தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘கண்ணியமற்ற, அராஜகமான தாக்குதல் கண்டனத்திற்கு உரியது!’ சிபிஎம் மாநிலக்குழு கண்டனம்

5 Jan 2026, 6:21 pm
‘கண்ணியமற்ற, அராஜகமான  தாக்குதல் கண்டனத்திற்கு உரியது!’ சிபிஎம் மாநிலக்குழு கண்டனம்
<p><strong>&lsquo;கண்ணியமற்ற, அராஜகமான &nbsp;தாக்குதல் கண்டனத்திற்கு உரியது!&rsquo; சிபிஎம் மாநிலக்குழு கண்டனம்</strong></p> <p>சென்னை, ஜன. 5 - அமெரிக்கத் தூதரகம் அருகில் போராட்டம் நடத்துவதைத் தடுத்து, காவல்துறை மேற்கொண்ட அராஜகத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் அறிக்கை &nbsp;விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்ப தாவது: வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை கொள்ளையடிக்கும் வகையில் அந்நாட்டின் மீது அமெரிக்கா குண்டு வீசி தாக்குதல் நடத்தியதையும், ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி ஆகியோரை சர்வதேச சட்டங்களை மீறிக் கைதுசெய்து சிறையில் அடைத்ததையும் கண்டித்தும், உலகம் முழுவதும் வெனிசுலா மக்களுக்கு ஆதரவாக போராட்டங்கள் வெடித்து வருகின்றன. தமிழகத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. முன்னறிவிப்பின்றி கைது செய்தது அராஜகம்! இந்நிலையில் டிரம்ப் அரசின் போர் வெறியைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திங்கட்கிழமை (05.01.2026) சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலகம் அருகே ஜனநாயகப் பூர்வமாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திட திட்டமிடப்பட்டது. இதற்காக, அமெரிக்கத் தூதரகம் அருகில் ஒன்று சேரத் தொடங்கிய தோழர்களை உடனடியாக எவ்வித முன்னறிவிப்புமின்றி கிரிமினல் குற்றவாளிகளை கைது செய்வது போல் வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர். கண்ணியமற்ற முறையில் கட்சித் தலைவர்களின் சட்டையைப் பிடித்து இழுத்து, அராஜகமான முறையில் உயர் காவல்துறை அதிகாரிகளே இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறை அடக்குமுறை ஜனநாயக மாண்பாகாது! அமெரிக்காவின் அடாவடித்தனத்தை கண்டித்து உலகம் முழுவதும், வெள்ளை மாளிகை முன்பும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது சென்னையில் மட்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் மீது அடக்குமுறைகளையும், அராஜகத்தினையும் சென்னை மாநகர காவல்துறை கட்டவிழ்த்து விட்டது எவ்விதத்திலும் ஏற்கத்தக்கதல்ல. இது ஜன நாயக மாண்பாகாது. இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.