற்றத்திற்கு உதவி புரிவதுடன் சிறுதானிய உணவுகள் மூலம் தங்கள் உடல் நலனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குநர் சு.சுந்தர ராஜன், மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆட்டோ கவிழ்ந்து ஓட்டு</p>
Share
FacebookXWhatsAppTelegram