தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 2000 சிறப்பு நிதி தமிழக அரசின் நடவடிக்கைக்கு மாற்றுத் திறனாளிகள் சங்கம் வரவேற்பு!

3 Mar 2026, 3:38 pm
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 2000 சிறப்பு நிதி  தமிழக அரசின் நடவடிக்கைக்கு மாற்றுத் திறனாளிகள் சங்கம் வரவேற்பு!
<p><strong>மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 2000 சிறப்பு நிதி &nbsp;தமிழக அரசின் நடவடிக்கைக்கு மாற்றுத் திறனாளிகள் சங்கம் வரவேற்பு!</strong></p> <p>சென்னை, மார்ச் 3 - தமிழகத்தில் மாற்றுத்திறனாளி கள் உள்ளிட்ட உதவித்தொகை பெறுவோருக்கு ரூ. 2000 சிறப்பு நிதியாக வழங்கியுள்ள தமிழக அரசின் நடவடிக்கையைத் தமிழ் நாடு அனைத்துவகை மாற்றுத திறனாளிகள் மற்றும் பாதுகாப் போர் உரிமைகளுக்கான சங்கம் (TARATDAC) வரவேற்றுள்ளது. அதேசமயம், ஏற்கனவே அளித்த வாக்குறுதியின்படி மே மாதமே மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் &nbsp;சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாகச் சங்கத்தின் மாநிலத் தலைவர் வில்சன் மற்றும் மாநிலப் பொதுச் செயலாளர் பா. &nbsp;ஜான்சிராணி ஆகியோர் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: போராட்டப் பின்னணியும் அமைச்சர் பேச்சுவார்த்தையும் தமிழ்நாட்டில் தற்போது வருவாய்த் துறை மூலம் 5,92,000 பேருக்கு &nbsp;ரூ. 1,500 வீதமும், மாற்றுத்திறனாளி கள் நலத்துறை மூலம் 2,58,000 பேருக்கு ரூ. 2,000 வீதமும் மாதாந் திர உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைய வாழ்வா தாரச் சூழலில் இந்தத் தொகை போதுமானதாக இல்லை என்ப தால், இதனைத் தலா ரூ. 6,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் &nbsp;என்று வலியுறுத்தி கடந்த இரண்டு &nbsp;ஆண்டுகளாகத் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளி கள் சங்கம் சார்பில் பல்வேறு போ ராட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, கடந்த பிப்ரவரி மாதம் மாநில அளவில் ஆறு நாட்கள் தொடர் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்து, பிப்ரவரி 18 அன்று முதல மைச்சரின் உத்தரவின் பேரில் சமூக &nbsp;நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, &ldquo;புதிய அரசு பதவியேற்றவுடன் வரும் மே மாதமே மாற்றுத்திற னாளிகளுக்கான உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும்&rdquo; என முதல மைச்சர் உறுதியளித்ததாக அமைச் சர் தெரிவித்தார். இதனை ஏற்று மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. சிறப்பு நிதிக்கு வரவேற்பு தற்போது மாற்றுத்திறனாளி கள், முதியோர், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் உள்ளிட்ட உதவித்தொகை பெறுவோரின் வங்கிக் கணக்கிற்கு தலா ரூ. &nbsp;2,000 சிறப்பு நிதியாக வழங்கப்பட்டு உள்ளதாகத் தமிழக அரசு அறி வித்துள்ளது. அரசின் இந்தச் சிறப்பு நிதி வழங்கும் நடவடிக்கையை மாற்றுத்திறனாளிகள் சங்கம் மனதார வரவேற்கிறது. உதவித்தொகை உயர்வுக்கான கோரிக்கை சிறப்பு நிதியை வரவேற்கும் அதே வேளையில், பிப்ரவரி 18 &nbsp;அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை யின் போது அளித்த வாக்குறு தியை அரசு நிறைவேற்ற வேண்டும். &nbsp;மே மாதமே மாற்றுத்திறனாளி களுக்கான மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க முத லமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். &nbsp;இவ்வாறு அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.